பெண்ணுடலை எழுதுதல்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நவீன தமிழ்க்கவிதையின் புதுவிதப்பாய்ச்சல் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த புனைவின் பிரதிகளாக வடிவெடுத்துள்ளன. பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆன் நோக்கு பெண் விடுதலையாக கருதப்பட்டது. பெண்ன் உடல், மனம் சார்ந்த உணர்வுகளை அனுபவங்களின், தொன்மங்களின் அடிப்படையில் இலக்கியத்தில் பதிவு செய்வது பெண்ய படைப்புலகமாக அறியப்படுகிறது. எண்பதுகளில் புதையுண்ட வாழ்க்கை தொகுப்பின் மூலம் சுகந்தி சுப்பிரமயனிடமிருந்து இதற்கான மாறுபட்ட துவக்கம் கழ்ந்துள்ளது. தமிழக அறிவுத்துறையில் மிதவாத, தீவிர, சோசலிச பெண்யம் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. தொண்ணூறுகளின் இறுதியில் பன்முகத்தன்மைமிக்க பெண்ய கவிஞர்களின் நெடியதொரு வரிசை பெண் வெளியின் தனித்துவமிக்க படைப்புலக அடையாளங்களோடு வெளிப்பட்டன. வெவ்வேறு நுட்பமான களங்களில் புறமும், அகமும் சார்ந்து இக்கவிதைமொழி அமைந்திருந்தது. கனிமொழி, தாமரை, கல்பனா, பிருந்தா, வெண்லா, சல்மா, இளம்பிறை, ரிஷ’, ரெங்கநாயகி, திலகபாமா, சத்யா, தேன்மொழி, தமிழச்சி, குட்டி ரேவதி, மாலதிமைத்ரி என நீண்டு செல்லும் இவ்வரிசை தலித் பெண்ணுடலை எழுதிச் செல்லும் சுகிர்தாராயின் வழியாகவும் உரையாடலைத் தொடர்கிறது. இத்தகையதொரு பின்னயில் லஜ்ஜா நாவலின் வழியாக சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட தஸ்லிமா நஸ்ரின் எழுதிய ‘ ‘அம்மாவின் மரணம் ‘ ‘ கவிதைகள் அன்மையில் யமுனாராஜேந்திரனால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பையடுத்து இந்து அடிப்படைவாதிகள் கழ்த்திய வன்முறையில் சிறுபான்மை முஸ்லிம்கள் பாதிப்புக்கு உள்ளாயினர். இதன் எதிர்வினையாக வங்காளதேசத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் சிறுபான்மை இந்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். இந்தப் பதிவினை லஜ்ஜா நாவல் பேசியது. வங்காள தேசத்திலும், இலங்கையிலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பத்வா என்னும் மா ர்க்கத் தீர்ப்பு வழங்கி இந்நாவலுக்கு தடைவிதித்தனர். தஸ்லிமா எழுதிய சுயசரிதை நூல்கள் சிறுமியாயிருத்தல், அடங்காதகாற்று, பேசு, இருளில் உள்ளிட்டவையாகும். பால்யகால வாழ்வு துவங்கி புகலிடச் சூழல் வரை வாழ்பவனுபவங்கள் ஞாபகங்களின் லக்காட்சியாய் உருமாறுகிறது. எவ்வித ஒளிவு மறைவுமற்று ரகசியங்களின் வார்த்தைப்பாடுகளாய் தனது பாலுறவு அனுபவங்களைச் சொல்லிய ‘பேசு ‘ சுயசரிதை நூலுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இஸ்லாமிய ஷரீஅத் தொடர்பான தஸ்லிமாவின் பேட்டியும், எதிர்வினைகளும், தீவிர ஜனநாயகப்பூர்வமான விவாதத்திற்கு இடமளிக்காது பயமுறுத்தலுக்கும், கொலைத்தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டது.

தஸ்லிமாவின் கவிதைகள் வாழ்தலுக்கும், மரணத்திற்கும்

இருப்பிற்கும் இருப்பின் குலைவிற்குமான

சிக்கல்களில் ஆட்பட்டமனத்தின் குரலை பேசுகின்றன.

காற்றில் புலம்பலிலும் மிருகங்களின் தாடையிலிருந்து வெளிப்படும் ஊளைக் காற்றிலும் மரணத்தின் ஒலி ரம்பியிருக்கிறது. புல்லாங்குழலின் இசை மட்டும் இல்லாமல் போய்விட்ட லமும், மனமும் வேதனைப்படுகிறது. இது வாழ்தலின் அனுபவங்களால் கண்டறியப்பட்டவை. புற நெருக்கடிகளால் சிதறடிக்கப்பட்ட ஆளுமையின் மீதான தாக்குதல்களில் இருப்பின் குலைவு உறுதிப்படுத்தப்படுகிறது. காதல், குடும்பம், உறவு, சமூகம், தேசம் என எல்லாவற்றின் புறத்திலிருந்தும் உருவாகிற ஏமாற்றத்தின் கசப்பு கவிதையெங்கும் வியாபித்திருக்கிறது.

நீ எனக்கு விஷத்தைக் கொடுத்தாய்,

நான் உனக்கு எதைத் திருப்பித் தருவது

என துயரோடு கேள்வி எழும்புகிறது.

தனிமையில் துயரத்திற்குள் மூழ்கிக் கிடக்கும் உடலின் மொழியை தஸ்லிமாவின் கவிதைகள் படிமப்படுத்துகின்றன. சொந்த உடலின் மொழியைப் படிக்க இயலாத ஏலாமையும், தீராத வேட்கையின் முடிச்சுகளை அவிழ்க்க முடியாத காமத்தின் தவிப்பும், காதலின் பிரிவும், தீண்டுதலின் இன்பமும் உணர்வுப் பிரவாகமும் உடல்சார்ந்த வேட்கையின் பயணமாய் இடையறாது கவிதைகளில் வாழ்கின்றன.

எனது நீர்தளும்பும் பூப்பு லையை உனக்கென இடையறாது வார்த்தேன்.

அதை றுத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை.

திடாரென்று நீ காணாமல் போனாய். உன்னைத் தேடினேன்.

சொற்களுக்குள் அடங்காத இன்பத்தை, வாரி வழங்குவதும், பிறகு வெற்றிடத்தில் உழல்வதுமான உடலின் தனிமை கழ்வாகிப் போகிறது. பிரிந்து போகுதல், தேடுதல், துக்கம் கொள்ளுதல், தன்னை அழித்தல் என்பதாக நீட்சியுறும் உணர்ச்சிகளின் தழும்பல்களில் கவிதை தன்னை ரப்பிக் கொள்கிறது. உடலின் தனிமை இன்னொரு லையில் சொந்த மண்ணை விட்டு துரத்தப்பட்டபின் பெறப்பட்ட புகலிட வாழ்வின் தனிமையாகவும் உருமாறுகிறது.

பெண்ணுடல் மீதான ஒடுக்குமுறை ஆன் மனோபாவம், கலாச்சாரம், சமயக் கருத்துருவாக்கம் சார்ந்து கழ்த்தப்படுகிறது.

கரப்பான் பூச்சியொன்று தொப்புளை நோக்கி ஊர்ந்து வருகிறது.

விஷமுள்ள எறும்பு தொடைகளைக் கடிக்கிறது. குளவியின் கொடுக்கு எல்லாவற்றையும் விடுத்து முலைக்காம்பை நோக்கி பறந்து வருகிறது.

இப்படியானதொரு காட்சிப்படுத்தலில் பெண்ணுடல் எல்லா லைகளிலும் பாலியல் நுகர்வுப் பண்டமாக்கப்பட்டிருக்கும் வன்முறை சித்தரிக்கப்படுகிறது.

நாம் வாழும் சமூகத்தின் குடும்ப அமைப்புகளில் கணவனின் சகலவித அதிகாரத்திற்கும் ஆட்படும் பெண்ணுடலின் வதைப்படுதலை தஸ்லிமாவின் மற்றுமொரு கவிதை சொல்லிச் சொல்கிறது. கணவனின் கட்டுப்பாட்டில் பெண்ணுடல் இருப்பதின் நோக்கம் அவன் விரும்பியபோது முகத்தில் காறித்துப்ப, கன்னத்தில் அறைய, கைகளை வெட்ட, தொடைகளை கோடரியால் பிளக்க, தேவைப்படும்போது கயிற்றில் இறுக்கி தூக்கில் தொங்கவிட என்பதாக வதைப்படுதலின் வலிகள் வரைந்து காட்டப்படுகிறது.

இப்பரப்பினூடே பெண்ணுடல் பாலியல் வன்முறைக்களமாய் மாறிப்போகும் தருணங்களை பால்யகால அனுபவங்களோடு சொல்ல முற்படுகையில் சிறுமியாயிருக்கும்போது ராஜாவின் அரண்மனையைக் காண்பிக்க அழைத்துச் சென்ற மாமா உடம்போடு உடம்பிணைத்து வேட்கை தத்து ன்றதும் குரூரமான லைகளின் உச்சமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

திருமண உறவுகளில் ஆணை முதன்மைப்படுத்தி இயங்குகிற கருத்தியல் செயல்பாடுகளான பலதாரமணமும், விவகாரத்தும் பெண்ணுக்கு எதிராக இயங்குவதை பொது அனுபவ யதார்த்த மொழியில் ஒரு கவிதை கட்டமைத்து உரையாடல் செய்கிறது.

முதல் மனைவி கர்ப்பந்தரிக்கவில்லை விவாகரத்து செய்தான்.

இரண்டாம் மனைவி பெண் குழந்தையைப் பெற்றாள் என விவாகரத்து செய்தான். மூன்றாம் மனைவி வரதட்சணை கொண்டு வரவில்லையென விவாகரத்து செய்தான்.

வீடு திரும்பி இவன் நாலாவது மனைவியை அடிப்பான்.

ஓரிரு பச்சை மிளகாய்களுக்காக

ஒரு பிடி சமைத்த உணவிற்காக என அக்கவிதை எளிமையான தோற்றத்தில் இடம் பெறுகிறது. குடும்ப றுவனத்தில் மறைபொருளாக செயல்படுகிற நுண் அதிகாரம் குறித்த கவனிப்பாகவும் இதனைக் கொள்ளலாம். பெண்ணுக்காக படைப்பாற்றல் மிக்க தன்னிலையும் சுயமும் வீடும் என்கிற றுவனக் கட்டமைப்புக்குள் அழிக்கப்பட்டு காய்கறி கணக்கு எழுதவும், மதியச் சாப்பாட்டை சமைக்கவும் பீங்கான் பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் வாங்கி வருபவளாகவும் மட்டுமே பெண் உருமாற்றப்படுவதையும் தஸ்லிமா கவிதையில் அடையாளப்படுத்துகிறார்.

தன் அனுபவம் தாண்டி சமூக வெளியில் இயங்கும் பெண்களின் துயருறும் உலகத்தையும் படைப்பாக்கித் தருகிறார். சுத்தியலோடு கல்லுடைத்துக் கொண்டிருக்கும் பெண்கள், டாக்கா பல்கலைக் கழக திறந்த வெளிப்பூங்காவில் குறைந்த விலைக்கு தமது உடல்களை விற்கும், பெண்கள், சட்டை தைத்து நள்ளிரவில் சேரிகளுக்கு திரும்பும் பெண்கள், என லவொளிரும் இரவுகளை ரசித்து அனுபவிக்க முடியாமல், இருளின் கைகளி_ d6 பட்டு தெருப்பொறுக்கிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுபவர்களாகவும் இப்பெண்கள் மாறிப்போகிறார்கள். விளிம்பு லையில் வாழும் இத்தகைய பெண்களின் தீராத ரணங்கள் வரிகளின் வடிவமாய் அல்லல்படுகின்றன. பின்மாலைப்பொழுதில் சந்தித்த கெட்டக் கனவினோடுள்ள உரையாடல் ஒரு மாற்று வடிவ உத்தியின் கூறுகளாக மாறுகிறது.

மரணத்தின் வலியை எழுதிச் செல்கையில் அம்மாவின் மரணம் மனதை துயரப்பட வைக்கிறது. மரபான சிந்தனை முறையில் இது கழ்ந்தாலும் அம்மாவின் கடைசி மூச்சைப் பற்றியதும் அம்மா சார்ந்த நம்பிக்கைகளுடன் சொர்க்கத்தின் தோட்டத்தில் அவள் நபி முகம்மதுவுடன் சேர்ந்து நடக்கும் புனைவுலகப் பயணமும் தஸ்லிமாவின் கவிதைகளில் மாறுபட்டு பதிவாகி உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் – வங்காளதேசம் என ஒரு தேசத்தின் பிளவு குறித்த துக்கமும், பிளவு படாத லம் குறித்த மூதாதையர்களின் கனவை மீட்டெடுத்தலும்கூட ஒருங்கே கவிதைப் பரப்பில் கழ்த்திக் காட்டப்படுகிறது. மனிதர்களுக்கிடையே நீண்டு விரிந்து ற்கிற மதமெனும் கசடும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட சுழற்கம்பி வேலிகளும் கூட மனத்தடையை உருவாக்குகின்றன.

தஸ்லிமாவின் படைப்பு ரீதியான செயல்பாடுகளுக்கு எதிராக உயிர் மீதான அச்சத்தை உருவாக்கும் வகையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டல் அமைந்தது. சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்து வாழும் லை ஏற்பட்டது. எனது உயிரை காப்பாற்ற ஓடி ஒளியவோ, பத்வா வழங்கவோ இங்கு யாருமீல்லை என்றாலும்கூட சொந்த மண் மீதான இழந்து போன ஞாபகப்பதிவும், ஏக்கமும் தொடாகிறது. அந்ய தேசத்திலும் வேரற்ற நபராக வாழ்கின்ற வெறுமையை தஸ்லிமா தன் கவிதைகளில் ரப்புகிறார்.

சமகால வாழ்வின் கழ்வுகள் குறித்ததான பதிவில் ‘நூர்ஜஹான் ‘ கவிதை முக்கியதொரு பரிணாமத்தைச் சொல்கிறது. இஸ்லாம் முன்வைக்கும் அரபுநாடுகளில் பின்பற்றப்படும் ‘குற்றவியல் சட்ட தண்டனை முறைகளுக்கு எதிர்மறையான குரலாக ஒலிக்கிறது. இது வங்காளதேசத்தின் பாலியல் பிறழ்வு குற்றம் சாட்டப்பட்ட நூர்ஜஹான் இடுப்பு வரை மணலில் புதைக்கப்பட்டு – ரஜம் என்னும் கல்லெறித்தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் குறித்ததாகும். நூர்ஜஹான் மீது மத அடிப்படைவாதிகள் எறிந்த ஒவ்வொரு கற்களும் தன் தலையில், நெற்றியில், மார்பில் வீழ்வதாக உணர்கிறார்.

பெண்கள் மீது கழ்த்தப்படும் கருத்தியல் மற்றும் உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் லை, றுவப்பட்ட ஒழுங்குகள், அடக்கி வைக்க பயன்படுத்தப்படும் மதச்சட்டங்கள், குடும்ப உறவுகளில், காதலில், காமத்தில், செயல்படும் அதிகாரம் என்பவற்றின் மீதான கிளர்ந்தெழுதலும், வதைப்படுதலும் தஸ்லிமாவின் படைப்புலகமாக மாறியுள்ளது.

எதிர்ப்புகளின் தடங்களை மனோபாவரீதியாக முன்ன்று எதிர்கொள்ளும் உளவியல்ரீதியான தன்னம்பிக்கை இருப்பதால்தான் சொந்த மண்ணைவிட்டு துரத்தப்பட்டபோதும் எழுத்துகளுக்கு தடைவிதித்து, கொலைத்தண்டனை தீர்ப்பு வழங்கியபோதும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த போதும், அந்ய நாடொன்றுக்கு புலம் பெயாந்து புகலிடச் சூழலில் வாழ்வை எதிர்கொண்ட போதும் தன்னம்பிக்

’80க கொண்டு தஸ்லிமாவால் இயங்கமுடிகிறது. இதனை அவரது கவிதை வரிகளிலிருந்தே நாம் உட்செரித்துக் கொள்ள முடியும்.

எனக்கு முன்னால் வேறெதுவும் இல்லை.

ஒரு நதி மட்டும் தான்

நான் அதைக் கடப்பேன்.

எவ்வாறு நீந்துவதென்பதும் எனக்குத் தெரியும்.

—-

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்