பறத்தல் இதன் வலி

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

மாலதி


—-

சிறுகால் பதித்துவிட
சிவப்பான வானத்தில்
பொழுதுக்கும் இடமில்லை
பறத்தல் இதன் வலி.

சிறகெல்லாம் வலித்து
நொறுங்கல் அஞ்சும்.
ஒளிந்தொலிக்கும் வசைகள் வடியும்.
அக்குள் இடுக்குகளின் புண்மீறி.
இன்னும் பற சீக்கிரம் பற
மூர்க்கமாய்ப் பறந்து தொலை என்று
முரண்டும் சுக்கான் பின் காற்று.

நெஞ்சு கமறி நெடுங்குழலில் மூச்சுலர்ந்து
விம்மும் கண்ணீரால் அது.
பேச்சு திக்கித் திணறி பாஷை மறந்து வைக்கும்.
சொல்லோடு மொழிகள் சப்தங்களாய் மிதக்கும்.

எங்கோ ஒரு மனத்தின் ஒற்றை ஏரிக்குள்
இரட்டையாய்ப் பிரிந்திருக்கும் நீர்ப்பரப்பில்
அமுதோ நஞ்சோ ஒன்றை ஆய்ந்தெடுத்து
குளுமை தேடித் துவண்டு விழவென்று
பறக்கும்,தொடர் பறக்கும்,அதுவரை
சுமை தவிர்க்க,தலை மேல் அழுத்துகின்ற
ஆணானவற்றையெல்லாம்
அகற்றிவிடல் கூடுமேல்.

மாலதி

====
malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி