வகாபிய விஞ்ஞான நாக்கு

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

சூபிமுகமது


திருகுரான் கூறும் விஞ்ஞானம் குறித்த விவாதங்களும் முரண்களும் ஏராளம் சுட்டிக் காட்டப்பட வாய்ப்புள்ளது. வரலாற்றுவளர்ச்சியில் கால கட்ட அடிப்படையில் திருக்குரானை அறிந்து கொள்வதற்கு மாற்றாக உலகின் அனைத்துகோட்பாடுகளையும் அறவியல் மற்றும் அறிவியல் உட்பட தன்னகத்தே கொண்டுள்ளது.இவை அல்லாவின் வார்த்தைகள்,மலையாய் நிமிர்ந்து நிற்கும் இதனை புழுக்கள் தகர்க்க முடியுமா என வகாபி குழுமங்கள் தொடர்ந்து கட்டபொம்மன் வீர வசனம் பேசிக் கொண்டிருப்பது திருகுரானையே கேலி செய்வதாகும்.

எனது தப்புக்கணக்கு திண்ணைக்கடிதத்தில் குறிப்பிட்ட ஒன்பது விவாதங்களுக்கும் அறிவுபூர்வமான எந்தவித பதிலையும் எந்த வகாபிய விஞ்ஞான நாக்காலும் சொல்ல முடியவில்லை. இந்த லட்சணத்தில் மவ்லிதுகளின் கவிதைமொழியை புரிந்து கொள்ள திராணியற்று குற்றம் சாட்டமுயல்கிறார்கள். அல்லாவின் வார்த்தைகளிலும், ஹதீஸ்களிலும் நூற்றுக்கணக்கில் இந்தவகை விவாதப்புள்ளிகளை உருவாக்கலாம்.

வகாபிய அறிவுஜீவிகள் மூட்டை முடிச்சைகட்டிக்கொண்டு ஏதாவதொரு தர்காவில் பிரம்மையும் புலப்பமும் தீர போய் உட்காரவேண்டியதுதான்பாக்கி. கூடவே நல்ல தண்ணி ஓதி மூஞ்சியிலடிச்சு குடிக்க வைக்க வேணும்.நாகூரு தர்காவில போய் ஏந்திரம் ஒண்ணு எழுதிவாங்கி பச்சைபூனை ஒன்றின் கழுத்தில் நாற்பதுநாள் தொங்கவிட்டு பிறகதை வகாபிகளுக்கு கட்டவேண்டும்.காவிப்பூனையைப் பற்றி அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கும் வகாபி குழுமங்களுக்கு பிரமை தெளிய இதுவே சிறந்த வழி.

ஒரு படைப்பின் உருவாக்கம் என்பது பைத்தியநிலையின் விளிம்பிலிருந்து உருவாவது என்பதை சமகால சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நபிமுகமதுவைப் பார்த்து கூறுவதாக அமைந்த திருமறை வசனங்கள் நீர் பைத்தியக்காரரல்ல,சூனியக்காரரல்ல,கவிஞரல்ல என்பது அன்றைய வெகுஜன அரபுமக்களின் கருத்தியல் ஒப்புதலுக்காக கூறப்பட்ட வசனங்களாகும்.மற்றபடி இவ் வார்த்தைகள் யதார்த்தத்தின் மறுப்பு சொல்களாகவே உள்ளன.பைத்தியநிலைக்கு அருகாமை என்பது மோசமானதொன்றும் அல்ல. அது நனவிலி மனதோடும் சம்பந்தப்பட்டது.பிரமைகள் உருவெளிதோற்றங்களையும் உள்ளடக்கியது.
ஹெச்.ஜி.ரசூல் தனது கட்டுரையில் குறிப்பிட்ட நபிமுகமதுவுக்கு மந்திரவாதம் செய்து கிணற்றின் அடியில் ஒளித்துவைத்த குறிப்பை தெரிவிப்பதை இங்கு துணைக்கு எடுத்து கொள்ளலாம்.

எனவே புனைவுமொழியை முன்னிலைப்படுத்தும் கவிதை,
உளவியல்ரீதியாக சிதைவை அல்லது மீட்பை உருவாக்கும் சூனிய ம்
நனவிலி பைத்தியவிளிம்பு நிலையின் படைப்பு உருவாக்கம்
அனைத்தையும் நபிமுகமது வழியாக திருகுரானில் உள்ளடங்கியிருப்பதை எளிதில் நிராகரித்துவிடமுடியாது.

அல்லாவின் புனைவுமொழி கதையாடல் 10

அத்தியாயம் 21 அல் அன்பியா வசனம் 58- 70

இபுராகீம்நபியை எரித்துவிட ஆணையிடப்பட்டது. நெருப்புக் குண்டத்தில் வீசி எறியப்பட்டார். அல்லா நெருப்பை குளுமையாகவும் சாந்தமாகவும் மாற்றி இபுராகீம் நபியின் உடலையும் உயிரையும் காப்பாற்றினான்.

அ)எரிக்கும் நெருப்பு குளுமையாக மாறி இபுராகீம் நபியை எரிக்காமல் விட்டது எப்படி…?

ஆ)நெருப்பு எந்த வகை மந்திரத்தன்மையால் குளுமையாக உருவாகியது…

அல்லாவின் யதார்த்த மொழி உரையாடல்-!!

அத்தியாயம்67 அல்முல்க் வசனம் 5
அருகிருக்கும் வானத்தை மாபெரும் விளக்குகளால் அலங்கரித்திருக்கிறோம் மேலும் அவற்றை நாம் -ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவிகளாக ஆக்கியுள்ளோம்.

அ)நட்சத்திரங்கள் எப்படி -ஷைத்தான்களை விரட்டும் கருவிகளாக மாறின…?

ஆ)நெருப்பால் படைக்கப்பட்ட -ஷைத்தானை எப்படி நட்சத்திரவிளக்குகள் துரத்தின…?

இ)நேற்று இன்று நாளையென முக்காலத்திற்கும் பொருந்திவரும் விஞ்ஞான கோட்பாடென்று இதை சொல்லமுடியுமா…

வகாபிகளின் விஞ்ஞான நாக்கு எழும்பட்டும்….

Series Navigation