பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

ஆசை ஆசைத்தம்பி


பட்டு:
அடுத்தாத்து எலிஸபெத்தெ பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறதெ கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு கிஃப்டா வாங்கிக்கறா
பெரிய கிஃப்டா வாங்கிக்கறா

(அடுத்தாத்து)
கிட்டு:
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி
அவன் அங்கொரு ஆளு இங்கொரு ஆளு வெச்சிருக்காண்டி
போன மாசம் முன்னூறு டாலர் ஃபோன் பில்லாச்சேடி
டெலிஃபோனுக்கே சம்பளம் போனா
கிஃப்டுக்கு ஏதடி ஒனக்கு கிஃப்டுக்கு ஏதடி

(அடுத்தாத்து)
பட்டு:
உங்களுக்குன்னு வாக்கப்பட்டு என்னத்தெ கண்டா பட்டு
கிட்டு:
அமெரிக்காவில் வாழுறியே நீ அத மறந்தாயா பட்டு
பட்டு:
நாளுங்கெழமையும் போட்டுக்க ஒரு ப்ளூ ஜீன்ஸ் உண்டா நேக்கு
போட்டுண்டேன்னா ரெண்டு பேரா போகல்லான்னா வாக்கு (walk)
கிட்டு:
பொடவைய விட்டா வேறென்ன அழகு தெரியாதோடி நோக்கு
பட்டு:
வாங்கித்தராமெ இருக்கறதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு உக்கூம்

(அடுத்தாத்து)
கிட்டு:
ஏட்டிக்கு போட்டி பேசாதேடி பட்டூ
பட்டு:
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டூ
கிட்டு:
ஆத்திரம் வந்தா க்ரெடிட் கார்டெல்லாம் கட்டூ
பட்டு:
என்னத்தெ செய்வேள் …
கிட்டு:
ஊம் … சொன்னத்தெ செய்வேன்
பட்டு:
வேறென்ன செய்வேள்
கிட்டு:
… அடக்கி வெப்பேன்
பட்டு:
அதுக்கும் மேலெ
கிட்டு:
… டைவர்ஸ் பண்ணுவேன்

பட்டு:
ஊம் ஊம் உம் உம் உம் (அழுகுரலில்)

(அடுத்தாத்து)

Series Navigation

ஆசை ஆசைத்தம்பி

ஆசை ஆசைத்தம்பி