முரண்கள்
சு.கு.கார்த்திகேயன்

1.
நம்மிடைத் தூரம் முரண்.
எனக்கு எட்டா தூரத்தில் நீ.
உனக்கு எட்டும் தூரத்தில் நான்.
2.
முரணாய் உன் கண்கள்
கயலாயும்
வலையாயும்.
3.
உனை வயிற்றில் முத்தமிடுகையில்
நான் உணர்ந்த பதில் முத்தம்
கருக் குழந்தையின் கால் முத்தம்.
4.
உன் நிழற்படம் கண்டதும்
தொலைந்தது
என் நிஜம்.