முரண்பாடுகளின் அறுவடை

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

கே.எஸ்.சுதாகர்


படித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச்சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம் ஒன்று.

வெளிச்சத்திலிருந்து இருளிற்குள் போகின்ற பயணம். பயம் கலந்த பயணம்.

அசைவில்லை. பேச்சில்லை. உணவில்லை. நீரில்லை. செத்த பிணத்தை இருத்திக் கொண்டு போவது போலப் பிரயாணம் இருந்தது.

இரவு. நண்பனின் அறையில் – வெறும்தரையில் படுக்கை. சிவா ‘எம்பிலிப்பிட்டியா ‘வில் இருந்தான்.

‘சிவா! எவ்வளவு காலம் இஞ்சை வேலை செய்கிறாய் ? நல்ல அறை இல்லை ‘ – நான் அதிசயப் பட்டேன்.

‘தமிழனுக்கு எதுவுமே இல்லை ‘ – அவன் முனகினான். நிறையவே ‘பட்டு ‘விட்டான் அவன். கிணத்தின் அடித்தளத்தில் இருந்து ஒலிப்பது போல் இருந்தது அவன் குரல்.

அதிகாலை கொடும்பனி. பிற்போக்கான கிராமம். எட்டு மைல் ‘தட்டி ‘வான் பயணம். தட்டிவானுக்குள் ஒரு கம்பி ஓடிற்று. அதன் மீது எல்லாரது கைகளும் தொங்கியபடி. மிர்ந்தால், மேலே வானம் ஓடிற்று. குனிந்தால், கீழே பூமி ஓடிற்று. காணக் கண் கோடி வேண்டும். புழுதியைக் கிழப்பி, தொழிற்சாலை எட்டும் வரை – அதே ஓட்டம்.

சிவாவின் நண்பர் ஒருவர் – பெயர் தெரியவில்லை. நான் இருக்கும் லையில் கேட்கவுமில்லை. என்னை அழைத்துச் சென்றார். தொழிற்சாலை வாசலில் ‘செக்கியூரிட்டி ‘ ஆபிசர் மீசை, கன்னக்கிராதி போன்ற வில்லங்கங்களுடன்.

‘இவர் பக்டரிக்கு புதிசாக வேலைக்கு…. சிங்களம் அவ்வளவு நல்லா தெரியாது ‘

முத்திரை குத்தப்பட்டது இப்படித்தான். வந்த வேதாளம், அப்படித்தான் வழியைக் காட்டிற்று.

அப்புறம் செ.ஆ, ஜெனரல் மனேஜருக்கு; ஜெ.ம, பக்டரி மனேஜருக்கு; ப.ம, žஃப் இஞ்சினியருக்கு; ž.இ, எல்லாரிற்கும் – ‘சிங்களம் அவ்வளவு நல்லாத் தெரியாது! ‘

வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. பின்னர் முழக்கங்கள். தூ!வேஷ முழக்கங்கள். மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்களில் மிகக் கொடூரமான ஆயுதம் – வார்த்தைகள்தான். அந்த ஆயுதம் இனவாதம் என்ற கறையான் புற்றை குதறிக் கிழித்தது.

‘இங்கு ஒரு தமிழரும் இல்லை ‘

‘தாபிக் எண்டொரு முஸ்லீம் இருக்கின்றான். அவனும் தமிழில்தான் சிங்களம் கதைப்பான். கத்தாக் கரண்டுவான் ‘

‘பெர்ணாண்டோ என்றொரு தமிழன். தமிழே தெரியாத தமிழன் ‘

‘ஏன் நீங்களும் பெர்ணாண்டோ மாதிரி – ஒரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்படாது ‘

எனக்கு அப்போதுதான் திருமணம் ச்சயமாகியிருந்தது. அந்த ‘சின்னப்பெண் ‘ என் கண் முன்னே வண்ண வண்ணக் கனவு காட்டினாள்.

வால்டர் என்பவன், தான் ஆறுமாதம் கற்றுக் கொண்டவற்றை தொழிற்சாலை காட்டுகிறேன் என்று சொல்லி – என் காதிற்குள் வாரி இறைத்தான்.

ஸ்ரீம் ரேஃபன் – பொயிலர் – மோட்டர் – ஜெனரேட்டர்.

நேற்றிரவு சாப்பாடு இல்லை. இன்று காலை இல்லை. ற்க முடியவில்லை.

பொயிலர் – மோட்டர் – ஜெனரேட்டர்.

எல்லாரிற்கும் இனிக்கும் தொழிற்சாலை – எனக்கு இனிக்கவில்லை. பதினொரு மணி றெஸ்ற் றூமிற்குள் விடப்பட்டேன். தொழிலாளர்கள் யார் யாரையோ விசாரிப்பது போல என்னை நோட்டம் விட்டனர்.

‘கமால் இன்னுவத ? டொனால்ட் இன்னுவத ? சோறு தின்னுவத ? ‘

‘மட்ட தன்ன நா ‘

ஒருவாறு வந்து சேர்ந்தது தாரக மந்திரம். ‘எனக்குத் தெரியாது ‘ என்ற ஒன்று மாத்திரம்தான் அப்போது எனக்கு சிங்களத்தில் தெரிந்திருந்தது. அதையே எல்லாவற்றிற்கும் எடுத்து விட வேண்டியதாயிற்று.

பின் தாபிக்கும் இரண்டொருவரும் வந்தார்கள்.

‘நீங்கள் இஞ்சை வந்தது ஒருவருக்கும் விருப்பமில்லை. பேசாமல் திரும்பிப் போறதுதான் நல்லது ‘ – அவன் முகத்தில் இறுக்கம். ஏன் இங்கு வந்தேன் என்றது போலாயிற்று.

‘நாங்கள் உங்கடை இடங்களுக்கு வரமுடியாது. நீங்கள் எப்படி இஞ்சை ? அதுவும் ஒரு நுனியில் இருந்து (யாழ்ப்பாணம்) மற்ற நுனிக்கு. என்ன ‘ஜம் ‘ பண் விளையாடுறியளா ? ‘

‘வேலை எண்டு வருவியள். பிறகு ஃபக்டரிக்கே வேலை வைச்சுப் போடுவியள் ‘

‘எனக்கு ஒண்டும் புரியேல்ல ‘

‘குண்டு வைச்சுப் போடுவியள் எண்டு சொல்லுறான் அவன் ‘

‘நீங்கள் எல்லாரையும் அப்படி நினைக்கிறியளா ? ‘

‘ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்! ‘

பொறுமையைக் கடைப்பிடி. மெளனம் கலையாதே. எல்லாவற்றிற்கும் ஆமாம் போடு – என்றது உள்மனம்.

‘இரவிலும் வேலை செய்ய வேண்டி வரும். உங்கள் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது ‘

– எதிர்பார்த்ததுதான்.

‘இந்த இடத்திலை எங்கடை ஆக்களையே எங்கடை ஆக்கள் வெட்டிச் சரிச்சவை. நீர் எம்மாத்திரம் ? ‘

‘தவறு எங்கேயெண்டு நீங்களோ நாங்களோ தீர்மானம் செய்ய முடியாது. ஆனால் உங்கடை எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியுமல்லவா ? ‘

ஒவ்வொன்றும் கனல் துண்டங்கள். மார்பினுள் எரிபந்து. இந்தத் தீ எங்கு இருந்து பரவியது ? நதி மூலம் புரியவில்லை. வாழையடி வாழையாக வரும் பிரச்சினை, ஒரு சுற்றுப் பெருத்துள்ளது. அவ்வளவுந்தான்.

இரண்டொரு நாட்கள் சேர்க்கிட் பங்களாவில் இருக்குமாறு கேட்கப்பட்டேன். அந்ய விருந்தினர்கள் பலர் அங்கே ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். ஒரு சமையல்காரன். இரண்டு மூன்று ‘சிண்கள் ‘.

‘ரீ ‘ ஒன்று வந்தது. களைப்பு, வியர்வை நாற்றம் போக – ஒரு குளிப்பு. கதவை இழுத்து சாத்திவிட்டுப் போர்வையால் இழுத்து மூடிக் கொண்டால், வீட்டு னைவு. ஒருவேளை இங்கே வெட்டிச் சரித்துவிட்டால் ? கரும்பை வெட்டிச் சரிப்பது போல.

தூரத்தே மயில்கள் அகவும் சத்தம். நாய்களின் புலம்பல். அயர்வு வந்து சேர்கையில், கதவு பலமாக தட்டப்பட்டது. நடுங்கிக் கொண்டே திறந்தேன்.

கைகளிலே கிண்ணம் தழும்பி, இரத்தச் சிகப்பு. என்னைத் தழுவி இழுத்துச் சென்றனர்.

செட்டை கழற்றிய நாகங்கள் நடனமாடின. இரண்டு ‘கப் ‘ உள்ளே இறங்க ஒன்றும் ஒன்றும் ஒன்பது. நானாக எடுத்ததும், அவர்கள் தந்ததும் நினைவில்லை. கணக்கில்லை.

தானமாக இருந்தபோது சாதாரணமாக இருந்த செயல்கள் எல்லாம், இப்போ அவர்களுக்கு அயாயமாகப்பட்டது. அறிவின் முனைப்பு என்னிடமும் இல்லை. அப்புறம் ஏதோ ஒன்று, என்னை இழுத்து வந்து படுக்கையில் போட்டது. னைவு பொறி தப்பிப் போயிற்று.

திடுக்கிட்டு விழிக்க – ‘கொளக் ‘ என்று வாந்தியாக இரத்த இழைகள். ‘கரும்புச் சாற்றுக்குள் எதையோ கலந்து போட்டான்கள்! ‘

எங்கும் இருளாக விளக்குகள் இறந்து கிடந்தன. நரம்புகள், எலும்புக் குருத்துகள் நான் முந்தி – நீ முந்தி என சுண்டி இழுத்தன. நெஞ்சகத்தின் இடது புறத்தில் இனம் புரியாத வலி. எழும்ப முடியவில்லை. காற்று தூங்கி விட்டது. மரம், செடி, கொடிகள் கூட தூக்கம். நான் ? எல்லாரும் மயங்கிப் போயிருந்தார்கள். நிலை குத்திய விழிகளுடன் இரவு முழுவதும். களைப்பு அதிகமாயிற்று. கை, கால்கள் வலி கண்டு கொண்டன. அடி மேல் அடி வைத்து ‘ரொயிலற் ‘ போய் வந்தேன்.

காலை எழும்பும் போது ஒன்பது தாண்டி விட்டது. சமையல்காரன் கதவு தட்டி எழுப்ப, உள்ளே நடந்த சூறாவளி துலாம்பரமாகியது. ‘தடால் ‘ என வாசலில் விழுந்து கொண்டேன். கொண்டு வந்த தேநீர், என் மேல் கொட்டி கொப்பளம் போட்டிற்று. தூக்கிப் படுக்கையில் போட்டான். என்னைப் பாத்து கும்பிடு போட வேண்டியவன். படுக்கையில் கொண்டு போய் தொப்பெண்டு போடுகிறானே!

காலமும் விதியும்.

வலிப்பு – தளர்ச்சி – மயக்கம்.

வாய் பேச மறுத்து நடுங்கிற்று. என்ன நடந்தது எனக்கு ? விருந்தாளிகள் மாரீசமாய் மறைந்துவிட்டனர். குசினிக்குள் தேங்காய் துருவும் சத்தம். இரண்டொருவர் கதைக்கும் குரல். மற்றும்படி ஒரே வெறிச்சோட்டம். தனிமை – வெறுமை. வாய் விட்டு அழ முடியவில்லை. ஆணாய் வளர்ந்துவிட்டால் கதறி அழமுடியுமா ? அடக்கு… அடக்கு.

மழை கொட்ட ‘வெதர் ‘ கதகதப்பாகியது. பேயாய் பெய்த மழை தனிமையை ஆழமாக்கியது. அப்போதுதான் ஒரு உண்மை உறைத்தது.

இன்று நான் வேலைக்குப் போகவில்லை. பொழுது புலர்ந்தது. பொழுது போயிற்று. மதியம் ஏதோ சாப்பாடு. உடம்பு தேற மாட்டேனெனச் சுருண்டு கொண்டது. தலையணையை மடித்து தலையை அதற்குள் புகுத்தி விட்டத்தைப் பார்த்தபடி. சமையல்காரனுக்கு சேதி சொல்லி, மனேஜருக்கு தகவல் அனுப்பினேன். நாலு மக்கு வேலை முடிய யாராவது வரலாம். அண்மையில் ஏதோ ஒரு பாட்டுக்குரல் கேட்டது. எழும்ப முடியவில்லை.

பொழுது போயிற்று. பொழுது புலர்ந்தது. அன்றும் வேலைக்குப் போகவில்லை. இடையிடையே சமையல்காரன் எட்டிப் பார்த்தான். அவன் எட்டாத வேளைகளில் ‘தாடி ‘ ஒன்று எட்டிப் பார்த்தது. மேலே ஃபான் ஒன்று ‘க்டக் ப்டக் ‘ என்று நாதமெழுப்பியது. அதைப் பிடுங்கி மூலையிலே போடலாம் போல இருந்தது. நேற்று வரை மனம் வலித்தது. இன்று உடம்பும். மதியத்தின் பின் கண் விழிக்க, அதே பாடல் கேட்டது.

‘யாரோ ஒரு தறுதலை பள்ளிக்கூடம் போகாமல் பாடுது! ‘

ஒரு பெண் தனியே பாடினாள். பின் கோரஸ். பெண்ன் குரல் மெல்ல எழும்ப வைத்தது. ஜன்னல் நிலையை விலக்க பாடல் பாதியில் ன்றது. என்னைக் கண்டு கொண்டாள். அலட்சியமாக சின்ன இதழ் மீண்டும் விரிந்தது. சடுதியாக ஓர் உருவம் பின்னால் என் தோள் பற்றியது. தாடிக்காரக் கிழவன் முரசு தெரியச் சிரித்தான். எனக்கு ஆத்திரம்தான் வந்தது.

‘நான் ஜெயசேகர ‘ என்று அசல் தமிழில் கிழம் தன்னை அறிமுகம் செய்தது.

‘தம்பிக்கு வருத்தம் எண்டும், முகட்டைப் பாத்தபடி எப்பவும் படுத்திருப்பதாகவும் கூட்டாளி

சொன்னான். நான் அடுத்த பங்களாவில் வேலை பாக்கிறதாக்கும் ‘ – தன் கதை சொன்னான்.

எழுபதாம் ஆண்டு வரைக்கும் அவன் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றான். பதினெட்டு வருடங்கள் தமிழர்களுடன் வாழ்ந்து பழகியிருக்கின்றான். விரல்களை ஒவ்வொன்றாக மடித்து – இளவாலை, கீரிமலை, அளவெட்டி, தெல்லிப்பழை, மானிப்பாய்….

‘தம்பி, தெல்லிப்பழை பேக்கரி! அங்கைதான் என்ரை கடைசி வேலை. தம்பியின்ர முகத்தைப் பாத்தா கந்தவனம் வாத்தியாற்ரை சாயல் அடிக்குது ‘

‘அவர்தான் என்னுடைய அப்பா! ‘

‘சொல்லி வேலையில்லைத் தம்பி! ‘

கிழவர் பொக்குவாயால் சிரித்தார். கட்டிப் பிடித்து உச்சி மோந்தார். நெடி ஒன்று குபுக்கென்று அடித்தது.

‘உங்கட அப்பாவிற்கு அப்ப, அடிக்கடி நீர்கொழும்பிலை இருந்து கடிதம் தருவான்கள்.

கொண்டு போய் குடுக்கிறது நான்தான். தம்பி நான் குடிச்சிருக்கிறேன்தான் – கொஞ்சமா. இடத்தைச் சொல்லுறன் பார் ‘ என்று சரியாக எனது வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார்.

‘பாத்தியா தம்பீ! சொல்லி வேலை இல்லை. ஆஸ்பத்திரி போக வேணுமெண்டால் சொல்லு. இந்தக் கிழம் கொண்டு போய் விடும். ஆஸ்பத்திரியெண்டு பெரிசா ஒண்டும் இல்லை. தொழிற்சாலை வைத்தியர்தான் ‘

எல்லாமே வியப்பாகத்தானிருந்தது.

‘தம்பி! ஏதாவது உதவியெண்டால் பயப்படாமல் கேள். இந்தக் கிழம் சமைக்கும். சாப்பிடும்.

கொஞ்சம் குடிக்கும். அப்புறம் படுத்துத் தூங்கும். மொக்குக் கிழம் ‘ – பல் இல்லாத முரசு சிவப்பு நிறம் காட்டியது.

‘வாறன் தம்பி! ‘ என்றபடி பழைய சைக்கிள் ஒன்றை மிதித்தபடி மறைந்தது.

பெரியதொரு உறுமலுடன் ‘பஜிரோ ‘ ஒன்று அதிரடித்தது. வந்த வேகத்தில் என்னை சுமந்து

சென்றது. அக்கவுண்டன்ற் வந்திருந்தார். கிழவர் சொன்னதாகச் சொன்னார். அங்கே இன்னொரு கிழட்டுருவம் நாடி பிடித்துப் பார்த்தது. இருமினார். செருமினார். அவருக்குக் கூட ஏதோ ஒரு வருத்தம். விளக்கின் இருள் அதன் அடியில்தானே! குழல் மார்பு மீது அழுத்திற்று.

கையை விரிக்க ‘ரவுண் ஹொஸ்பிட்டல் ‘ வரவேற்றது.

இதயத்தில் ‘வீக் ‘ என்றது. வந்து ஒரு ‘வீக் ‘ ஆகவில்லை. இதயத்தில் ‘வீக் ‘. சொல்லி வேலையில்லைத் தம்பி. இவ்வளவு காலமும் ஒளித்திருந்த சைத்தான் இங்கு வந்தவுடன் பிரசன்னமாகிவிட்டது.

மூன்று நான்கு கலர் மருந்துகள். மீண்டும் படுக்கையில் சுருண்டேன். அடுத்த நாளும் ‘சொல்லி வேலையில்லைத் தம்பி ‘ வந்தார். கதைக்க ஆறுதலாக இருந்தது.

‘தம்பி! உப்பிடி விட்டத்தைப் பாத்துக் கொண்டு நிண்டால் எப்பிடி வருத்தம் மாறும் ? வெளியே போய் நல்லா உலாவுங்க. நல்ல காத்தோட்டம் உடம்புக்கு நல்லது ‘

காற்றாடப் போனேன். வீட்டின் பின்புறம் சென்று கற்குவியல் மீது அமர்ந்துகொண்டேன்.

ஆறொன்று வளைந்து ஓடியது. காற்று ஈரமாக வீசிற்று. மல்லாந்து கிடக்கும் மங்கைப் பூவின் மதாளித்த பிரதேசமென மலைகள். நெஞ்சு வலித்தது. வேதனையின் கனதியில் துடிக்கும் கிழிபட்ட இதயத்தின் வடிகாலா அந்த வலி. அப்படியே போய் படுக்கையில் புகுந்தேன்.

ஜன்னல் கண்ணாடி மீது ஏதோ விழுந்து அதிர்வு. ஏதோ ஒன்று சரசரத்து அப்பாலே ஓடிற்று. நிலை விலக்கி உற்றுப் பார்க்க, உறைந்து இறுகிய பனிப்பதுமை. பார்த்துக் கொண்டிருக்க ‘பூ ‘ விரிந்தது. அடேயப்பா, என்ன அழகு! அப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை. பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு.

கவனம். பெர்ணாண்டோவை மயக்கியது மாதிரி மயக்குகிறாள்.

கையைக் கோணலாக மடித்து ‘என்ன ‘ என்றேன். பூனையின் கண்களில் தேங்கிய மருட்சி. தலையை ஒரு புறமாகச் சரித்துக் கொண்டு ஓடி மறைந்தாள். யார் இவள் ? – ஒரு மனோறியோ அல்லது லக்மினியோ அல்லது பொடிமினிக்காகவோ இருக்கலாம்.

அப்புறம் நல்ல நித்திரை. மருந்து செய்யும் மாய வேலை. கலர் கலர் மருந்துகள். கலர் கலர் மாயப் பிசாசுகள். எழுந்து படுக்கையில் குந்த, கண்ணாடி ஜன்னலிற்குள்ளால் மாய வலை வீசிற்று. கிட்டப் போக ஓடிப் போயிற்று. பிணைப்பை ஏற்படுத்த ஒரு பிணக்கு. மொழியைப் பின் தள்ளி மோகம் பிறந்தது.

மயக்குகிறாள். பெர்ணாண்டோ மயங்கின மாதிரி. ல்லாதே. ஓடு. ஒளி. அவதானம். வழுகிவிடு. பாதை சறுக்கும் கவனம்.

விட்டு விட்டு வலித்தது இதயம். ஒரு முனையில் இருந்து வந்து, மறுமுனையில் மூச்சு விட வேண்டுமென்று முழுவியளம். ஒரு நோயாளியை வந்து பார்க்க முடியாதளவிற்கு இரக்கம் கெட்ட மனிதர்கள். எல்லாம் எரிந்து சாம்பராகிப் போன பின் வாகனம் ஒன்றில் வந்து குதித்தார்கள்.

‘என்ன செய்வதாக உத்தேசம் ? ‘

‘வீட்டை போறதாக இருக்கிறேன். இஞ்சை வேலை செய்ய முடியாது! ‘

‘எப்ப ? ‘

நாளைக்குப் போவதாக பொய் சொல். இரவே புறப்பட்டு விடு

‘நாளைக்கு இரவு ‘

‘ஏன் இண்டைக்கே போகலாந்தானே! ‘ – வெடுக்கென அவனைத் திரும்பிப் பார்த்தேன். கூனிக் குறுகிப் போனான்.

‘வருத்தம் இன்னும் நல்லா மாறேல்ல ‘

‘ உம். பக்டரி மனேஜரிடமும் வந்து றிப்போட் பண்விட்டுப் போறது நல்லது ‘

பேச்சு அறுந்தது. அவர்களே என்னை ஏற்றிக் கொண்டு போய், பின் கொண்டு வந்து விட்டார்கள். என்ன கரிசனை. அறைக்குச் சென்று உடுப்புகளை மடித்து வைக்கத் தொடங்கினேன்.

‘போகப் போறியளா ? ‘ என்றனர் சமையல்காரனும் தாடியும்.

‘ஆமாம் ‘

‘அதுதான் தம்பி நல்லது. நல்லா வருத்தம் மாறினாப் போல வந்து வேலை செய்யுறதுதான் நல்லது ‘

‘திரும்பி வாறதா ? போதுமடா சாமி! ‘

‘தம்பி! உமக்கொண்டு சொல்ல வேணும். லத்தைப் பிரிக்க வரம்பு கட்டலாம். அல்லாட்டிப் போனா வேலி போடலாம். அதின்ர ஒருமித்த மணத்தைப் பிரிக்க யாரால் இயலும் ‘

இரண்டு மக்குத்தான் பஸ். அதுவரையும் விழித்திருக்க வேண்டும்.

விழிப்பு… விழிப்புடன் தூக்கம்.

மணி ஒன்றானதும் சுறுசுறுப்படைந்தேன். எல்லாரும் வெறுந்தரையில், விரித்துப் படுக்கை. பலரது இன்பங்களுக்கு உரமாகி, உழைத்து சருகாகிக் கிடக்கும் மக்கள்.

மருந்துக் குளிசையில் இரண்டை விழுங்கி ஒரு மிடறு தண்ர். சந்திப்பு என்ற ஒரு கழ்ச்சி இல்லாவிட்டால், பிரிவு என்ற என்ற வேதனையை ஏன் மனிதன் அனுபவிக்க வேண்டும் ?

தடயங்கள் பதியக் கூடாது. புரியாமலே பிரிந்து விடுவேம். ஒருவரையும் எழுப்ப மனமில்லை. நடையைக் கட்டினேன். மழை பிசுபிசுத்தது. யாரோ துரத்துவது போல, துரத்திக் கொண்டு வந்து முதுகின் பின்புறம் அறைந்து அப்பாலே போயிற்று. மழை. பின் ஒரே சிணுங்கல். அடிக்கு அப்புறம்தான் சிணுங்கல். எங்கும் எதிலும். இருள். மீண்டும் இருளிற்குள் பயணம். மங்கிய ஓவியம் போல – எல்லாமே தோன்றி மறைந்தன.

புல்லிற்குள் நடந்து, நீரிற்குள் விழுந்து மனம் போன போக்கில் நடை. நாய்கள் குரைத்தன. ‘பாக் ‘ உடன் ஓட, களைப்பு. கல் ஒன்றின் மேல் இருந்தேன். ஏதோ சுணைத்தது. மயிர்க்காலெல்லாம் விஷம் தாங்கி நடக்கின்ற கம்பளிப் பூச்சிகள். இருக்கக் கூட விடவில்லை.

இந்தப் பிரதேசத்திற்கும் எனக்கும் இனி சம்பந்தமில்லை என்று னைப்பு தட்டும் போது – க்டக் ப்டக் ‘ என்ற சத்தத்துடன் சைக்கிள் ஒன்று வந்தது.

‘தம்பி ஏறுங்கோ ‘ தாடிக்காரக் கிழம் மூச்சிரைக்க குதித்து இறங்கியது. கதைக்க கவலை வந்தது. தாவி ஏற குமுறியது.

‘தம்பி! இந்தக் கிழம் சமைக்கும். சாப்பிடும். படுக்கும். கொஞ்சக் கள்ளும் குடிக்கும். மொக்குக் கிழம். நீங்கள் – படிச்சனியள். எல்லாம் விளங்கும். இந்த நாட்டுக்கு எவ்வளவோ பிரயோசனப்படுவியள்.

உங்கட இதயத்தை எனக்குத் தந்து விட்டு, என்னுடயதை உங்களுக்கு மாற்றி எடுக்க முடியுமெண்டா,

எனக்கு எவ்வளவு சந்தோஷம் ‘

மயிர்க்கால்களெல்லாம் விஷம் தாங்கி நடக்கும் மனிதர்களில் அந்தக் கிழம்….

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதெல்லாம் – இந்த இனவாதம் என்ற புற்றுக்குள் வேகாது. நீ எடுத்த முடிவு சரியானது. போ. நில்லாதே. ஓடு.

Series Navigation