வயிறு

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

செல்வராஜ் ஜெகதீசன்இரவு கண்விழிக்கும்
இளங்காலைப் பொழுதொன்றில்
ஒல்லி தேகத்தின்
ஒட்டிய வயிறோடு
சாலையோரக் கால்வாயை
சுத்தப்படுத்திக்கொண்டிருந்த
சிலரோடு
கார்களைக் கழுவிக்கொண்டிருந்த
ஒருவனையும்
பார்த்தபடி
போய்க்கொண்டிருந்தேன் – அந்த
பூங்காவை சுற்றி
பெருத்த வயிற்றின்
சுற்றளவில் – ஒரு
இன்ச்சாவது குறைத்துவிடும்
உறுதியோடு.

o

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி