பண்ணி

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ஹெச்.ஜி.ரசூல்


கொம்புப் பல்லால் நிலங்கிழித்து
வீறுகொண்டலையும் பசிக்கு
சமாதானம் சொல்லவோர் நாதியில்லை.
தின்றுமுடித்தும் வேதனையில்
இடைவிடாபயணத்தில்
ரத்தவாடையுடன் காடுகிழித்து
காட்டுப் பண்ணிகள் அலைகின்றன.ஓரவஞ்சனையில் புதைக்கப்பட்டவைகளிடம்
கைகளும் வாய்களும் முகர்ந்து
முத்தமிடுகையில் ஏமாந்து போகின்றன.மாட்டிறைச்சி சவ்வில் பொதியப்பட்ட ரகசியங்களை
ரேகைதெரியாமல் கடித்துத் தின்னுகையில்
வாயும் முகமும்
சின்னாபின்னமாய் வெடித்துச் சிதற
படக்குகள் வெடிக்கின்றன.
மரணபீதியின் அலறல்களோடு
திரும்பவும் அதிகாலை துவங்குகிறது.

mylanchirazool@yahoo.co.in

Series Navigation