This entry is in the series 20081002_Issue

தாஜ்


முன்னே பின்னே யென
நண்பர்களை
காலம் ஜீரணித்து விட்டது!
விழி நிலை
உயர்ந்திருந்த போது
அவர்களின் பாதங்கள்
மண்ணில் பதிய
பார்வை
வான விளிம்பை
ஊடுருவும்!
இன்றைக்கு அவர்கள்
குத்திட்டு நிற்கும்
மரங்களின் நிழலில்
எடுத்ததை விழுங்கும்
வினோதங்கள்!
மறைந்துப் போனவர்கள்
இறந்தே இருக்கலாம்
நினைவு தினங்களாவது
நெகிழ்ச்சியை தந்திருக்கும்!
———————————–
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation