பட்டு

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

கவிநயா


அப்பப்பா –
பட்டுப் புடவைகளில்தான் எத்தனை ரகம் ?
கண்ணைக் கவரும் வண்ணங்கள்
கருத்தைக் கவரும் வேலைப்பாடுகள்
பல்லாயிரம் பெயர்களின் உழைப்பு
பல வேறு பெயர்களின் கலைத்திறன்
மேனியில் வழுக்கும் மென்மை
எத்தனை முறைகள் எப்படி நோக்கினாலும்
உலக அதிசயம் போல மனம் மயங்குகின்ற வேளையில்
மூளையின் மூலையில் நமநமக்கின்ற ஒரு சின்ன உறுத்தல்…
பட்டுப்பூச்சிகளின் விருப்பம் என்னவாக இருந்திருக்கும் ?
பட்டாம்பூச்சி ஆகவா, பட்டுப்புடவை ஆகவா ?

–கவிநயா
—-
meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா