மெளனமாய் நான்

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

புஷ்பா கிறிஸ்ாி


காற்று மெதுவாக பேசியது
தென்றலாய் சிாித்தது

மழை தட்டுத் தடுமாறியது
சின்னத் துளிகளாய் சிதறியது

வானத்து மேகங்கள் ஊர்வலம் போயின
வண்ணக் கலவை வர்ணங்களோடு

பச்சைப் புல்வெளி பசுமையாய் பேசியது
துளித் துளியாய் பனி படர்ந்திருந்தது

சின்ன மெழுகுதிாிச் சுவாலையில்
சிாிப்புத் தொிந்தது
சிவந்த நாக்குடன் நெருப்பும் எாிந்தது

பாய்ந்து வந்த நதியும் பஞ்சம் தீர
பசுமை கொண்டு வந்து சிாித்தது

சின்ன நிலவொன்று சிங்காரமாய்
வண்ண நிலவாகி வளர்ந்து சிாித்தது

மலர்ந்த மலரும் தன் பங்குக்கு
இளைய சிாிப்புச் சிாித்தது

ஆனால் நான் மட்டும் மெளனமாய்
அமைதியாய், தனிமையாய், தவமிருக்கிறேன்

என் வாழ்வின் வசந்தங்கள்
முடியும் முன்னர்
எதயோ தேடி நான் மெளனமாய்

***
pushpa_christy@yahoo.com

Series Navigation