எஸ்.கே
____
தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட்
வெப் சைட்ஸ், சாட்டிங், ஈமெயில், செல் போன், எஸ்-எம்-எஸ் என்கிற
ஹைடெக் ஊடுருவிகளும் குழந்தைகளின் மனங்களைக் கெடுக்கின்றன. முன்பின்
தெரியாத முகமூடிகளுடன் அந்தரங்க விஷயங்களைக் கூட மணிக்கணக்காக சாட்
பண்ணுகிறார்கள். இதனால் தெளிவான சிந்தனை உள்ளவர்களின் மனங்கள் கூட
சலனப்பட்டு விடுகின்றன. எதையும் ஒரு தடவை முயன்று பார்த்தாலென்ன, அதில்
என்ன தவறு, என்பது போன்ற எதிமறை உந்துதல்கள் எழுகின்றன. Children
tend to rebel against their parents to fall in line
with their peers. ஆனால் அந்த வயதில் (impressionable age)
அவர்களுக்குத் தவறான வழிகாட்டிகள் அமைந்து விட்டால், அவ்வளவுதான் –
அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்கள்
வாழ்வும் பெருமளவில் பாதிக்கப்படும்.
குழந்தைகள் மற்றவர்களுடன் பழகும்போது பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய சில
முக்கிய வழிமுறைகள்:-
* தெரிந்தவர், அறிமுகமானவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர், உறவினர்
(நெருக்கமாக இருந்தால் கூட), பெரியவர், ஆன்மீக ஈடுபாடு உள்ளவர், காவி
உடுத்தியவர்- இது போன்றவர்களிடமும கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இப்போது incest போன்ற மிக அருவருப்பான செக்ஸ் வக்ரங்கள் அதிகமாகி
விட்டன.
* எது good touch, எது bad touch போன்ற அறிவுரைகளை
பெற்றோர்கள் விவரமாக குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி எந்தெந்த
முறைகளைக் கையாண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
* அதுபோல் யாராவது குழந்தைகளிடம் ‘ஒரு மாதிரி ‘ நடப்பதாக
பெற்றோர் மனதில் தோன்றினால் (அல்லது துளி சந்தேகம் வந்தாலும் சரி)
அவர்களை அறவே வெட்டி விடவேண்டும். இதில் நாசூக்கே பார்க்கக் கூடாது.
எவ்வளவு பெரியவர்களாகவோ, வேண்டியவர்களாகவோ அல்லது சமுதாயத்தில்
அந்தஸ்து மிக்கவர்களாகவோ இருந்தாலும், அவ்வாறான சூழ்நிலையில் ரத்தம்
சொட்டச் சொட்ட உறவைக் கத்தரிக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம்
தான் முக்கியம். மற்றவை அதற்குப் பின்னர் தான்!
* ஆடை விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கப் பழக்க வேண்டும்.
தூங்கும்போது கூட விலகாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று விளக்க
வேண்டும்.
* குழந்தைகளை குற்றவாளிகள் (delinquents) போல் நடத்தக்
கூடாது. அவர்கள் யார் மேலாவது குறைகளைக் கூறினாலும் தவறு அவர்கள்
பக்கம்தான் என்ற mind-set-ஐ ஒழிக்க வேண்டும். திறந்த மனதுடன் அவர்கள்
கூறுவதைக் கேட்க வேண்டும். முழுமையாகக் கேட்கு முன்னரே முடிவெடுக்கக் கூடாது.
அப்போதுதான் பயமின்றி நடக்கும் உண்மைகள் வெளி வரும்.
* பெற்றோர்கள் நண்பர்கள் போல் பழகி சுலபமாக குழந்தைகள் தங்கள்
பயங்கள், மனக் குமுறல்கள், தங்களிடம் மற்றோர் நடந்து கொள்ளும் முறைகள்
முதலிய வற்றை தயக்கமின்றி வெளியே சொல்லும் சகஜமான சூழ்நிலையை
நடைமுறைப் படுத்த வேண்டும். குழந்தைகளோடு மனம் விட்டுப் பேச அன்றாடம்
நேரம் ஒதுக்க வேண்டும். இன்று என்ன நடந்தது, யார் யார் என்னென்ன
செய்தார்கள் போன்ற leading questions களைக் கேட்க வேண்டும்.
இல்லாவிடில் அவர்கள் மனம் மிகவும் இறுகிவிடும் – தனக்கு ஆதரவு இல்லை என்ற
உணர்வு ஆதிக்கம் கொள்ளும். மேலும், போதுமான வழிகாட்டுதல் இன்மையால்
தவறான முடிவுகளை எடுத்து விடுவார்கள். இது போன்று மனம் விட்டுப் பேசும்
சூழ்நிலையை ஏற்படுத்தாமல் ‘பயம் ஒன்றே ஆயுதம் ‘ என்று பழைய பஞ்சாங்கமாக
இருந்தால் அந்த பயத்தைப் பயன் படுத்தியே பல கயவர்கள் குழந்தைகளை அடிமைப்
படுத்திவிடும் அபாயம் உள்ளது.
* நம் குழந்தை சின்னஞ்சிறிசுதானே என்று எண்ணி யாரிடமும்
கொஞ்சவோ விளையாடவோ கொடுத்துவிட்டு விலகிச் சென்று விடாதீர்கள்.
செக்ஸ் வெறியர்கள் பச்சிளம் பாலகர்களைக்கூட விட்டு வைப்பதில்லை என்பதை
கவனத்தில் கொள்ளவேண்டும் (Beware of pedophiles!). இந்த செக்ஸ்
விஷயத்தில் யாரையும் நம்பக் கூடாது. எவரெவர் மனத்துள் எவ்விதமான அழுக்கு
குடி கொண்டிருக்கிறது என்பது வெளியில் தெரியாது. ‘நல்லவன் போலிருப்பான்
சண்டாளன்! ‘
பெண் குழந்தைகள் மட்டும்தான் என்பதில்லை, ஆண் குழந்தைகளுக்குக் கூட மேற்கூறிய
அறிவுரைகள் பொருந்தும். ஏனென்றால் உலகில் பலவித வக்ரங்கள் பெருகிக்
கிடக்கின்றன!
இன்னும் சில ‘கவனிக்க வேண்டிய விஷயங்களை ‘, தினமலர் இதழில் ஒரு
கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்கள். அதன் சுட்டி இதோ:-
http://www.dinamalar.com/2004oct17sundayspecial/p3.asp
விழிப்புடன் இருப்போம்!
மனித மிருகங்களிடமிருந்து மழலைச் செல்வங்களைக் காப்போம்!!
—-
எஸ்.கே
http://kichu.cyberbrahma.com/
skichu[&]gmail.com
- கடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே
- கடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்
- கடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை
- கடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்
- கடிதம் நவம்பர் 11,2004
- மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு
- கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு
- கடிதம் நவம்பர் 11,2004
- அவளோட ராவுகள் -2
- வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை
- ந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)
- எங்கே செல்கிறோம் ?
- ‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:
- கடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் ?
- இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்
- ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி
- கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்
- அருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004
- மனுஷ்ய வித்யா
- மெய்மையின் மயக்கம்-25
- பெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )
- கவிதைகள்
- கீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை!: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- நடை
- கவிக்கட்டு 34-தீராத வலி
- கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்
- ஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 8
- வேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்
- ஆன்லைன் தீபாவளி
- இந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்
- மக்கள் மெய் தீண்டல்
- பாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி
- வாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்
- நாடகம் நடக்குது நாட்டிலே!
- கவர்ச்சி, அடக்கம் X மரியாதை!
- மீள்வதில் என்ன இருக்கிறது ?
- ரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 45
- அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது!
- கவிதைகள்
- உரை நடையா ? குறை நடையா ? – மா. நன்னன் : நூல் அறிமுகம்
- தீபங்களின்….விழா…. தீபாவளித் திருவிழா!
- தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு
- நர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)
- அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்
- செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்
- ஏன்
- புகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )
- பெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)
- லட்சியமானவன்
- உயிரை குடிக்கும் காதல்
- அணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)