This entry is in the series 20020610_Issue

ராஜி


திங்கட்கிழமையில், திருவடி தொழுவேன்,
பால், பழம், புஷ்பம், தேன்;
எல்லாம் உனக்குப் பணிவுடன் தருவேன்!

வலை வழியே நீ வருவாய்,
புலமை, அறிவு, எனக்குத் தருவாய்!
இசை, மதம், பாஷையில் கல்வி,
படித்து ஆவேன் நான் அறிவாளி!

ஒசை இன்றி மெளனமாய்க் குருபெருமானே!
குறிப்பறிந்து படிப்புத் தரும் ஆசானே!
இணைபிரியாத தோழன், வலையில் இணைந்த புலவர்;
பிழைதிருத்தி, அன்போடு, வழிகாட்டும் நல்லவர்!

நன்றி எந்த விதத்தில் காட்டுவேன் ?
உன்னைப் பார்க்காமலே எப்படிச் சொல்வேன் ?
தஇிணத்தில், தருகிறாய் உன் பிரகாச புன்னகை-
இங்கு, அறியாத நண்பர் வைத்துள்ளார் உன்மேல் நம்பிக்கை!!

tpsmani@hotmail.com

Series Navigation