This entry is in the series 20020317_Issue


சேமியா –300கிராம்

ரவை –1கப்

வெங்காயம் –2

நெய் –1/4கப்

பச்சைமிளகாய் –3

பச்சைபட்டாணி –1கப்

கடுகு –1/2ஸ்பூன்

உளுத்தம்பருப்பு –1ஸ்பூன்

கறிவேப்பிலை –சிறிதளவு

கொத்துமல்லி –சிறிதளவு

முந்திரிப்பருப்பு –20கிராம்

பெருங்காயம் –சிறிதளவு

உப்பு –தேவையான அளவு

எலுமிச்சம்பழ ஜ்ஊஸ் –கால்ஸ்பூன்

கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி ரவையையும், சேமியாவையும் லேசாக சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும். பச்சைப்பட்டாணியை கால்மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். பின் கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து உளுத்தம்பருப்பு சிவந்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் முந்திரிபருப்பு போட்டு வறுத்துக்கொண்டு அத்துடன் கீறிய பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்தும் வதக்கிகொண்டு, அதில் ஊறவைத்த பட்டாணியையும் சேர்த்து வதக்கி பின் 3கப் தண்ணீர் ஊற்றி உப்பும் போடவேண்டும். தண்ணீர் கொதித்ததும் ரவை, சேமியாவைப் போட்டு கிளறி வெந்ததும் சற்று கெட்டியாகி வரும்பதத்தில் இறக்கி கொத்துமல்லி தூவவும்.

Series Navigation