- கால நதிக்கரையில்……(நாவல்)-19
- நாங்கோரி என்ற உறுப்பினர்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 3
- கவிதைகள்
- பூரண சுதந்திரம் ?
- காதல் நாற்பது – 34 உன்னை நாடும் என்னிதயம் !
- Letter sent to The Indian Embassy Bangkok Thailand
- தியேட்டர் லாப் – சங்கீதப் பைத்தியம் – பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றம்
- பிழைதிருத்தம் 12. – நகர்புறம் – நகர்ப்புறம்
- சிங்கையில் இந்தியச் சுதந்திர தினவிழா
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4 ஆண்டனி & கிளியோபாத்ரா முடிவுக் காட்சி
- மண்ணின் பாட்டு
- பத்வா என்றோரு நவீன அரக்கம்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 23
- சுதந்திர தின நாள்
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் ! (ஜூலை 17, 2007)
- அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி
- பள்ளிகளில் இலக்கியக் கல்வி: வீழ்ந்துவரும் விழுமியங்கள்
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள் – பொய்க்கப்போகிற நம்பிக்கை எரிநட்சத்திரங்கள்
- அதனால் என்ன…
- தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 – 11.06.1995)
- புரட்சியும், சிதைவும்
- எதிர் எதிர் அணிகள் இணையும் புள்ளிகள்
- இந்தியாவின் மணியாண்டுச் சுதந்திர நாள்
- சக்தி சுரபி : உயிரி – சமையல் எரிவாயு கலன் அறிமுகம் – சமையலறைக் கழிவிலிருந்தே சமையல் எரிவாயு
- சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
- மரணயோகம்
- இலை போட்டாச்சு – 33 அக்காரவடிசில்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி!
- முடிவு
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- முந்திரி @ கொல்லாமரம்
- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
கரு.திருவரசு

“நகர்புறம்” என்பதும் “நகர்ப்புறம்” என்பதும் ஒருபொருள் சொற்களா?
நகர்புறம் என்றால் “நகரும் புறமும்” என்றும், “புறத்தே நகர்” என்றும் பொருள்படும்.
“நகர்” என்பது பெயர்ச் சொல்லாக வரும்போது ஊர், நகர், நாடு என்ற வரிசையில் வரும் நகரமாகவும், அதுவே வினைச் சொல்லாக வரும்போது, நீ இருக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் “நகர் – நகர்ந்துகொள்” என்றும் பொருள்படும்.
நகர்புறம், என்பதையும் நகர்ப்புறம் என்பதையும் ஒன்றுபோலப் பயன்படுத்தி நாம் குழம்பிப் போவதோடு, மற்றவரையும் குழப்பிக் கொண்டிருக்கிறோம்.
‘நகர்’ என்பது நகரம் என்றும் நகர்ந்துகொள் என்றும் பொருள்படும்.
‘புறம்’ என்னும் சொல்லுக்கு வெளியிடம், முதுகு, பக்கம், வீரம் போன்ற பல பொருள்கள். இங்கே நாம் புணர்ச்சி விளக்கத்துக்காக “பக்கம்” எனும் பொருளைமட்டும் எடுத்துக்கொள்வோம்.
‘நகர்ப்புறம்’ என்றால் நகரமும் நகரத்தைச் சார்ந்த பக்கமும் என்று பொருள்.
“நகரத்தின் வளர்ச்சி அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் அதன் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எழுதும்போது அல்லது பேசும்போது ‘நகர்புறத்தின்’ என்பதைப் பயன்படுத்துவது தவறு. “நகர்ப்புறத்தின்” என எழுதவேண்டும், பேசவேண்டும்.
நகர்புறம் = நகரும் புறமும்
நகர்ப்புறம் = நகரப் பகுதி
thiruv36@yahoo.com