This entry is in the series 20030525_Issue

வேதா


இந்த முறை
இனிப்புகள் இல்லை!
புதிது புதிதாய் முளைக்கும்
வாழ்த்து அட்டைகள் இல்லை!
கடமைக்காய் ,
பரிசுகளும் இல்லை!
செயற்கை சிரிப்பும், சிவந்த முகமுமாய்
இன்று முழுக்க
யாருக்கும் நன்றி சொல்லவில்லை!

இயல்பான புன்னகையில்,
ஈரம் கலந்த நினைவுகளில்,
இன்று ஒருநாளும்,
என்றும் போல் தனியாய் கரைய…..

ஏதோவொரு கட்டாயத்தில்,
நான் மறந்தேபோன
என் பிறந்தநாளை,
நீயாவது….(! ?)

piraati@hotmail.com

Series Navigation