மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

தி இன்டிபன்டன்ட் பத்திரிக்கைக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய கடிதம்


ஆசிரியர்

தி இன்டிபன்டன்ட்

லண்டன்

ஐயா,

நான் உண்மையில் கொண்டுள்ள தீவிரத்தைவிட அதிகத் தீவிரமாக என்னை காண்பித்து வந்த முதல் கட்டுரை அல்ல உங்கள் இதழில் வந்த கட்டுரை. ( ‘நாஸ்திக புரட்சிக்குத் தலைமை தாங்கி கிறிஸ்தவ பள்ளிகளுக்கு எதிராக டாக்கின்ஸ் போராட்டம் ‘ என்ற தலைப்பில் வந்த உங்களது கட்டுரையை குறிப்பிடுகிறேன்) மிகவும் மதத்தை நம்பும் மேற்கத்திய உலகத்து நாடுகளின் அரசியல் சட்ட அமைப்பை விட நான் கொஞ்சம் குறைவாகவே இந்த கருத்தில் இருக்கிறேன். அதாவது அரசாங்கம் மதப்பள்ளிகளுக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்பதையும், புதிதாக மதப்பள்ளிகள் அரசாங்கப் பணத்தில் திறக்க அனுமதிக்கக்கூடாது என்பதும் என் கருத்து. சொல்லப்போனால் மதம் பெரிதும் மையம்பெற்றுள்ள பல நாடுகளின் சட்ட அமைப்பில் இருக்கும் நியதிகளை விடக் கூடக் குறைவான எதிர்பார்ப்பு தான் இது.

டைம்ஸ் இதழில் நான் எழுதியிருந்த கட்டுரையை நீங்கள் குறிப்பிடுவதாக தோன்றுகிறது. வரலாற்றின் காரணமாக நாம் பழக்கப்படாமல் இருந்திருந்தால், சின்னஞ்சிறு குழந்தைகளை அவர்களது பெற்றோர் கொண்டிருக்கும் வானவியல் மற்றும் ஒழுக்கவியல் கருத்துக்கள் படி நாம் பிரித்துப் பார்க்க மாட்டோம் என்பதைத் தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

குழந்தைகளை ‘ஐரோப்பா ஆதரவு குழந்தைகள் ‘ என்றோ, நவ கீன்ஸியப் பொருளாதாரக் குழந்தைகள் ‘ என்றோ அவர்களது பெற்றோரின் பொருளாதார கருத்துக்களைப் பொறுத்து பிரித்துப் பார்ப்போமா ? அதே போல நாம் ‘டோரி கட்சி குழந்தைகள் ‘ என்றோ ‘தொழிலாளர் கட்சி குழந்தைகள் ‘ என்றோ நாம் பிரித்து பாடம் சொல்லிக்கொடுப்பதில்லை. (மொ.கு: தமிழ்நாட்டில் அதிமுக கட்சிக்குழந்தைகள், திமுக கட்சிக்குழந்தைகள், தேசியக்கட்சிக் குழந்தைகள், காங்கிரஸ் கட்சிக் குழந்தைகள் எனப்பார்க்கலாம்) இவை புரிவதற்கு குழந்தைகள் மிகவும் சிறியவர்கள் என்றோ, சற்றுப் பெரியவர்களாக இருந்தால், பெற்றோர்களது கருத்துக்களை எதிர்த்து பேசக்கூடியவர்கள் என்றோ நாம் கருதி இதை அவர்களிடமே விட்டுவிடுவோம்.ஆகவே, நாம் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல், தனியாக ‘கத்தோலிக்கக் குழந்தைகள் ‘ என்றும், புரோடஸ்டண்ட் குழந்தைகள் ‘ என்றும் ‘யூதக் குழந்தைகள் ‘ என்றும், முஸ்லீம் குழந்தைகள் என்றும் அவர்களைப் பிரிக்க வேண்டும் ?

நாம் இருக்கும் அந்தந்த மதங்களுக்கு இவை மிகவும் வசதியானவை என்பதால்தான். இது மட்டுமே இந்த மதங்கள் தொடர்ந்து நீடிப்பதற்கு முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ்

ஆக்ஸ்போர்ட்

Series Navigation

ரிச்சர்ட் டாக்கின்ஸ்

ரிச்சர்ட் டாக்கின்ஸ்