புறம்போக்கு

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

வே பிச்சுமணி


பலருக்கு
வசைச்சொல்
சிலருக்கு
அசையாசொத்து

அரசு தேவைக்கு
வைத்திருக்கும்
நிலம்
புறம்போக்கு

ஆக்கிரமகாரர்களுக்கு
அரசு
நிலமெல்லாம்
புறம்போக்கு

புரோக்கர்களுக்கு
அட்சயபாத்திரம்
அரசியல்வாதிகளுக்கு
ஓட்டு வங்கி
நீக்கு போக்கர்களுக்கு
வீட்டு மனை
ஏழைகளுக்கு
மலிவு வாடகை வீடு
அதிகாரிகளுக்கு
ஏ.டி.எம்

பட்டா
வரம் கொடுக்கும்
மிட்டாய்காரன்
பின்
குழந்தைகளாய்
வலம் வருவர்

அரசாங்கமே
கேட்டாலும்
அசைய மாட்டார்கள்

மாற்று இடம்
தருகிறோம்
மாற மாட்டார்கள்

இருக்கும் மட்டும்
இருப்போம்
த்ததுவவாதிகள்

விளைநிலத்தை
டாடாவுக்கு
பட்டா போட்டு
விவசாயிக்கு
டாட்டா
காட்டியவர்கள்

நீராழி மண்டபமாய்
ஏரி நடுவே
வீடு
கட்டியவர்களுக்கும்
பட்டா
கேட்கிறார்கள்


Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி