This entry is in the series 20110522_Issue

ப மதியழகன்


நேற்று பார்த்த முகங்களில்
ஒன்று கூட
நினைவடுக்குகளில் தங்கவில்லை
தோற்றப் பொலிவுக்கு
எத்தனை மதிப்பு
இவ்வுலகில்
எச்சில் இலை பொறுக்கும்
பிச்சைக்காரி்க்குத் தான்
தெரியும்
பசியின் விஸ்வரூபம்
குறளி வித்தைக்காரனிடம்
பணத்தை பறிகொடுத்து
நிற்பார்கள்
இரத்தம் கக்குவதற்குப்
பயந்து
சில அப்பாவிகள்
வன்முறையை எதிர்க்கும்
திரைப்படத்தில்
அரிவாள் தான்
கதாநாயகன்
பறவைகளின் எச்சத்தில் தான்
அந்தக் காடுகளில்
விருட்சங்கள் முளைத்தன
உடலில் நிழல் போலல்லாமல்
மனதின் நிழல்
மண்ணில் விழுந்தால்
நீங்கள் என்ன விலங்கென்ற
புதிர் அவிழ்ந்துவிடும்.

Series Navigation