This entry is in the series 20100801_Issue

கலாசுரன்


———————————————————————
சட்டைப் பையில்
வைத்துக் கொள்கிறாய்
உனக்கானதென
எதோ ஒன்றை

உன் விரல்கள்
அடிக்கடி
உள்சென்று வெளிவருவதுண்டு
வேறு ஒருவருக்காக எனப்
பாவித்தபடி ….

அங்கிருந்து எடுக்கப்பட்ட
மற்றொன்று
யாருக்கேனும் அளிக்கப்படலாம்

எதிர்கொள்ளும்
யாரோ ஒருவரிலிருந்து
எதோ ஒன்றை
எதிர்பார்த்தபடி ….

பிறகு
மீண்டும் அங்கேயே
மடித்து வைக்கப்படும்
உன்னுடையது மட்டுமான
விருப்பங்களென….!
————————————————-
கலாசுரன்

Series Navigation