This entry is in the series 20050318_Issue

ரஜித்


மேசை விரிப்பாக
மோனலிசா ஓவியமாம்

கவிக் குயிலின்
காற்றினிலே வரும் கீதம்
கள்ளுக் கடைகளில்
ஒலிபரப்பாம்

வேடந்தாங்கள் பறவைகள்
வேட்டையாடப் படுகிறதாம்

கன்றுக் குட்டிகள் ஏங்க
சுரக்கும் பால் மொத்தமும்
கறந்து விற்பனையாம்

புழு நெளியும் கழிவுகள்
புதுப் புனலில்
சங்கமமாம்

மான்களுக்கும்
மயில்களுக்கும்
நரிகள் நாட்டாமையாம்

அப்பத்தைப் பங்குவைக்க
மந்திகளுக்கு அதிகாரமாம்

இத்தனையும் சகிப்போம்
ஆனால்
சுனாமி நிதியைச் சுருட்டும்
மனிதச் சுனாமிகளைச்
சகிப்பதென்பது
சாவினும் கொடியது

ரஜித்
—-

Series Navigation