பாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அதன் தாத்பரியம் தெரிந்திருக்கலாம். னால் ஒரு காலத்தில் இந்த தேசத்தில் அந்த தீபத்திருநாளைக் கொண்டாட நம் முன்னோர் செய்த பலிதானம் தீபப் பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரூவரின் ஞாபகத்திலும் இருக்கவேண்டியது அவசியம். நமது மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் கூறுவது போல நாம் பிறரின் விடுதலையை மதித்தவர்கள். நம் வழிபாட்டுமுறையை நம் வாழ்க்கை முறையை பிறரும் ஏற்கவேண்டும் என நிர்ப்பந்திக்காதவர்கள் நாம். னால் நம் மீது படையெடுத்து வந்த அன்னியர் நம்மை நயவஞ்சகமாக வென்று அவர்களது வழிபாட்டு முறைகளை நம்மை ஏற்கும்படி கட்டாயப்படுத்திய போது நம் முன்னோர்கள் மகத்தான தியாகங்கள் மூலம் நமது அழிவற்ற

சனாதன தர்மத்தை பாதுகாத்தனர். நம் தர்மம் சனாதனமாக ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அறுபடாத செழுமையுடன் கற்பக விருட்சமாக விளங்க எத்தகைய பெரும் ன்மாக்கள் தங்கள் இதயக்குருதியை அதன் வேர்களில் அர்ப்பணித்தனர் என்பது நம் அனைவரும் ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய ஒன்று. அவ்வாறே தீபத் திருநாளாம் தீபாவளியன்று அத்திருநாளைக் கொண்டாடும் உரிமையைக் காக்க தம் உயிரை அர்ப்பணித்த ஒரு மகாஞான பலிதானியை நாம் இத்தீப திருநாளன்று நினைவு கூர்வோம்.

1662 இல் பஞ்சாபின் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள கைபோவால் எனும் கிராமத்தில் துலாத்-தயா கவுர் தம்பதிகளுக்கு புதல்வனாக மணிசிங் பிறந்தார். சத்குரு தேஜ்பகதூர் சாகேப்பை சந்திக்க அவர்தம் பெற்றோர் ஆனந்தபுரி சென்ற போது உடன் சென்ற மணிசிங் குருவின் அருள் கிரகணங்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். தம் பெற்றோரிடம் தாம் இனி வீடு திரும்ப முடியாது என்றும் குருவின் பாத சேவையே இனி தமது வாழ்க்கை என தெளிவாக அறிவித்தார் அப்பெருமகனார். தம்மகனை மீண்டும் வீடு அழைத்து செல்லமுடியாது என தெளிவாகப் புரிந்து கொண்ட அப்பெற்றோர், தேஜ்பகதூரின் தர்ம பத்தினியான மாதா குருஜியிடம் தம்மகனை கவனிக்கும்படி கூறி விடைபெற்றனர்.

குருமாதா தம் புதல்வனைப்போலவே மணிசிங்கைக் கவனித்துக்கொண்டார். குரு மைந்தரான குரு கோவிந்த சிங்கின் வயதேயான இச்சிறுவர் குருகுடும்பத்தில் ஒருவராகவே வளர்ந்து வரலானார். பின்னர் காஷ்மிரத்து பண்டிதர்தம் உரிமை காக்கவும் ஹிந்துஸ்தானின் தர்மம் காக்கவும் சத்குரு தேஜ்பகதூர் தம்மையே பலிதானம் செய்தார். இரத்த வெறி தீராது பாரதம் முழுவதும் இருள் பரப்ப நினைத்த ஈன ஆட்சியாளருக்கு பஞ்சாப் பெரும் சவாலாகவும் தர்மத்தின் அரணாகவும் விளங்கியது. குரு கோவிந்த சிங் இச்சூழலில் கால்ஸா எனும் தொண்டர் படையைத் தோற்றுவித்தார். விக்கிரம் சகாப்தம் 1756 ம் ஆண்டு வைசாக திருநாள் பாரத தர்மத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திருநாளாகும். அன்றுதான் புனிதமான கால்ஸா உருவானது. தருமத்தின் பொன்னிறக் கொடி உயர்ந்தது. அந்நாளில் குரு கோவிந்த சிம்மரின் திருக்கரத்தால் அமிர்தம் அருந்தி தர்மம் காக்கும் மகத்தான தூய சீடர் படையில் முக்கிய அங்கமாக இணைந்தார் பாயி மணிசிங்.

மதவெறி பிடித்த அன்றைய ஆட்சியாளர் வீர சத்குரு கோவிந்த சிங்கின் குடும்பத்தையே அழிக்கத் துணிந்தனர். 1704 ம் ஆண்டு டிசம்பர் 20 ம் தேதி குருவின் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குருவின் குடும்பத்தை பாய்மணிசிங் காப்பாற்றினார். பின்னர் கால்ஸா அமைப்பில் ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் பணியை குருமாதா சுந்தரிஜி பாய் மணிசிங்கிற்கு அளித்து அவரை அமிர்தசரஸிக்கு அனுப்பினார். இவ்வாறு 1721 இல் அமிர்தசரஸிற்கு திரும்பிய பாயி மணிசிங் கால்ஸாவில் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு பவித்திரமான பொற்கோவிலாம் ஹரி மந்திர் சாகேப்பிலும் திறமையான நிர்வாகம் ஏற்பட வழிவகுத்தார். அவுரங்கசீப் தம் மக்களை கொன்றிருந்த போதிலும் அவுரங்கசீப்பின் மகனுக்கு அடைக்கலம் அளித்து தீயவர் நாண நன்னயச் செயல் புரிந்த மகாத்மா குருகோவிந்தசிங். பின்னாளில் அவர் பத்தானியனால் கோழைத்தனமாகக் கொல்லப்பட்ட பின்னரும் அன்றைய மதவெறி பிடித்த ஆட்சியாளரருக்கு கால்ஸாவின் மைந்தர்களைத் துன்புறுத்துவதில் நாட்டம் குறையவில்லை. குரு கோவிந்தர் சமாதியடைந்துவிட்டதால் இனி மிக எளிதாக சீக்கியர்களை அடக்கிவிடலாம் என கருதிய அவர்கள் கடுமையான அடக்குமுறைகளை பஞ்சாபில் அவிழ்த்துவிட்டனர். அமிர்தசரஸுக்கு சீக்கியர் வரவும் புனித தடாகத்தில் நீராடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தீபாவளித்திருநாளை அமிர்தசரஸில் கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாயி மணிசிங் அன்றைய மொகலாய ஆளுநராக இருந்த ஸகாரியா கானுக்கு தீபாவளித் திருநாளை கொண்டாட அனுமதி வழங்கக் கோரிக்கை விடுத்தார். தீபாவளித்திருநாளுக்கு முன்னர் 5000 பணம் கொடுத்தாலே தீபாவளி கொண்டாட அனுமதி வழங்கமுடியும் என தெரிவித்தான் ஸகாரியா கான். சொந்த நாட்டின் தர்மத்தின் ஒளி ஏற்றும் தீபத் திருநாளை கொண்டாட மாற்றானுக்கு பணம் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் பாயி மணிசிங் அதற்கு சம்மதித்தார். ஏனெனில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் அமிர்தசரஸிற்கு ஹரி மந்திரத்திருத்தலத்திற்கு தீபத்திருநாளைக் கொண்டாட வருவார்கள். அவர்களிடமிருந்து காணிக்கைகளை சேகரித்து மிகக் குறுகிய காலகெடுவுக்குள் இந்த மிக அதிகமான அநியாயக் கட்டணத்தை செலுத்தமுடியும் என அவர் எண்ணினார். இதனை அறிந்து கொண்ட ஸகாரியா கான் அமிர்தசரஸிற்குள் சீக்கியர் வருவதை தடைசெய்தான். ஸ்காரியா கானின் அடிவருடியும் கூலிப்படையாளனும் துரோகியுமான லக்பத்ராய் மொகலாய இராணுவத்தை ஏவி திருவிழாவிற்கு வந்தவர்களை விரட்டினான். பின்னர் ஸகாரியா கான்

கூறிய கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி பாயி மணிசிங்கை கைது செய்தான். எந்த தீபாவளித்திருநாளைக் கொண்டாட பாயி மணிசிங் அனுமதி கேட்டாரோ அதே திருநாளன்று 1738 ம் ண்டு காஸியின் முன்னிலையில் ‘விசாரணை ‘ நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. பாயி மணிசிங் தமது தர்மத்தை துறந்து ஸகாரியாகானின் மதத்தை ஏற்க வேண்டும் இல்லையேல் அவரது உடல் அங்கங்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்படுவார் என தீர்ப்பளிக்கப்பட்டது. அச்சித்திரவதை அனைத்து மக்கள் பார்வையிலும் நிறைவேற்றப்பட்டது. சீக்கிய அன்னைகள் பின்னர் தங்கள் குழந்தைகளுக்கு கூறுவார்கள்: ‘ தண்டனையை நிறைவேற்றுபவன் பாயி மணிசிங்கின் சில விரல்களை வெட்டினான். பின்னர் கைகளை வெட்ட நிமிர்ந்த போது, பாயி மான் சிங் அன்புடன் அவனை அழைத்து, ‘ஒவ்வொரு அங்கத்தையும் துண்டாக்க வேண்டுமென்பது கட்டளையல்லவா! இதோ சில விரல்களை விட்டுவிட்டாயே அதையும் வெட்டிவிட்டு பின்னர் கரத்தை வெட்டு இல்லையேல் உடலை சோதிப்பவர்கள் உன்னை கடமையை சரிவர செய்யவில்லை என தண்டிக்கக்கூடும் ‘ எனக் கூறினார். அனைவரும் அதிசயத்துடன் நோக்க அம்மகான் தம் அங்கத்தையே துண்டுதுண்டாக்கி பாரத தர்மத்திற்கு பலிதானமளித்தார். னால் அவர் தமது தர்மத்தை என்றென்றும் விடவில்லை. ‘ இப்புனித பலிதானம் வீணாகவில்லை என்பதை வரலாறு கூறும். பாயி மணிசிங்கின் மரணத்தின் பின்னர் 42 ண்டுகளுக்குப் பின்னர் ரஞ்சித் சிங் எனும் மாவீரர் தோன்றியதும் அன்னியரை அவர் விரட்டியடித்து தர்மத்தின் பொற்கொடியை பாரதத்தின் ஆப்கானிய எல்லை வரை பறக்க வைத்தமையையும் ப்கானியர் அவருக்கு கப்பம் கட்டி வாழ்ந்தமையும் வரலாறு கூறும் செய்திகள். இன்று நாம் கொண்டாடும் தீபாவளித்திருநாளின் அதிகாலையில் புனித நீராட, பாரதத்தின் புண்ணிய நதிகளின் பெயர்சொல்லி நம் விரல்கள் நீரைத் தொடும் அத்தருணத்தில் ஒவ்வொரு விரல் முதல் தம் அங்கங்கள் அனைத்தையு தர்மத்திற்கு ஈந்த அம்மகான் பாயி மணிசிங்கை நாம் நினைவு கூர்வோம். தியாகங்களால் வளர்க்கப்பட்ட இப்பண்பாட்டை சொத்தாகப் பெற்றிருக்கும் நாம் அப்பண்பாட்டிற்கு நம்மை நாமே தகுதியானவர்கள் ஆக்கிக் கொள்வோம்.

தன்னுடை எலும்பை தாமே ஈந்திட்டார்

ததீசி எனும் வேத ரிஷி கதையைக்

கேட்டோம்

நம்பிடும் ஆற்றலற்றோம்.

சரித்திரத்தின் கண் முன்

தேச விடுதலை வேள்வி தன்னில்

மகான் மணிசிங்

அங்கங்கள் ஆகுதியாய்

அளித்திட்ட காட்சி கண்டோம்

தர்ம தேவதைக்கே தர்மம்

தன்னையே தந்த பெருமான்

சரித்திரம் உணர்ந்தோம் அன்றே

வேத சத்திய த்தை ஏற்றோம்

அழிந்திடா வேத தர்ம விருட்சமே

எங்கள் தேச இதயமே – உன்

வேர்களில் எங்கள் இரத்தம் தனையே

பாய்ச்சும் பெரும் பேறு இல்லையாகின்

வாழ்வினை உனக்கெருவாக

மாற்றிடும் வரத்தினை தா

—-

Series Navigation