விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

டிஜிகே


1972 கணையாழி கடைசி பக்கத்திலேயே சுஜாதா தனக்கு வரும் தாக்குதல் கடிதங்கள் பற்றிக் குறிப்பிடுகிட்டுள்ளார்.

பொதுவாக விற்பனை எண்ணிக்கை வளையத்திற்குள் மாட்டாத சிறு பத்திரிக்கைகள் கருத்துக்களின் ஞாயங்கள் தாண்டி எதற்கும் கவலைப்பட்டதில்லை.

அதிலும், எழுத்தாளர்களின் ஒருபக்கம் சாயாமல் இருபக்க கருத்துக்களையும் சிறுபத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

அது போல் சில இணையப்பத்திரிக்கைகளும் தான்.

இணையப்பத்திரிக்கைகளிலும் அத்தகையத் தரத்துடன் சில பத்திரிக்கைகள் உள்ளன.

இந்தமாதிரி வட்டங்கள் போட்டு அதற்குள் கில்லி தாண்டச் சொல்லாத பத்திரிக்கைகளில் எழுதும் போது, நமக்கு சமுதாயத்திற்கான நல் கருத்துக்களை எழுத முடிகிறது.

இப்படித்தான் நான் திரை விமர்சனம் எழுதும் போது ஒரு உண்மையான மனநிலையில் ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது.

எனது ‘தவமாய் தவமிருந்து ‘ திரைப்படம் பற்றிய விமர்சனத்திற்கு நல்விதமாக வந்த கடிதங்களை புறந்தள்ளி விட்டு, ரொம்பவும் விசனப்பட்டு அமெரிக்காவிலேயே பள்ளிகளில் பேசக்கூடாத Four Letter Words என்று குறிப்பிடப்படும் வார்த்தை கொண்டு தனது மன உணர்வுளை ஒருவர் எழுதியிருந்தார்.

அந்தப்படம் உன்னதபடம், சமூக பொறுப்புள்ள இயக்குனர், அது இது என்றும்… எழுதிவிட்டு தான் இன்னும் படம் பார்க்கவில்லை என்றும் எழுதியிருந்தார் அவர். தனது பின்னோட்டத்தை திண்ணைக்கு தெரியப்படுத்துவேனா என்றும் கேட்டிருந்தார்.

நான் அவருக்கு ஒரு நாகரீக பதிலுடன், திண்ணைக்கு எழுதினால் அவர்கள் நிச்சயம் பிரசுரிப்பார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

திண்ணையில் நான் கண்ட விசேஷமே இது தான். இருபக்க கருத்துக்களையும் பிரசுரிப்பார்கள்.

இன்னொரு நாகரீக கடிதம் நமது ஸ்ரீகாந்த் மீனாக்ஷியிடம் இருந்து. ‘என்ன ஓய்…. விகடனில் 53மார்க் கொடுத்திருக்கான்.. நீங்கள் போட்டு தாக்கியிருக்கீங்க…. ‘ என்று.

நல்லது மீனாக்ஷி.. உங்கள் கேளிவியை மதிக்கிறேன்..

இந்த மார்க் போடும் சமாச்சாரம்….

உலகில் ஆஸ்கார், கேன்ஸ், சன் டான்ஸ்.. என்று எந்த திரை விழாப் போட்டியிலும் இந்த மார்க் போடும் சமாச்சாரம் இல்லை… அவ்வளவு ஏன், ‘மார்க் ‘ போட்டு தரம் பிரித்தலே தவரான அணுகுமுறை என பள்ளிகளில் ‘கிரேட் ‘ பண்ணும் முறையை அனைவரும் பரிந்துரைக்கின்றனர்.

அது ஒரு வணிக ஆர்வம் ஏற்படுத்தும் முறை. Thats all Sri..

என்ன தமிழ் மொழி தமிழ்ப் பற்று பற்றி நாம் வாய் கிழிய பேசினாலும் ஒரு முழு தரமான கலைப்படம் நாம் இதுவரைக் கண்டதில்லை.

நல்ல இலக்கியம், நல்ல திரைப்படம் என்று தவிக்கும் நாம், ஒரு நல்லபடம் தமிழில் வருவதற்கு காத்திருக்கும் நாம், அது மாதிரி நல்லபடத்திற்கான அடையாள பாராட்டுக்களை பத்திரமாக வைத்திருந்து அதன் மதிப்புக் கூட்டு நல்திரைப்படம் வரும் போது மகுடமாய் சூட வேண்டும்.

அதனால் தான் இடைப்பட்ட படஙகள் வரும் போது நாம் அவசரப்பட்டு விடக்கூடாது.

சேரன் மிக அறிந்த திரை ஒளிப்பதிவாளர் ‘எம்.வி.பன்னீர்செல்வம் ‘ த்தை ரயிலடியில் சந்தித்தேன்.

த.த. பற்றி பேச்சு வந்தது. அவர் சொன்னார்…

பன்னீர்: ‘அது தான் தினமும் டிவி-யில் பார்க்கிறோமே.. அப்புறம் என்ன… ?… ‘

நான்: ‘என்ன பன்னீர்…. சேரன் மேல் கோபமா… ? ‘

பன்னீர்: ‘இந்த பாருங்க.. ஆட்டோகிராப் பிரிவியூ பார்த்தவுடன் .. வீடுதேடி போய் சேரனிடம் சொன்னேன்.. ‘ யோவ் கொன்னுட்ட… தமிழ் சினிமா தாண்டி இந்தப்படம் வாழும்…. ‘என்று. அந்த மாதிரி படம் எடுத்த சேரன் ஏன் டிவி சீரியல் மாதிரி எடுத்தாரோ…. தெரியலை… ‘

அவர்மட்டுமல்ல… ஆட்டோகிராப் படத்தில் பணியாற்றிய நாலு கேமிராமேனிகளில் ஒருவருக்கும் இதே கருத்துதான்…

நான் ஆட்டோகிராப் தரமான படம் எனத்தெரிந்து, $பல செலவு பண்ணி சான் ஓசேயில் அப்படம் திரையிட்டவன்.

ஒரு படத்தின் விமர்சனம் பிடிக்கவில்லை எனில் அம்மனிதரைப் பற்றி ஜாதி.. கீதீ.. என்று எழுதுவது ஏனோ.. இது ஒரு அழுகிய மனநிலையின் வெளிப்பாடும்.

எனக்கு படைப்பாளிகளை விட படைப்பே பிரதானம்….

என் கருத்துக்கள்….

1.உலகத்தில் எந்த நல் அல்லது மட்டமான திரைப்படங்களிலும் வசனங்களைக் கதாபாத்திரங்கள் பேசும் போது, சினிமா டிஸ்கஷன் வார்த்தைகளில் இருக்காது….

த.தவில் வருவது போல், ‘ இந்த ஷிட்சுவேஷனில் நீ இப்படி சொன்னது…. ‘ என்ற வசன முறைகள்….

2. யதார்த்த சினிமாவில் வர்த்தக சினிமா மாதிரியான காதல் காட்சிகள்….

3. பதிவு சினிமாவிற்கும் தன் கருத்து பரிமாறும் சினிமாவிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை, ‘ அப்பு டிரையாலஜி… ‘ போன்ற சத்யஜித்ரே படங்கள் தொடங்கி இன்றைய ‘சலாம் பாம்பே… ‘ வரை நல்படங்கள் உள்ளன.

புலம்பல்கள் இலக்கியமாகுமா… ? இது நாம் முன்னிறுத்த வேண்டிய கேள்வி…

அம்மாவைப் பற்றி ஓராயிரம் புலம்பல் திரைப்பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் நாம் எழுதியிருந்தாலும், ஒரு ‘தாய் ‘ நாவல் நாம் படைத்ததில்லை.

பொதுவாகவே த.த ஒரு புலம்பல் படம் என்பது அனைவரும் அறிந்ததே…

என்ன தமிழ் மொழி தமிழ்ப் பற்று பற்றி நாம் வாய் கிழிய பேசினாலும் ஒரு முழு தரமான கலைப்படம் நாம் இதுவரைக் கண்டதில்லை.

நாம் என்ன கூட்டம்….

வீட்டில் காலையில் வேகவேகமாக இட்லியை பிட்டு வாயில் போட்டு… தெருவில் ஓடி ஓடி பஸ் பிடித்து. விரைவாக சிக்னல்களை மதியாமல் தாண்டி, அலுவலகம் சென்று அக்கடா என்று அரட்டையடிக்கும் கூட்டம்…

இது நேற்றைய வரை அதிகமாக இருந்தது..

ஆனால், கால் சென் டரிலும், கம்யூட்டட கம்பெனியிலும் இரவுபகல் பாராமல் உழைக்கும் புது கூட்டம் வந்துள்ளது.

அத மாதிரி இளைஞர் கூட்டத்திலிருது ஒருவர் இந்த வர்த்தக சினிமாவின் இடையிலும் ஒரு இயல்பான, தரமான , யதார்த்தமான படம் தந்தார். ‘காதல் ‘ திரைப்படம்.

அதுபற்றி பக்கம் பக்கமாய் நான் இதே திண்ணையில் ஆஸ்கார் தரப்படம் என்று எழுதியுள்ளேன்…

ஆனால், ஒரு டிவி சீரியல் தரத்தை புளோஅப் பண்ணி திரையில் போடுவதால் மட்டும் அது புதிய புதினமாகி விடாது.

இந்தியா டு டே தமிழில் வந்த த.த. விம்ர்சனம் மட்டுமே நான் கொண்ட கருத்துப் போல் இருந்தது.

—-

நம்மைப் பற்றி நமக்கே தெரியும்.. ரோடில் அரக்கப்பரக்க ஓடும் , வண்டியோட்டும் நாம், ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட வாங்கியதில்லை என்று. அது மாதிரி தான் திரையுலகிலும் ஆஸ்காருக்கு ( வெளிநாட்டுப் படங்கள் பகுதி ) பரிந்துரைக்கும் படி சமீபகாலத்தில் ‘காதல் ‘ படம் தவிர எதுவும் வந்ததில்லை….

இம்முறை செல்லும் அமோல்பலாகரின் ‘பஹலி ‘ படத்தை விட ‘காதல் ‘ படம் ஒரு மட்டு உசத்தி தான். எங்கே கோட்டை விட்டோம்… யோசிப்போம்….

—-

இன்னொரு விஷயம். சிவகாசி போன்ற கலகல படங்களிலேயே ஒரு சிரத்தையுடன் திரைக்கதை உழைப்பு இருக்கும் போது, கலைப்படம் எனும் பகுப்புடன் வரும் த.த போன்ற படங்களை நாம் மிக சிரத்தையுடன் தான் விமர்சிக்க வேண்டியுள்ளது.

அதுவும் த.த ஒரு ஆவணப்படம் என்றெல்லாம் பேசுவதால் தான் நாம் சில தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம்.

அதுவும் இது ஒரு ஆவணப்படம் என்று வேறு ஒருவர் சொல்கிறார்.

படத்தில் , ஒரு காட்சியில் ராஜீவ் மரணம் ரேடியோ பெட்டியில் செய்தியாக வருகிறது. அதில் செய்தி அறிவிப்பாளர் , முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நேற்று மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்ப்பட்டுள்ளார் எனும் வார்த்தைகள் அடங்கி செய்தி வாசிக்கிறார். நாம் அனைவரும் அறிந்தவரை, ராஜீவ் காந்தி ‘மனித வெடிகுண்டால் ‘ கொல்லப்பட்டார் எனும் சொற்றொடருடன் வானொலி, டிவி செய்திகளில் அடுத்த நாளே வரவில்லை.

அந்த வார்த்தை பிரயோகம் வர இரு மூன்று நாட்கள் ஆயின…

காட்சியின் கலைப்பட நம்பக தோணல்தன்மைதான் இந்தப் படத்தில் இருக்கிறது.

இது கலைப்படமல்ல.

60களின் இறுதியில் வந்த சோகப் பட வரிசையே..

துலாபாரம் போன்ற வகை சார்ந்தது இது.

—-

வர்த்தகப் ஜாலி படங்களுக்கு ஹெல்மட் கழட்டுவது போல் மூளையை கழட்டி உள் செல்தல் போல், நல்படங்களுக்கு இதயத்துடன் மட்டுமல்ல மூளையுடனும் சென்றாகி விட வேண்டியது அவசியம்.

அப்பா தியாகம் பற்றி முன் வந்த வர்த்தக படம் ‘எங்க ஊர் ராஜா ‘- படத்திற்கும் , த.த-விற்கும் ஒரு படைப்பு வித்யாசம் இருப்பதனால் தான் நான் சிரத்தையெடுத்து எழுதினேன்.

திரு.எஸ்.ராமகிருஷ்ணைன் பெரிய தடி புத்தகத்தை விடிய விடிய படித்து , அவருக்கு ஃபோன் செய்தேன்… அழுத விழிகளும், விம்மிய நெஞ்சுமாய் அவரிடம் பேசமுடியாமல் ஒரிரு வரிகளிடன் ஃபோனை வைத்தேன். அந்த வழிந்தோடிய நீரில் ஒரு துளி கூட த.த பார்க்கும் போது எழவில்லை. அதனால் அவரின் ஜீ.வியில் வந்த த.த பற்றிய கருத்து என்னை ஒன்றும் செய்யவில்லை.. அது.. அவரது கருத்து என்பதை விட துடிப்பு.. நல் சினிமா வர இந்தப் படம் வெற்றியாவது என்ற பரிதவிப்பு…

ஆனால், த.த. பல அந்தக்கால சோகப்படங்கள் வருவதற்கு வேண்டுமானால் பாதை வகுக்குமே தவிர நல் இலக்கியப் படங்கள் வர தடமாகாது…

அப்படி ஒரு படம் வரும் வரை என் பாராட்டுப் பத்திரம் .. பத்திரமாய் என்னிடமிருக்கும்…

அம்மாதிரி படம் ‘சேரன் ‘ எடுத்தாலும் அவருக்கும் கிடைக்கும்…

டிஜிகே

tgkgovindarajan@gmail.com

Series Navigation

டி ஜி கே

டி ஜி கே