பேசடி பிாியமானவளே…

This entry is part [part not set] of 15 in the series 20010311_Issue

எட்வின் பிரிட்டோ


என் வாழ்வின் வசந்தக்கால நேரங்களெல்லாம்
உன்னோடு நானிருந்த மணித்துளிகள் தானடி.

உனக்கு மறந்து போயிருக்கும் உன் முதல் புன்னகை.
என் மனசுக்குள் மலர்களோடு மழையடித்த
அந்த நொடி பசுமையாய் என் நினைவில்.

பார்வைகள் மட்டும்தானே பறிமாறிக் கொண்டோம்.
ஆனாலும் எப்படி நீ மொத்தமாய் என்னுள் ?

நம் மெளனங்கள் தெளிவாய் பேசிக்கொள்வதை,
நாம் சத்தமாய் பேசுவோம் வா!

பூட்டி வைத்த நேசம் புண்ணியமில்லை
புாியும்படி பேசிக்கொள்வோம்.

உலகில் சொல்லாமலே செத்துப் போனக்
காதலையெல்லாம் சேர்த்து நாம் காதல்
செய்வோமடி.

என்றைக்காவது உன்னிடம் இப்படியெல்லாம்
பேசவேண்டும் பிாியமானவளே.

ஆனால் என்ன அது… ? உன்னைப் பார்த்தவுடன்
சொல்லிவைத்தார்ப்போல் உன்னைத் தவிர
அத்தனையும் மறந்து விடுகிறேன்.

நீயாவது சொல்லேன்…
என்றைக்காவது ஒரு நாள்…
இப்படியெல்லாம் என்னிடம்…

Series Navigation

எட்வின் பிரிட்டோ

எட்வின் பிரிட்டோ