பதில் அளிக்க முடியாத பதினான்கு கேள்விகள்

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

புதுவை ஞானம்


உலகம் தொடர்பான கேள்விகள் :

காலமும் உலகமும்.
_________________
உலகம் நித்தியமானமானதா ?(சாஸ்வதமானதா)
அல்லது அநித்தியமானதா ?
அல்லது இரண்டுமா ?
அல்லது இரண்டும் அற்றதா?

வெளியும் உலகமும்
——————————–
உலகம் அளவிடற்குரியதா ?
அல்லது அளவிடமுடியாததா ?
அல்லது இரண்டுமா ?
அல்லது இரண்டும் அற்றதா?

உலகத்துக்கு அப்பால் ஆன கேள்விகள்
———————————————————-
இறப்புக்குப் பின்னும் ததாஹதா இருக்கிறாரா?
அல்லது இல்லையா?

அல்லது இரண்டுமா?
அல்லது இரண்டுமே இல்லையா ?

சொந்த அனுபவம் பற்றிய கேள்விகள்
——————————————————
ஆன்மா என்பது உடலோடு சம்பந்தப்பட்டதா ?
அல்லது உடலிலிருந்து மாறு பட்டதா?

இந்தப் பதினான்கு கேள்விகள் கேட்கப்பட்ட போது புத்தர் மவுனம் சாதித்தார் அவற்றை ‘வலை’ எனச் சித்தரித்த அவர் தத்துவங்கள், யூகங்கள், மற்றும் இறுகிய மதக்கோட்பாடுகள் எனும் வலைக்குள் நான் மாட்டமாட்டேன் என்றார். எல்லா கோட்பாடுகள், மற்றும் சூத்திரங்களின் தளைகளிலிருந்தும் தான் விடுதலை பெற்று விட்டதால் அவை தன்னைக் கட்டுப்படுத்தாது என்றார். அத்தகைய அபிப்ராயங்கள்; அச்சம், அவதி, குழப்பம்,துக்கம் ஆகியவற்றால் விளைகின்றன என்றார். அவற்றிலிருந்து சுதந்திரம் பெறுவதன் மூலம் தான் ஒருவன் நிர்வானமடைய முடியுமென்றார்.

இந்த பதினான்கு கேள்விகளும் உலகத்தைப் பற்றிய இரு அடிப்படையான அணுகு முறைகளை உள்ளடக்கியுள்ளன. மகா காஷ்யபாவுடனான தனது உரையாடலில்,அவர் ‘இருப்பு’ ‘இருப்பு அற்றது’ என இரு விதமான அடிப்படை அணுகு முறைகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்ட போது, இந்த இரு விதமான அணுகு முறைகள் பற்றிப் பேசினார். மக்கள் இந்த விதமாக சிந்திக்கப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு விதமான பார்வையில் அவர்கள் கட்டுண்டு இருக்கும் வரை அவர்கள் நிர்வானமடைய ஏலாது என்றார். உலகம் நித்தியமானது,அளவிடற்குறியதல்ல, ஆன்மா உடலிலிருந்து சுதந்திரமானது என்பதெல்லாம் ‘இருப்பு’ என்கிற பார்வையின்பாற்பட்டது. உலகம் நித்தியமானதல்ல,உலகம் அளவிடுதற்குறியது, இறப்புக்குப் பின் ததாஹதா இல்லை,ஆன்மா உடலோடு பொருந்தியது தான் என்கிற வாதமெல்லாம் ‘இருப்பற்றது’ என்கிற பார்வையின்பாற்ப்பட்டது. புத்தரின் காலத்தில் இந்த இரு விதமான கருத்துக்களுமே மற்ற தத்துவ வாத மரபினரால் சொல்லப்பட்டு வந்தன. ‘இருப்பு’ என்ற கருத்து பொதுவாக பிராமணர்களால் பேசப்பட்டு வந்தது. ‘இருப்பற்றது’ என்ற வாதம் பொதுவாக பொருள் முதல் வாதிகளாலும், இன்பமே சிறந்தது என்று நம்பியவர்களாலும் முன் வைக்கப்பட்டது. இருப்பு – இருப்பு அற்றது வாதங்களுக்குள் நுழைய மறுத்த புத்தரது மனதில் இரு விஷயங்கள் இருந்தன. அவையாவன ; எந்த ஒன்றையும் சார்ந்திராத, இயல் கடந்த இருப்பு ( Absolute)அல்லது முற்றிலும் இருப்பற்றது என்ற இரண்டிலுமான உண்மையில் ,பொருட்கள் எப்படி இருக்கின்றவோ அப்படிப்பட்ட நிலையுடன் ஒத்ததாக இல்லை என்பதாகும். சாஸ்வத (இருப்பு,நித்தியம்) வாதிகளின் கருத்துப்படி ஆன்மா நிரந்தரமானது மாறாதது. உடல் மரணமடையும் போது ஆன்மா இறப்பதில்லை ஏனெனில் ஆன்மா அதன் இயல்புப்படிமாற்றமடையாதது.அப்படியானால்,இந்த உடல் செய்யும் எந்தக் காரியமும் ஆன்மாவின் போக்கை, விதியை பாதிப்பதில்லை எனவாகும். .அறவியல் – தார்மீக பொறுப்பு என்பதோடு ஒத்துப்போகாத கருத்து இது. ஏனெனில் தன் இயல்பின் படியே ஆன்மா நித்தியமானதும் மாற்றமற்றதும் என்பதனால் அது நல்ல அல்லது தீய நடவடிக்கைகளால் பாதிக்கப் படுவதில்லை எனவாகிறது. அதைப் போலவே ஆன்மா என்பது உடலோடு ஒட்டியது, உடல் சாகும் போது ஆன்மாவும் இறந்துவிடுகிறது எனில் உடல் என்ன செய்தால் என்ன என்ற கேள்வி எழுகிறது. வாழ்வு என்பது மரணத்தில் முடிந்து விடுகிறது என்று நீங்கள் நம்புவீர்களானால், நடவடிக்கைகளின் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. ஆனால் பொருட்கள் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் தோற்றுவாய் கொண்டவை என்ற சூழ்நிலையில் இயல் கடந்த இருப்போ இருப்பற்றதோ சாத்தியம் இல்லை.பதிலளிக்க முடியாத இந்தப் பதினான்கு கேள்விகளிலிருந்து பெறப்படும் மற்றொரு வழிகாட்டியானது, இந்த வாதங்கள்,உண்மையில் விஷயங்கள் எந்த திசை வழியில் செல்கின்றனவோ அத்துடன் இவை ஒத்துப் போகவில்லை என்பதாகும். உலகம் என்ற எடுத்துக்காட்டினை எடுத்துக்கொள்வோம். இந்த உலகம் காலத்தைப் பொருத்தவரை இயல் கடந்ததாகவோ இயலுக்கு உட்பட்டோ இயங்கவில்லை. இந்த உலகம் காரணங்களையும் காரியங்களயும் சார்ந்து இயங்குகிறது. அறியாமை,ஆதங்கம், பற்று ஆகியவை இருக்கும் போது உலகம் இருக்கிறது. அவை இல்லாத போது உலகம் இல்லாமல் போகிறது. எனவே இயல் கடந்த இருப்பு அல்லது இருப்பற்றது என்ற கருதுகோள் பொருட்களுக்குப் பொருந்தாது. இதனால் தான் புத்தர் பொருட்களின் இயல்பு பற்றிய அறுதியான முடிவுகளுக்கு ஒப்பவில்லை. அறுதியான இயல்கடந்த வகைகள் ,உண்மையில் இருக்கக் கூடிய பொருட்களுக்குப் பொருந்தாது என அவர் கண்டார்.


வலையில் அகப்பட்டவற்றைத்
தமிழாக்கம் செய்தது :
புதுவை ஞானம்
mailto:j.p.pandit@gmail.com

Series Navigation