பழைய மொந்தையில் பழைய கள்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

சூபிமுகமது


வகாபி பழைய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றி வியாபாரம் செய்கிறார்.என்ன செய்வது..
விவாதங்களில் அவர் சிக்கிக் கொண்டது அப்படி..

அப்ரஹாவின் யானைப்படையை சிறுபறவைகள் கல்லெறிந்து கொன்ற அதியசத்தை விஞ்ஞானபூர்வமாய்
விளக்குங்கள் என்று கேட்டால் நபிமுகமது பிறந்ததுதான் அந்த யானை ஆண்டு என உளறுகிறார்.

இஸ்லாத்திற்கும் சமாதி வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு விளக்கவில்லையாம்..திண்ணையில் ரசூலின் தெளகீது பிராமணியத்தின்(27/1/06)தர்கா பண்பாட்டு அரசியல்(10/2/06)சூபிசம் வகாபிசம்(17/2/06)உள்ளிட்ட பல படைப்புகளில் இதற்கான பதில் உள்ளது.ஹெச்.ஜி.ரசூல் தெரிவித்ததை நானும் உறுதிபடுத்துகிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில் தர்காக்களின் சமாதி வழிபாட்டிற்கு ஆதாரம் முஸ்லிம்களின் கபா வழிபாடே ஆகும். அங்கு அல்லாவை வழிபடுதல் மேற்தள அர்த்தம். நபி இபுராகீமை வழிபடுதல் ஆழ்நிலை அர்த்தம்.

ஹரம் எல்லைக்குள் அஷ்டகோண வடிவ மகாமே இபுராகீம் இதில் இரண்டு ரக அத் தொழவேண்டும். அவ்வெல்லைக்குள்தான் இஸ்மாயில் நபி அன்னை ஹாஜிராவின் அடக்கஸ்தலங்கள் அடையாளம் அழிக்கப்பட்டுள்ளன.

சைத்தானின் மீது கல்லெறிதல் ,ஸபாமர்வா குன்றுகளிடையே தொங்கோட்டம் உள்ளிட்ட கபாவணக்கம் அல்லாவின் பெயரால் இபுராகீம் நபி குடும்பத்திற்கு செய்யும் சடங்குகளாகும்.

அ)தர்காவில் அல்லாவின் பெயரால் நேர்ச்சை செய்து ஆடு கிடாய் அறுப்பது கபாவில் ஆடு ஒட்டகத்தை பலி கொடுப்பதின் தொடர்ச்சி. ஒரு வருட ஹ்ஜ்ஜில் 40 லட்சத்திற்கும் மேல் விலங்கினங்கள் பலியிடப்படுகின்றன.

ஆ)தர்காவில் போய் முடி இறக்குவதற்கு முன்னோடியாக கபாவில் சென்று மொட்டை போடுவது ஆதாரமாகிறது.

இ)ஹஜ்ஜின் கடமைகளான பலியிடுதல் மொட்டை போடுதல் தவாப் செய்து வலம் வருதல் தமிழ் கிராம கோவில்களின் சடங்கு முறைகளாகவும் உள்ளன.

வகாபி கிளப்பிவிட்டதால் இன்னுமொரு அதிர்ச்சிகரமான செய்தி. ஹஜ் கிரியைகளில் ஒன்றான எண்ணற்ற ஹாஜிகள் முத்தமிடுவதுமான ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக்கல் வடிவம் பெண்குறியின் வடிவமாகும்.

அரபு பழங்குடி மக்கள் செய்த பெண்குறி வழிபாட்டின் எச்சமாகவே இதனைக் கருதலாம். நபிமுகமது கபாவை கைப்பற்றுவதற்கு முன் லாத்,உஜ்ஜா,மனாத் பெண் தெய்வச் சிலைகளே இங்கிருந்தன.13/7/06 திண்ணை இதழில் ஹமீது ஜாபர் சுட்டியில் இடம் பெற்ற படத்தை பார்க்கவும்.

மேற்காசியா,மெசபடோமியா,சிரியா,பலஸ்தீனம்,சைப்ரஸ் உள்ளிட்ட பல பகுதிகளின் அகழ்வாராச்சியில் தாய்வழிபாடு. பெண்குறிவழிபாடு சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தின் கும்பகோணம் அருகில் தாராசுரம் கோவிலொன்றில் சக்ராயி தெய்வத்தின் பெண்குறி வழிபாடு இன்னும் வழக்கத்தில் உள்ளது.

பகுத்தறிவுப் பால் குடித்த வகாபி ஆண் துணையற்ற அன்னை மர்யத்தின் கர்ப்பம்,மனிதர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றிய மந்திரவாதம் உள்ளிட்ட ஏற்கெனவே கேட்கப்பட்ட திருகுரான் தொடர்பான ஆறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

அல்லாவின் சடங்கியல் மொழியாடல்- 7

கபாவின் ஹஸ்ருல் அஸ்வத் பெண்குறி வடிவமைப்பை முத்தமிடும் வழிபாட்டிற்கும்,தமிழக சக்ராயி
தெய்வ பெண்குறி வழிபாட்டிற்கும் எப்படி ஒப்புமை ஏற்பட்டது…


Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது