This entry is in the series 20100801_Issue

ஹெச்.ஜி.ரசூல்



யாரோ ஒரு பெண்தவறவிட்ட யோனி
என்னிடமிருந்தது.
வீதியில் செல்கையில்
தற்செயலாய் கிடைத்ததென்றாலும்
அது என்னை
துன்புறுத்திக் கொண்டிருந்தது.
இரவும் பகலும் தொடர்ந்து
அந்த தெருவழியே செல்கிறேன்.
ஒருவரும் அதைத் தேடியதாய் தெரியவில்லை.
எனது ரகசிய அறையிலிருந்து
அது எப்படி பறந்துவந்ததென்று
எனக்குத் தெரியாது.
நள்ளிரவொன்றில்
அயர்ச்சியுடன் தூங்கிக் கொண்டிருந்த போது
என்னையது மெல்ல தட்டி எழுப்பியது.
அதன் இதழ் அரும்பில்
இரண்டு சொட்டு கண்ணீர் தங்கியிருந்தது.
அது தேம்பித் தேம்பி சொன்ன வார்த்தைகளை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆறுதல் சொல்வதற்கு என்னிடம்
எந்த வார்த்தையும் மிச்சமிருக்கவில்லை.
அன்றைய இரவு துக்ககரமானதுதான்.
தூக்கத்தில் கேட்ட வீறிட்ட சத்தத்தில்
விழிப்புற்ற நான்
தோடத்துவாசல்படியை கடந்து சென்றேன்.
தற்கொலை செய்துகொள்ள
யோனி கிணற்றில் சாடியிருந்தது.
நானும் கிணற்றில் குதித்தேன்

Series Navigation