விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

அறிவிப்பு


—-

விளக்கு நிறுவனத்தின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது கவிஞர்

ஞானக் கூத்தன் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். விளக்கு இலக்கிய

விருது நடுவர்களான திருவாளர் பெருமாள் முருகன், எஸ். ஆல்பர்ட், சி. மோகன் ஆகியோரின் ஒருமித்த

பரிந்துரையின் பேரில் கவிஞர் ஞானக் கூத்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியக் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இயங்கி வருபவர். தமிழ்க் கவிதைப் போக்கின் வாய்க்கால் வரப்புகள் அமைத்த இலக்கியர்களில் தனித்த சாதனையாளராகக் கவிஞர் அறியப் படுகிறார். கவிதை, விமர்சனம், பத்திரிகை எனப் பல துறைகளிலும் ஆழமான தாக்கங்களைக் கவிஞர் பதிவு செய்துள்ளார். தமிழ், சமஸ்கிருத இலக்கிய மரபுப் புலமையின் பின்னணியோடு புதுக்கவிதைகளைக் கண்ட படைப்பாளர்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் உயிரோட்டமாகக் கிடக்கும் படைப்பாளிகளையும் படைப்புகளையும் பரவலாக அறியச்செய்யும் விளக்கு இலக்கிய நிறுவனத்தின் நோக்குக்கு மிக உகந்ததாக அமைகிறது இந்தத் தெரிவு.

நடுவர்கள் பெருமாள் முருகன், சி. மோகன், எஸ். ஆல்பர்ட் ஆகியோர்க்கு விளக்கு நன்றி தெரிவிக்கிறது. விளக்கு நிறுவனத்தின் இந்தியத் தொடர்பாளரன திரு வெளி ரங்கராஜன் அவர்களது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.

கவிஞருக்குப் பரிசளிப்பும் பாராட்டு விழாவும் திருவல்லிகேணி பாரதி இல்லத்தில் டிசம்பர் 31,2005 சென்னையில் நடக்கவுள்ளன.

நா. கோபால்சாமி

விளக்கு அமைப்பாளர்

மேரிலாந்து

டிசம்பர் 14, 2005

viLakku@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு