வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

வெங்கட்


யூன் 4, சனிக்கிழமை

ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)

தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்டோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருது

பெற பத்மநாப ஐயர் கனடா வருகின்ற சமயம் மொழி பெயர்ப்புப் பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. தமிழ்

படைப்பாளிகளின் படைப்புகள் இந்தப் பட்டறையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இத்தகைய பட்டறைகள்

இலண்டனில் பல தடவைகள் நடைபெற்றுள்ள போதும், கனடாவில் முதல்தடவையாக நடைபெறுகின்றது என்பது

குறிப்பிடத்தக்கது.

பட்டறை நிகழும் அதே தினம், அதே இடத்தில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பா.அ ஜெயகரனின், “என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள்” நாடகங்களின் தொகுப்பும்,

மணிவேலுப்பிள்ளையின் “மொழியினால் சமைந்த வீடு” கட்டுரைகளின் தொகுப்பும் வெளியிடப்படும்.

இப்புத்தகக் கண்காட்சியில் நூறு டொலருக்கு புத்தகங்கள் வாங்குவோருக்கு பதினைந்து டொலர் பெறுமதியான

குறித்த புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பத்மநாப ஐயருக்கு வழங்கப்படும் இயல் விருது, ரொறன்டோ பல்கலைக்கழக, Seeley Hall, Trinity

College-ல் யூன் 12 ஞாயிற்றுக் கிழமை, ஏழு மணிக்கு வழங்கப்படுகின்றது.

—-

vvenkat@sympatico.ca

Series Navigation

வெங்கட்

வெங்கட்