This entry is in the series 20020825_Issue

ஈசாக்


தாருமாறாய் திட்டித் தீர்த்தாய் நீ
நடு சாலையில் வைத்து
என்னை
சொன்ன வேலையை
செய்யவில்லை என்று.

இரவு
நெடு நேரமாகியும் காத்திருந்தாய்
வரும் வரை
வாசலிலெயே
எனக்காக.

‘புள்ளையை திட்டிவிட்டேன்
யார் மேலயோ உள்ள கோபத்தில்.
ராத்திரி
புள்ள வீட்டுக்கு வந்தபிறகுதான்
உசுரே வந்தது
எனக்கு.’
சொல்லிக்கொண்டிருந்தாய்
பக்கத்து வீட்டு ஆயாவிடம்.

அம்மா
நீ
கோபப்படு போதெல்லாம்
மீண்டும்…மீண்டும்
பிறக்கிறேன்
உனக்கு மகனாக
நான்.

***
Mohamed Ishaq – thuvakku@yahoo.com
***

Series Navigation