மறு நவீனத்துவம்/ரெமொ/ரீமாடனிசம்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


சென்ற நூற்றாண்டின் இறுதி கால் பகுதியில் தோன்றிய பின் நவீனத்துவம் எனும் ஆய்வுமுறைக் கோட்பாடு சமூக,பொருளாதார,அரசியல்,கலையிலக்கிய தளங்களில் வலுவான செல்வாக்கு செலுத்தியது.பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்களில் பெரும்பான்மை சிந்தனைவாதிகள் மார்சியத்துடனும் இடதுசாரிமனோபாவத்துடனும் இருந்ததன் காரணமாக ஒருசாரர் பின் நவீனத்துவத்துவத்துக்கு புதிய அணுகு முறைகளை உருவாக்கியது பின் நவீனத்துவத்தின் ஒற்றையடையாளத்துக்கு மாறான பன்முகத்தன்மை என்று விளங்கப்பட்டது மூன்றாம் உலகம் பற்றிய பார்வையிலிருந்து பின் நவீனத்துவ சிந்தனையாளர்களில் பலர் பின்காலனீயம் என்ற கோட்பாடை உருவாக்கவும் நேர்ந்தது.பின் நவீனத்துவம் அடிப்படைவாதிகளுக்கு பயன்மிக்கது எனவும் பொறுப்பற்ற தத்துவம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.இதிலிருந்து விமர்சன பின் நவீனத்துவ கோட்பாடும் போஜி போன்றோரால் உருவாக்கப்பட்டது.பூதிலார்டு,ழான் பிராஞ்சுவா,ரோலண் பார்த்,லாக்கான்,தெரிதா,பிரடரிக் ஜேம்சன் போன்றோர்கள் மார்க்சிய நிலைபாட்ட்டிலிருந்துக் கொண்டே சிந்தித்ததன் காரணமாக பின்நவீனத்துவத்துக்கும்,மார்க்சியத்துக்குமான கறாரான உறவுகள் குறித்த விவாதங்கள் ஒலித்தன.மார்க்சியத்தை விலக்கி சிலர் சிந்தித்தபோதிலும் பின்நவீனத்துவத்துக்கும்,மார்க்சியத்துக்குமான உறவை வேரறுக்க இயலவில்லை.இந்த சிக்கல் சில பின்நவீனவாதிகளுக்கு தொடர்ந்து இருந்து வந்தது.
நவீனத்துவம் பின்நவீனத்தால் முழுமையாக நிராகரிக்கப் பட்டபோது நவீனத்துவவாதிகள் பலரும் பின்நவீனவாதிகளாக மாறியதால் இன்னும் சிக்கல் தொடர்ந்தது. ஒருசிலர் நவீனத்துவத்தின் தொடர்ச்சியே பின்நவீனத்துவம் என்று பேசியும் எழுதியும் வந்தனர்.மேலும் உயர்நவீனத்துவத்துக்கு பங்களிப்புச்செய்தோரை பின்நவீனவாதிகளாக மாற்றும் முயற்சியும் நடைபெற்றது.சிலர் பின்நவீனத்துவத்தை ஒரு ஒழுக்கமாக பாவிக்கத்துவங்கியதும் அராஜகவாதிகள் என்ற ஒழுங்கவிழ்ப்பாளர்கள் பலர் பின்நவீனத்துவத்திலிருந்து உருகொண்டனர்.உன்னதம்,ஒழுக்கம்,மேன்மை,தரம்,கலையம்சம் போன்ற நித்திய குணங்களை வலியுறுத்தும் நவீனத்துவவாதிகள் பின்நவீனத்துவவாதிகளாக திகழ்ந்த போது இடதுசாரிமனோபாங்கை விமர்சித்து பலர் கருத்துநிலைவாதிகளாக திகழும் சிலரை மறுதலித்துக்கொண்டு உருவாக நேர்ந்தது.இவ்விதமான பின்நவீனவாதிகள் உன்னதங்களில் ஈடுபாடுக்கொண்ட சிந்தனைவாதிகளாக உயர்மனோபாவகாரர்களாக திகழ்ந்தனர்.பல்வேறு காலகட்டங்களில் ரொமாண்டிசிசம்,நேச்சுரலிசம்,ரியலிசம்,நியோ கிளாசிசம்,பார்மலிசம்,டாடாயிசம்,சர்ரியலிசம்,எக்ஸிஸ்டன்லிசம்,மாடனிசம் என்ற பல்வேறு போக்குகள் உருவாகி மாறி வருகின்ற போது எல்லாவற்றிலும் பங்கெடுத்துக்கொள்ளும் உயர்மனோபகாரர்கள் இருந்தனர்.தாங்கள் கொண்டிருந்த மேன்மை,தரம்,உன்னதம் என்ற குணாம்சங்களை எல்லா கோட்பாடுகளிலும் புகுத்திக்கொண்டு தொடர்ந்து ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறிக்கொண்டு எந்த ஒன்றிலும் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததினால் பின் நவீனத்துவம் கூட அவர்களுக்கு திருப்தியை தரவில்லை.எனவே பின்நவீனத்துவத்தை மீறவேண்டிய நிலையைக்கொண்டிருந்தனர்.
1990 ஆம் ஆண்டில் பில்லிசைல்டிஸ்,சார்லஸ் தாம்சன் போன்றோர்கள் பிரிட்டனில் கான்செப்சுவல் ஆர்டுக்கு எதிராக பிகரேட்டிவ் பெயிண்டிங்கை முன்னிறுத்தி ஸ்டக்கிசம்(Stuckism) என்ற கலைஇயக்கத்தை ஆரம்பித்தனர்.1999ல் ஸ்டக்கிஸ்ட் மேனிபஸ்டோ என்ற அறிக்கையை வெளியிட்டனர்.அந்த அறிக்கையில் பின்நவீனத்துவத்துக்கும் கான்செப்சுவல் ஆர்டுக்கும் எதிரான தளத்தில் இயங்குவதாக அறிவித்தனர்.Philip Absolon,Frances Castle,Sheila Clark,Eamon Everall,Ella Guru,Wolf Howard,Sanchia Lewis,Joe Machine,Charles Williams போன்றோர்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர்.இன்று முப்பது நாடுகளில் இந்த இயக்கம் இருந்துவருகிறது.இந்த சூழலில் தான் பில்லி சைல்டிஸ்சும் சார்லஸ் தாம்சனும் இணைந்து 2000 ம் ஆண்டில் ரீமாடனிசம் என்ற கலையியக்கத்தை அறிமுகப்படுத்தினர்.Itis an attempt to introduce a period of new spirituality into art, culture and society to replace post modernism.மாடனிசத்தின் மூலவிதிகளை திரும்ப முயற்சிப்பதும் பார்மலிசத்துக்கு எதிராக இருப்பதும் என்ற தன்மையோடு புது போக்கை முன்னெடுத்துச்சென்றனர். ‘towards a new spirituality in art’ என்ற கோஷத்துடன் இவர்கள் இயங்கினார்கள்.அந்த ஆண்டிலே ரீமாடனிஸ்ட் ஆர்ட் கேலரியை ஜெப்ரி ஸ்காட் ஹாலண்டும் ஜெர்ரி டெற்றிக்கும் இணைந்து அமைத்தனர்.
அமெரிக்காவில் உடனடியாக வந்த சில திரைப்படங்களில் ரீமாடனிச கூறுகள் தென்படத் துவங்கின. American film makers/photographers Jesse Richards and Harris Smith co-founded a new group Remodernist Film and Photography with an emphasis on emotional meaning and characterised by elements of new-wave/no-wave/ expressionist/ transcendental film-making.Amos Poe’s “Blank Generation”, “Unmade Beds” and “The Foreigner”போன்ற படங்கள் ரீமாடனிச வகைப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் Defastenism, a new group of creatives in Ireland declared themselves to be Remodernist.மாடனிசத்தின் மூல விதிகளை திருப்பி முயற்சிப்பதும்,பார்மலிசத்துக்கு எதிராக இயங்குவதும் ஆரம்பத்தில் ரீமாடனிச செயல்பாடுகள் என்ற திட்டத்துடன் செயல்பட்டவர்கள் பிற்பாடு உண்மையான கலையின் நோக்கமே மனித ஆன்மாவுக்கு புத்துயிர்ப்பு அளிப்பதாகும் என்றனர்.மறுநவீனத்துவம் நவீனத்துவ தந்தையரின் ஆன்மீக தரிசனத்தை முக்கியமாக எடுத்துக்கொள்கிறது.மனித ஆன்மாவை வலிமைமிக்கதாக ஒருங்கிணைப்புச் செய்ய கலையிலக்கியம் பயன்படவேண்டும் என்று அறைகூவல் விட்டனர்.
பின்நவீனத்துவம் மனித இருப்புக்கான விஷயங்களை ஸ்கெப்டிக் மனோபாவத்துடன் அணுகியதால் கலையிலக்கியத்தின் மரணத்தையே வலியுறுத்தியது என்றும் மனிதனோ,கலையிலக்கியமோ தோல்வியை தழுவுவதில்லையாகையால் பின்நவீனத்துவம் தோல்வியடைந்து விட்டதாக மறுநவீனவாதிகள் பறைச்சாற்றினர்.பொருள்முதல்வாதத்தின் இருப்புகுலைவு,நிகிலிசம்,ஆன்மீக இழப்பு போன்றவைக்கு மாற்றாக ஆன்மீகத்தின் புத்துயிர்ப்பு கலையிலக்கியத்தின் பிரதான பணியாகும் என்று தங்கள் அறிக்கையில் விளம்பரபடுத்தினர்.ஆன்மீக கலை எழுச்சி என்பது அவர்களது முக்கிய திட்டமாகும்,அத்தகைய சிறப்புமிக்க அறிக்கையை பார்ப்போம்.
1)நவீனத்துவத்தின் மூலவிதிகளை எடுத்தாள வேண்டும்.
2)அந்நியபடுத்தலை தவிர்த்து ஆன்மீகத்தை வலியுறுத்தவேண்டும்.
3)பின்நவீனத்துவத்திற்கு எதிரான தளத்தில் இயங்கவேண்டும்.
4)ஆன்மீகத்தின் ஆழத்திலும்,அர்த்தத்திலும் செயல்படவேண்டும்
5)உடலையும்,உள்ளத்தையும் இணைத்து அறிவை மரபுகளில் இருந்து பெறப்படவேண்டும்.
6)ஆன்மீகம் என்பது ஆன்மாவின் பூமி பயணத்தை சொல்லுவது ஆகும்.
7)நவீனத்துவம் என்பது முழுமையான ஒன்றல்ல.எனவே மறுநவீனத்துவத்தின் தேவையும்,அவசியமும்,விரிவான பணியும் இருக்கிறது.
8)ஆன்மீக கலை எனும் போது அது மதத்தோடு தொடர்புடையது அன்று என்பதை விளங்கவேண்டும்.
9)ஆன்மீக கலை வாழ்வை உயர்ந்த நோக்கங்களுக்கு மட்டுமானது என்பதை வலியுறுத்துவதாகும்.
10)உண்மையான கலை என்பது கலைஞனை தன்னளவில் தொடர்பு கொளவதாக அமையவேண்டும்.
11)கலை என்பது கலைஞனின் பார்வையை மாத்திரமே சொல்லுவது ஆகும்.
12)மறுநவீனத்துவத்தின் பணி என்பதே கலையில் இறைவனை கண்டடைய வேண்டும் என்பதாகும்.
13)உண்மையான கலை என்பது ஆன்மபயணத்தின் சாட்சியாக,தரிசன அறிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்.
14)ஆன்மீகதைக் கலையில் ஏன் கொண்டுவரவேண்டுமென்றால் மக்களிடம் அர்த்தமுள்ள நோக்கத்தை சொல்லவும் வாழ்வை மகிழ்சிகரமாக உருவாக்கவும் அதை பிறர் புரிந்து கொள்ளவுமே ஆகும்.
ரீமாடனிஸ்ட் மானிபெஸ்டோ என்ற பெயரில் வெளிவந்த இந்த அறிக்கை மறுநவீனத்துவத்தின் தத்துவமாகவும் கலையிலக்கிய கோட்பாடாகவும் இருக்கிறது.மேலும் மறுநவீனத்துவவாதிகளின் கலையிலக்கிய போக்குகளை பார்க்கிறபோது இரண்டுவிதமான போக்குகள் இருப்பதை காணலாம்.ஒன்று பின் நவீனத்துவத்துக்கு எதிராக செயல்படுவது மற்றது ஆன்மீக கலை எழுச்சியை உருவாக்குவது. RE MODernism Trajectories towards the NU Modern என்ற கட்டுரையில் Kevin Radley சொல்லும்போது
“the notion of the postmodern directly challenged the notion of the single voice. The ironclad melting pot became the salad bowl. Layers of meaning took precedence, and multiple truths became the self- evident truth. The hegemonic handcuffs come off, and the culture wars began. Anarchy, multiplicity, and multiculturalism resonated with the new obvious truth: of course there is more than one culture, more that one ethnicity, and more than one gender to initiate and be included in cultural process, discourse and participation” என்று சொல்லிவிட்டு மறுநவீனத்துவம் பின்நவீன கலையுத்திகளை பயன்படுத்துவதில் தவறு இல்லை என்கிறார்.பின் நவீனத்துவத்துக்கு எதிரான நிலைபாடை எடுக்காமல் பின்நவீனத்துக்குள்ளே மறுநவீனத்துவத்தை கட்டமைக்கவேண்டும் என்பது அவரது ஆசை.அவர் பின்வருமாறு தமது சந்தேகத்தை முன்வைத்தார்.
“To re-contact the notions of presence, reinvent their sense of beauty and renew our need for intimacy. Is this a return to earnest individualism? Could this be the emergence of the Nu modern – remodernism, or remo? I suggest that we let the artist decide.”
ஆக பின்நவீனத்துவம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தான் புதுவகையில் மறுநவீனத்துவம் உருவாக வேண்டும் என்பதை நாம் சாதாரணமாக கருதிவிட முடியாது.இன்று உலகளவில் ஆண்ற்றூ கோல்டிங்,யுவான் சய்,சியான் சின்சி,டேவிட் லீ,எட்வர்ட் சுசி ஸ்மித்,பிரைன் சீவல்,லூசியாபக்,கெவின் டார்க் போன்றோர்கள் புகழ்மிக்க மறுநவீனத்துவவாதிகளாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.
—————————————–
mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்