வருத்தம்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ஆதர்ஷ் ராவ்


என்னைப் பிடிக்காததற்கு காரணமில்லை உன்னிடம்
பிடிப்பதற்கும் ஏதுமில்லை எனக்கூறியே சென்றாய்

என்னை நினைக்காத உன்னை மறக்க
வெகுகாலம் பிடித்துவிட்டது எனக்கு

நண்பர்கள் உறவினர் தேறுதலோடு, எனக்கும்
சுமதிக்கும் திருமணமாகி ஆயிற்று ஆறாண்டு

மறக்க முடியாதென நினைத்த உன்னை
மறக்காமல் இருப்பது சிரமம் ஆனது

சட்டென உன்னை அடையாளம் புரியவில்லை
மாறாத உன் விடைத்த நாசியால் பொறிதட்டியது

நீ விரும்பியவன் அமையாததால் தனித்திருக்கிறாய்
என்றதும் வருத்ததையும்மீறி – புன்னகை பிறந்தது.

itsaadharsh@hotmail.com

Series Navigation