பருவ காலம்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

புஷ்பா கிறிஸ்ரி


கருவாகி உருவாகி அன்னை மடியில்
கனவாகி, கதையாகி குழந்தையாய்த் தவழ்ந்து
பூமியின் மடியில், சிறுவனாய், சிறுமியாய் நடந்து
இளையவனாய், மாணவியாய், காதலனாய்,மனைவியாய்
உருமாறி ஓடிடும் வாழ்க்கையும் எதற்காக ?
தந்தையாய், தாயாய், தம்மக்கள் தேவைகள் தீர்த்து
பேரக்குழந்தைகள், கண்டு, பாசம் கழித்து
எத்தனை காலங்கள், எத்தனை மாற்றங்கள்
இத்தனை பரிணாமங்கள், இத்தனை வளர்ச்சிகள்
நிலவும் கூட, வானத்து வீதியில்
இளம் பிறையாய், அரை நிலவாய், முழுநிலவாய்
மீண்டும் மீண்டும் வானத்து நிலவு,
இருள் சூழ்ந்து, மீண்டும் புது நிலவாய் வளர்ந்து
இன்பங்கள், ஒளியாகி, துன்பங்கள் இருளாகி,
நிறம் காட்டி, நிற்கும் கோலங்கள் தான் எத்தனையோ ?
இளவேனில் வந்து, கோடையாகி, கோடை மாறி
மாரி வந்தும், மாரி மாறி, பனிக்காலம் வந்து
காவியங்கள் பாடி, கவிபாடிடும் அற்புதங்கள் தான் எத்தனையோ ?
காலங்கள் கதை சொல்லும் இந்த நிஜங்கள்,
காவியங்களாய் மாறட்டும், மாற்றுங்களேன்.

***
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி