முத்தம்

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

எட்வின் பிரிட்டோ


முத்தம்…
அன்பைச் சொல்லும் உலகப் பொதுமுறை,
இரு இதயங்களின் கைக்குலுக்கல்,
ஆலிங்கனத்தின் அச்சாரம் முத்தம்,
ஒரே நேரத்தில் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும்
ஒட்டடையடித்து உயிர்ப்பிப்பது முத்தம்.
முத்தம்…
ஊடலின் முடிவுரை, கூடலின் முகவுரை,
காதல் மழையின் முதல் துளி,
இயற்பியலின் விசைகளுக்காட்பட்ட
எதிர்துருவ இதயங்களின்
இரசாயனப் பாிசோதனை.
காதலின் வல்லினம், காமத்தின் மெல்லினம்… முத்தம்
உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பாிசத்தில் உயிர் நிற்றல்
முத்தம்…இல்லை முக்தி.

Series Navigation

எட்வின் பிரிட்டோ

எட்வின் பிரிட்டோ