நாளை விடிந்து விடுமே!

This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue

எட்வின்


என் இனிய இந்தியனே!

மதச்சேறும் சாதிச்சகதியும்
சட்டங்களில் தெளிக்கப்பட்டு
சாித்திரங்கள் சாிவதைக் கண்டு
சலிப்பு வேண்டாம்.

நாளை விடிந்து விடும்

கட்டிக் காத்த காஷ்மீாின்
கதியைக் கண்டு கவலையால்
கண்ணம் குழிந்தது போதும்

நாளை விடிந்து விடும்

கையெழுத்துக்களுக்காக
கைப்பணத்தை கையூட்டி
கால் வயிற்று கஞ்சியையும்
கையிழந்து துவண்ட நிலைப் போதும்

நாளை விடிந்து விடும்

படியேறியிறங்கவே பட்டம் பெற்று
பட்டம் பெற்றதற்காக படியேறியிறங்கி
பாடுபட்டது போதும்

நாளை விடிந்து விடும்

பட்டினியால் பாிதவிப்பவனே!
இதோ இரவு வந்து விட்டது
உன் வயிற்றைச் சுற்றியிருக்கும்
ஈரத்துணி உலர நேரமாகும் அல்லவா
மகிழ்ச்சிக் கொள்.
ஆனால்…

நாளை விடிந்து விடுமே!

Series Navigation

எட்வின்

எட்வின்