நிரம்பி வழிய எத்தனித்த கோப்பைகள்

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

ஹெச்.ஜி.ரசூல்எல்லா கோப்பைகளும் காலியாக இருந்தனவென்று
சொல்லிவிட முடியாது.
துவக்கத்தில் அவை உட்செரித்து
தன்னுள் பதுக்கியும் ஒளித்தும் வைத்திருந்தவை
திடீர் தூண்டுதல்களால் ஊற்றெடுத்து
நிரம்பிவழிய எத்தனித்திருக்கக் கூடும்.
சில நேரங்களில் சில கோப்பைகள்
நிரம்பிவழிவதாய் தோற்றமளித்தன.
அருகிருந்து ஊற்ற ஊற்ற
நிரம்பிவழியாமல் அவை கீழிறங்கி
மாய ஜாலம் நிகழ்த்தின
நிரம்பி வழியாத கோப்பைகளோடு
ஒரு இரவு கழிகிறது.
காலியாக தோற்றமழித்த கோப்பை
உடைபடாமல் காத்திருக்கிறது.
எனக்கென தயாரிக்கப்பட்ட கோப்பையொன்று
ஒருவேளை நிரம்பி வழிந்தவாறு
எங்காவது இருந்திருக்கக் கூடும்.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்