முத்து
போயஸ்கார்டன் வெளிப்புற கேட் அருகில் திண்டிவனம் ராமமூர்த்தி , விஜயகாந்த், பார்வர்டு பிளாக் சந்தானம், நடிகர் கார்த்திக், ஏதோ ஒரு முஸ்லீம் லீக் தலைவர், பொன். குமார் மற்றும் யார் என்றே தெரியாத சிலர் அமர்ந்திருக்கின்றனர். கதவு திறக்கப்படுகிறது.சசிகலா தென்படுகிறார். ஓரிருவர் அவர் காலில் விழ முற்படுகின்றனர்.இதை பார்த்து விஜயகாந்த் சிரிக்கிறார்.
திண்டிவனம் : தம்பி விஜி, ரொம்ப சிரிக்காதீங்க..அதான் சொன்னேன் உங்களுக்கு தமிழக அரசியலில் அனுபவம் இல்லை என்று….
விஜயகாந்த் : யார் சொன்னது, நான் அயர்ன் பாக்ஸ், மூணு சக்கர வண்டி எல்லாம் நிறைய பேருக்கு….
ஆரம்பிச்சுட்டார்யா என்று சிலர் அலுத்துகொள்கின்றனர். பிறகு எல்லோரும் உள்ளே சென்று அமர்கின்றனர். காளிமுத்து உள்அறையில் இருந்து கையில் ஒரு பெரிய கோணி மூட்டையுடன் வெளியே வருகிறார்.உள்ளேயிருந்து ஜெ. குரல் கேட்சிறது.
‘ ஆள் இல்லை என்று மட்டும் வந்திராதீங்க..இலங்கைக்கே போனாலும் பிடிச்சுட்டு வந்துரணும் ‘
‘சரிங்கம்மா ‘ என்று கூறிவிாட்டு எல்லோரையும் பார்த்து ஒரு அசட்டு சிரிப்புடன் வெளியேறுகிறார்.
எல்லோரும் உள்ளே வாங்க என்று சசிகலா கூற எல்லோரும் உள்ளே ஓடுகிறார்கள்.
கருணாநிதிக்கிட்டே பேசற மாதிரி பேசி வாங்கி கட்டிகிடாதீங்க என்று எச்சரித்துவிட்டு போகிறார் சசிகலா.ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார் . பக்கத்து நாற்காலியில் ஓ. பன்னீர்செல்வம், ஜெயகுமார் ஆகியோர். பொன்னையனை காணோம்.
‘வாங்க, ஒண்ணும் பயப்படாதீங்க,அவங்கவங்களுக்கு வேண்டிய தொகுதிகளை கேளுங்க ‘ என்கிறார் ஜெயலலிதா.
திண்டிவனம்: அம்மா …அரசியல் எதிர்காலத்தையே ரிஸ்க் எடுத்து வந்திருக்கேன்.. பார்த்து பண்ணுங்கம்மா…குறைஞ்சது 40 சீட். மற்றும் துணை முதல்வர் பதவி….
ஜெ: முதல்லே உங்க புதுக்கட்சியின் பெயரை சரியாக சொல்லுங்க பார்க்கலாம்
திண்டிவனம்: இந்திரா நேரு காந்தி திராவிட முற்போக்கு….(சற்று குழம்பி) அன்னை சோனியா….
ஜெ: முதல்ல கட்சி பேரை சரியா சொல்லுங்க..அப்புறம் சீாட் பத்தி பேசலாம்….விஜி நீங்க சொல்லுங்க
விஜயகாந்த்:(ஓடி போய் சுவரில் கால் வைத்து எகிறி பின்னங்காலால் டி. ஆர்.பாலுவை நினைத்துக்கொண்டு நாற்காலியை உதைக்கிறார்) அம்மா தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி. அதில் ஆண் வாக்காளர் 2 கோடியே 30 லட்சம்,பெண் வாக்காளர்கள் 2 கோடியே….
ஜெ: (டென்சனாகி) விஜீ…
விஜயகாந்த்: சாரிம்மா… எனக்கு 50 சீட் போதும்மா..அடுத்த தேர்தல்ல நான் முதல்வர் ஆகணும்…
ஜெ முகம் மாறுகிறது.
சந்தானம்: அம்மா எங்களுக்கு வழக்கம் பே ?ல் ஒரு சீட்.எனக்கு மட்டும் போதும்.
கார்த்திக: ஏய்..ஊய்.. என்ன நெனைச்சிடடிருக்கே நீ
ஓ.பன்னீர்: அமைதி..அமைதி…
பொன் குமார், முஸ்லீம் லீக் தலைவர் ஆகியோர் எதுவும் கேட்கவில்லை. அம்மாவாக பார்த்து ஏதாவது தந்தால் வாங்கி கொள்வோம் என்கின்றனர் .
கதவு திறந்து சசிகலா எட்டி பார்க்கிறார்
சசி:சோ வந்திருக்கார் உள்ளே விடட்டுமாா
டிரேட் மார்க் புன்னகையுடன் சோ வருகிறார்.
ஜெ
: என்ன மிஸ்டர் ராமசாமி ..நடுநிலைமையா எல்லாரும் எனக்கு ஓட்டு போடணும்.தீய சக்தியாம் கருணாநிதியை ஒதுக்கணும்னு தலையங்கம் எழுதிட்டாங்களாா
சோ: நேரடியா இல்லை. தமிழ்நாட்டை கருணாநிதி 400 கோடிக்கு விலை பேசிட்டாரு..அதனால் மக்கள் வேறு வழி இல்லாம அ.தி.மு.க விற்கு ஓட்டு போடுங்க அப்படிங்கற மாதிரி எழுதறேன்..
அப்போது கதவு திறந்து காளிமுத்து வருகிறார். கையில் உள்ள மூட்டை பெரிதாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் ஓடிப்போய் உதவி செய் ய மூட்டையை இறக்குகிறார்கள்.
ஜெ முகத்தில் சந்தோஷம்.மூட்டை பிரிக்கப்படுகிறது.எல்லோரும் வைகோவை எதிர்பார்த்திருக்க யாரும் எதிர்பாராவண்ணம் இல.கணேசன் மூட்டைக்குள் இருந்து அசட்டு சிரிப்புடன் வெளிப்படுகிறார்.
காளி: அடக்கொடுமையே ..இந்த ஆளு எப்படிய்யா இதுல வந்தாருா
சோ: நான்தான் சொன்னேன்.காளிகாம்பாள் படத்துல கோவில் உண்டியல்ல விழுந்த ராம்கி திவ்யா உண்ணி குழந்தை எப்படி கடவுளுக்கு சொந்தமோ, எப்படி உண்டியல்ல விழுந்த விவேக் கடவுளின் குழந்தை ஆனாரோ அது மாதிரி வைகோவுக்கு விரிச்ச வலையில் இவர் விழுந்துட்டாரு..இவரை உங்கள் கூட்டணியில் சேர்க்க நான் தான் இவரை இந்த மூட்டைல விழ ஐடியா கொடுத்தேன்..இவரை நீங்க சேர்த்துட்டுத்தான் ஆகணும்…
எல்லோரும் அமைதியாகின்றனர் .
ஜெ:(டென்சனாக) சரி எல்லோரும் கிளம்புங்க..வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போயிட்டே இருங்க.. இரவு ஜெயா டிவில யாருக்கு எவ்ளோ சீட்டுன்னு வரும்..பார்த்துக்குங்க…
சசிகலா வந்து அனைவரையும் வெளியேற்றுகிறார் .
—-
kanakasabapathy@gmail.com
- கடிதம் – ஆங்கிலம்
- அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006): தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!
- நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்
- உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2
- போயஸ்கார்டன் கேட் அருகில்
- திருவிழாவுக்குப் போன ஒரு கதை
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)
- கடிதம்
- அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்
- 365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4
- ஒளியின் மழலைகள் புத்தக வெளியீடு – பிப்ரவரி 25,2006
- தமிழில் உலகப் புகழ் பெற்ற அறிமுக நூல்கள்
- சூபியின் முகமூடி மட்டும்
- அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு
- புலம் பெயர் வாழ்வு (2)
- சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்
- கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு
- நல்ல அறிகுறி
- பட்ட மரம்
- லுா ஸ்
- அதிசயம்!
- சூது
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.
- ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்
- விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்
- மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?
- கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10
- பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!
- எடின்பரோ குறிப்புகள் – 10
- பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- எனக்கொன்றும் பிடிக்கவில்லை
- அலகிலா விளையாட்டு
- ஆதிக்கத்தின் நுண்ணரசியல்
- எனது கனவில் சிரித்தவர்கள்
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்