This entry is in the series 20070913_Issue

புதுவை பாரதிசோமசுந்தரம்



யாருக்கு வாய்க்கும்… ? இல்லை
எத்தனை பேருக்கு வாய்க்கும்…?

அரவணைப்பினில் அன்னை
வழிநடத்தலில் தந்தை
பயிற்றுவித்தலில் ஆசான்
தட்டிக்கொடுத்தலில் அண்ணன்
தோள் கொடுப்பதில் தோழன்

எத்தனை அவதாரங்கள்தான் உனக்கு…?

அன்பாய் பாசமாய்
நட்பாய் நேசமாய்
தோள் சாய ஏதுவான தோழனாய்
பகிர்தலில் உற்ற நண்பனாய், உயிர் காதலனாய்…

இன்னும் எத்தனை அவதாரங்களோ உனக்கு…?

பிரச்சனையின் தாக்கத்தால்
மடியில் முகம் புதைத்து அழ
முடியைக் கோதி கண்ணீர் துடைத்து
“அருமையாய் நான் இருக்க,
அடுத்தவர் சொல்லுக்கு ஏன் வருத்தம்?”
கேட்ட உனக்கு கோடி நன்றி!!

எதையும் மறைத்ததில்லை- மறைத்து எதுவும் பழக்கமில்லை…!!

பகிர்தலில் புரிதலில் மென்மை…
பார்வையில் சொல்லினில் நட்பு…

வருடம் இருபதானாலும் வருடும் பார்வை!!

யாருக்கு வாய்க்கும்… எத்தனை பேருக்கு வாய்க்கும்…
கணவனே நண்பனாய்… உற்ற உயிர் தோழனாய்…

–புதுவை பாரதிசோமசுந்தரம்


shriramba@yahoo.co.in

Series Navigation