பருந்துகளும் என் வீட்டுக்கோழிக்குஞ்சும்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

கவிதா நோர்வே


பலம் படைத்தவன்
பூமியில்
பாவம் மண்புழு

கொத்தித் தின்றது கோழி

ஓடும் மீன்
ஒற்றைக் காலில் கொக்கு.

எங்கள் பின்முற்றத்தில்
காணாமல் போனது
என் கோழிக்குஞ்சு

உயரத்தில் பருந்து.

தொலைவில் வேட்டுச்சத்தம்
தொப்பென்ற விழுச்சத்தம்
அது வேட்டைக்காரன்.

விழுந்தது பருந்து.

மரங்களும் புதர்களும்
முயல்களும் மான்களும்
பாய்ந்தது சிங்கம்

மிருகச்சாலைகள்
கூண்டடைபட்டு சிங்கம்
பக்கத்தில் யானை

ஈழத்தமிழர் உரிமை இழப்பு
இலங்கையரசின் இறைமை,
இந்தியா, சீனா,
இன்னும் சொல்லாம்

எல்லாத்துக்கும் சேர்த்து
ஒரு அமெரிக்கா… போதாதா?

எனக்குப் புரிந்து போனது
ஜனநாயகம்


Series Navigation