பூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

மைக்கல் ஷிர்பெர்


நமது சூரியமண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறிய ஒரு கிரகத்தை வானியலாய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள். நம் பூமியை விட சுமார் ஏழரை மடங்கு அதிக எடையுள்ள இந்த கிரகம், நம் பூமியைவிட இரண்டு மடங்கு விட்டமுள்ள இந்த கிரகம், நாம் கண்டறிந்துள்ள கிரகங்களிலேயே கல்தரையுள்ள கிரகமாக அறியப்பட்டுள்ளது.

‘கல்தரையுள்ள கிரகங்களை அறிவது நம் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இது போல இன்னும் பல கல்தரையுள்ள கிரகங்களை நாம் காணப்போகிறோம். ‘ என்று வாஷிங்டனில் உள்ள கார்னகி இன்ஸ்டிட்யூஷனின் பால் பட்லர் தெரிவித்தார். ‘இது பூமியின் உறவினன் ‘ என்று இவர் தெரிவிக்கிறார். இதுவரை சுமார் 150 சூரியமண்டலத்துக்கு வெளியேயுள்ள கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை நம் வியாழன் போன்று வாயு கிரகங்கள். சமீபத்தில்தான் வானியலாய்வாளர்கள் சிறிய அதிக எடையுள்ள கிரகங்களை அறிய ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாம் எதைக்கண்டுபிடிக்க முடியுமோ அதன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே செல்கிறோம். நம் பூமி போன்ற கிரகங்களை கண்டறிய நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்டாவன் வாக் தெரிவிக்கிறார்.

இந்த புதிய கிரகம் கிளைஸ் 876 (Gliese 876) என்ற நட்சத்திரத்தை சுற்றிச் சுழல்கிறது. இது நம் சூரியனிலிருந்து 15 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிற M dwarf நட்சத்திரம். இதனைச் சுற்றி இரண்டு வியாழன் அளவுக்கு பெரிய கிரகங்கள் சுற்றி வருவது ஏற்கெனவே கண்டறியப்பட்ட ஒன்று. நட்சத்திரம் மிக மெல்லியதாக ஆடுவதிலிருந்து இந்த மூன்றாவது கிரகத்தையும் கண்டறிந்துள்ளார்கள். இந்த ஆட்டம் மூலம், இந்த கிரகத்தின் எடையையும், இது சுமார் 1.94 நாட்களில் இந்த நட்சத்திரத்தை சுற்றி வந்துவிடுகிறது என்பதையும் அறிந்துள்ளார்கள்.

இதன் சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளதால், 400-750 செல்சியஸ் டிகிரி (200-400 டிகிரி செல்சியஸ்) வெப்பம் இருக்கலாம். இந்த வெப்பத்தினால் இதில் உள்ளவை ஆவியாகியிருக்கலாம், இது பெரும்பாலும் கல்தரையாகத்தான் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த கிரகத்தின் எடையால் இதனால் ஒரு காற்றுமண்டலத்தை வைத்துக்கொள்ள முடியும் என்றும், இதில் இரும்பு சிலிக்கான் போன்ற அடிப்படையுடன் இருக்கும் என்றும், இதில் 200-400 டிகிரி வெப்பம் இருப்பதால், நீராவியும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள்.

A paper detailing these results has been submitted to The Astrophysical Journal

இந்த கட்டுரை அஸ்ட்ரோபிஸிகல் ஜர்னலில் வெளிவந்தது.

space.com

Series Navigation

மைக்கல் ஷிர்பெர்

மைக்கல் ஷிர்பெர்