புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

அறிவிப்பு


புதுச்சேரி அரசின் கலை,பண்பாட்டுத்துறை 27-12-2007 முதல் 06-01.2008 வரை புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.புதுச்சேரியில் உள்ள ஆனந்தா திருமண நிலையத்தில் காலை 11-00 மணி முதல் இரவு 9-00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் வாங்கப்படும் நூல்களுக்கு 25 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம்.

தமிழகத்தின் முன்னணிப்பதிப்பகங்கள் பல பங்கேற்றுள்ளன. இதற்கான தொடக்கவிழா இன்று 27-12-2007 காலை 11 மணிக்கு நடந்தது.புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு இராதாகிருட்டிணன் அவர்கள் தலைமையேற்றார்.கலை,பண்பாட்டுத்துறை இயக்குநர் பானுமதி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.கல்வி அமைச்சர் மாண்புமிகு ஷாஜகான் அவர்கள் கலந்துகொண்டுவாழ்த்துரைத்தார்.

புதுச்சேரியில் நடைபெறும் கண்காட்சியில் தமிழ்,தெலுங்கு,இந்தி.பிரெஞ்சு,ஆங்கிலம் உள்ளிட்ட பலமொழி நூல்கள் காட்சிக்கு வைக்கப்படுள்ளன.பல இலட்சம் வாசகர்கள் இக்கண்காட்சியால் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி.

மின்னஞ்சல் : muelangovan@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு