நிராதரவின் ஆசைகள்..!

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

ஷம்மி முத்துவேல்தனிமை சுட்டது,
தடங்கலற்ற நீரோட்டமாக
தவிப்புகளின் குவியல்கள்
கருப்புமை பூசிய
வெள்ளை எழுத்துக்களில் ..

வெளிப்பட்ட வார்த்தைகள்
உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது
சுயம் இங்கு தவறாய்
பரிமாணித்தது!

விளக்கப்படாக் கேள்வியின்
பதில்கள்,
புதைமணலின் ரகசியங்கள்..!

காகிதமாய் கசிங்கியது
உயிர்விட்ட உணர்வுகள்..

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்