நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 1

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

வஹ்ஹாபி


கடந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், “இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது” எனும் தவறான கருவோடு,  ‘புனித மோசடி’ [சுட்டி-01 & சுட்டி-02] வெளியாகி இருந்ததைப் படிக்க நேர்ந்தது.
 
அக்கட்டுரைக்கான எதிர்வினை விளக்கங்களை வாசகர்களுக்குத் தருவதற்கு முன்னர், திசைதிருப்பும் அரைகுறைச் சான்றுகளோடு காழ்ப்பைக் கக்கும் தரமற்ற எழுத்துகளைப் பதிக்கும் திண்ணையின் அண்மைப் போக்கைப் பற்றிய எனது வருத்தங்களையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
 
அக்கட்டுரையில் காணப்படும் கருவுக்குத் தொடர்பில்லாத
01. உலகநாதர்,
02. வள்ளுவர்,
03. ஜெர்மனியின் கோயபல்ஸ்,
04. நாஸி ஹிட்லர்,
05. கம்யூனிஸ்ட்கள், இடதுசாரிகள், பொதுவுடைக்காரர்கள்
06. காந்திஜி,
07. முன்னேற்றம் அடைந்த/அடையாத கழகங்கள்,
08. வெங்காயம்,
09. நேரு, இந்திரா,
10. திராவிட நாடு
11. முரட்டு தாதா,
12. தேபால், உபகணஸ்தான், கூபா, உதபந்தபுரா, லவகுசபுரா
 
ஆகியோர்/ஆகியன பற்றியெல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள மட்டுமே எழுதப் பட்டிருப்பதாகவும் இங்குப் பேசுபொருளுக்கு மீக்குறியவை அப்பாற் பட்டவை என நான் கருதுவதாலும் இஸ்லாம் குறித்து அவர் எடுத்து வைத்த
குரான் Qur’an, ஹடித்-சுன்னா ( Hadith & Sunna — Traditions) அல்லது சிரா (Sira) (biographies) அடிப்படையில் பொய் பேசலாம்; சத்தியம் செய்யலாம்; பிற மதத்தவரிடம் எந்தக் காலத்திலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசலாம்; புனித(!) மோசடி (தகிய்யா) செய்யலாம்” எனும் தலையாய குற்றச் சாட்டுகளுக்கு முன்வைக்கப் பட்ட அரைகுறைச் சான்றுகளை முழுதுமாக வாசகர்கள்முன் வைக்க விரும்புகிறேன்.
 
அரைகுறை-1: (குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்)
 
இஸ்லாத்தின் உயிர்நாடியான “கடவுள் இல்லை – அல்லாஹ்வைத் தவிர” என்பதில் பாதியை மட்டும் சான்று என யாராவது முன்வைத்தால், இஸ்லாம் என்பது நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒரு மதம் என்றுதான் எவரும் விளங்குவர். அதுபோலவே குர்ஆன் கூறுவதைப் பாதியாக்கி இருக்கிறார் கட்டுரையாளர். “பிற மதத்தவரைக் கொன்று குவிக்கும்படி இஸ்லாம் சொல்கிறது” என்ற புனைவை நிறுவச் செய்யும் திருகுதாளமாகும் அவரது முயற்சி.
 
பிற மதத்தவர் குறித்துக் குர்ஆன் கூறுவதென்ன?
 
“(நபியே) கூறுவீராக! : இறை மறுப்பாளர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்;
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
மேலும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபனல்லன்;
அன்றியும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
உங்களுக்கு உங்கள் மதம்; எனக்கு என் மார்க்கம்” [குர்ஆன் 109:001-006].
“Say : O ye that reject Faith!
I worship not that which ye worship,
Nor will ye worship that which I worship.
And I will not worship that which ye have been wont to worship,
Nor will ye worship that which I worship.
To you be your Way, and to me mine. [சுட்டி-03].
 
“மேலும் உம் இறைவன் நாடியிருப்பின் இப்பூவுலகின் மாந்தர் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டிருப்பர். எனவே, எல்லாரும் இறைநம்பிக்கையாளராக ஆகிவிடவேண்டும் என அவர்களை நீர் வலுக்கட்டாயப் படுத்த முடியுமா என்ன?” [குர்ஆன் 010:099].
“If it had been thy Lord’s will, they would all have believed,- all who are on earth! wilt thou then compel mankind, against their will, to believe!” [சுட்டி-04]
 
“(நபியே!) இணைவைப்பாளர்களுள் எவர் உம்மிடம் புகலிடம் தேடி வந்தாலும் அவருக்குப் புகலிடம் அளிக்கவும். அதனால், அல்லாஹ்வுடைய சான்றுமிகு வசனங்களை அவர் செவியேற்கலாம்.  பின்னர், அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் இடத்துக்கு அவரை அனுப்பி விடுவீராக! ஏனெனில் அம்மக்கள் அறியாச் சமூகத்தவராவர்” [குர்ஆன் 009:006].
“If one amongst the Pagans ask thee for asylum, grant it to him, so that he may hear the word of Allah; and then escort him to where he can be secure. That is because they are men without knowledge. [சுட்டி-05]
 
“(இஸ்லாம்) மார்க்கத்தில் (இணைவதில்) வலுக்கட்டாயம் என்பது இல்லை …” [குர்ஆன் 002:256]
“Let there be no compulsion in religion …” [சுட்டி-06].
 
இத்துணைத் தெளிவான நல்லிணக்க இறைவசனங்களைக் கூறும் குர்ஆன், “பிற மதத்தவர் எவராயினும் கொல்லுங்கள்” எனக் கூறுவதாகப் பித்தலாட்டம் செய்யலாமா?
 
அரைகுறை-1இல் காணப் பட்ட முழு வசனம்:
“(இறைநம்பிக்கையாளர்களே!) தொடர் தாக்குதல்களும் அடக்குமுறையும் ஒழிக்கப் பட்டு, நீதி நிலைநாட்டப் படும்வரை, இறைநம்பிக்கை முற்றிலும் அல்லாஹ்வுக்கென்று ஆகும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டு விடுங்கள். ஏனெனில்,) அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். அவர்கள் (தாக்குதலை நிறுத்த) மறுதலித்தால், (எதிர்த் தாக்குதல் புரியுங்கள்). அல்லாஹ் உங்களின் திண்ணமான பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் …” [குர்ஆன் 008:039-040].
“And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do. If they refuse, be sure that Allah is your Protector …” [சுட்டி-07].
 
மேற்காணும் வசனங்களில் அப்பாவிகள் எவரையும் கொல்லும்படி கட்டளை ஏதுமில்லை. முஸ்லிம்களை அழித்தொழிக்கப் போர் தொடுக்கும் பகைவரை எதிர்த்துப் போர் செய்வது பற்றிப் பேசப் படுகிறது. இந்த வசனங்கள் பேசும் எட்டாவது அத்தியாயத்தின் பெயரே “போர் வெற்றிப் பொருட்கள்”தான். அதை, அடுத்து வரும் வசனம் உறுதி செய்கிறது:
 
“(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒன்று (20%) அல்லாஹ்(வின் அறவழியில் செலவழிப்பதற்)கும் அவனின் தூதருக்கும் உறவினர்க்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் …” [குர்ஆன் 008:041].
“And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to Allah,- and to the Messenger, and to near relatives, orphans, the needy, and the wayfarer …” [சுட்டி-08].
 
***
 
ஹிஸ்டீரியா நோயாளிகள், பேயாடுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரம்வரை எல்லாமே அத்துப்படி என்று பிறரை நம்ப வைப்பதற்காக ஏதேதோ உளறிக் கொட்டுவார்கள். முக்காலமும் உணர்ந்தவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு “இவனுக்கு அது நடக்கும்; அவனுக்கு இது நடக்கும்” என்று குறி சொல்வார்கள். பாமரப் பேயாடிகள்கூட பல பாஷைகள் பேசுவர். எனக்குத் தெரிந்த ஒரு ஹிஸ்டீரியா நோயாளிப் பெண் அதுபோல் ஒருமுறை பேய்(!) வந்து உளற, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில், மூன்று மாத விஸிட்டிங் விசாவில் மலேஷியாவுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்த ஒருவர் சொன்னார் : “பேய் மலாய் பாஷை சூப்பராப் பேசுது!”
 
திண்ணையில் ‘புனிதமோசடி’யைப் படித்தபோது எனக்கு அந்தப் பெண் பேயாடிதான் நினைவுக்கு வந்தார்.
பார்ப்பதற்குக் கலர் நன்றாக இருப்பதாக நினத்துக் கொண்டு, காவி கலந்த உணவைக் கண்ட இடத்தில் தின்று விட்டு, அதனால் ஏறிய பித்தம், வாந்தி, மயக்கம், அத்தோடு ஹிஸ்டீரியாப் பேயாட்டம் போன்ற கலவைகள் அனைத்துக்கும் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு பெயர் கூறுகின்றனர்: “இஸ்லாமோஃபோபியா”. தமிழில் இஸ்லாமிய மிரட்சி.  தற்போது தமிழகத்தில் பரவுகின்ற புதுவகை நோய்.
 
சுருக்கமாக இமி நோய்.
 
அதைத்தான் தலைப்பில் படித்தீர்கள்.
 
– தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ
to.wahhabi@gmail.com
 
http://wahhabipage.blogspot.com
 
_________
 
சுட்டிகள்:
சுட்டி – 01 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911296&edition_id=20091129&format=html
சுட்டி – 02 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912045&format=html
சுட்டி – 03 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/109.qmt.html
சுட்டி – 04 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/010.qmt.html#010.099
சுட்டி – 05 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt.html#009.006
சுட்டி – 06 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt.html#002.256
சுட்டி – 07 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.039
சுட்டி – 08 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.041

Series Navigation

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 2

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

வஹ்ஹாபி


உடன்படிக்கை என்றால் என்ன?
இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும்.
அவ்வாறு ஏற்றுக் கொண்டவற்றைப் புறக்கணித்து உடன்படிக்கையை முதலாவதாக முறிப்பவர்கள் அநியாயக்காரர்களே. பிறரோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முஸ்லிம்கள் முறித்ததாக இஸ்லாமிய வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது.
முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பல. அவற்றுள் ‘யூத உடன்படிக்கை’ [சுட்டி-09], புகழ் பெற்றது. அந்த உடன்படிக்கையை முறித்தவர்கள் [சுட்டி-10] யூதர்கள் ஆவர். அதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் பெருமை பொங்கப் பேசப்படும் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்தவர்கள் மக்கத்துக் குரைஷியர்கள் ஆவர்.
ஆனால், வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாக, ‘புனித மோசடி’யில் உடன்படிக்கையை முஸ்லிம்கள் உடைத்ததாகத் தலைகீழ்ப் பாடம் நடத்தப் பட்டது; அதைத் திண்ணையும் பதித்துப் பெருமை(!) சேர்த்துக் கொண்டது.
அரைகுறை-2 Sura (9:3) – “…Allah and His Messenger are free from liability to the idolaters…” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி).
அல்குர்ஆனின் ஒன்பதாவதான ‘மீட்சி/விலகல்’ அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் சில (அரைகுறைச்) சொற்கள், ‘உடைப்பதற்கே உடன்படிக்கை’ என்று முஸ்லிம்களுக்கு உத்தரவு போடுவதுபோல் பம்மாத்துக் காட்டப் பட்டுள்ளது.
மேற்காணும் இறைவசனத்தில் பேசப்படும் உடன்படிக்கை யாது? அதன் பொருளடக்கங்கள் யாவை? அவற்றை மீறியவர் யாவர்? போன்ற முழுமையான தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வோம். அதற்கு முன்னர், இஸ்லாமிய மீளெழுச்சியின் 19ஆவது ஆண்டின் இறுதியில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களின் தலைவர் அபூஃஸுப்யானின் பிரதிநிதி ஸுஹைல் பின் அம்ரூ என்பவருக்கும் ஏற்பட்ட ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’யைப் பற்றி மேற்காணும் இறைவசனம் [009:003] பேசுவதால் 19 ஆண்டுகால இஸ்லாமிய மீளெழுச்சியைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வது நலம்.
இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பின்னர் 13 ஆண்டுகள்வரை, தம் குடும்பச் சொந்தமான குரைஷியர்களால் நிகழ்த்தப் பட்ட ஊர்விலக்கல் முதல் கொலை முயற்சிவரை அனைத்தையும் எதிர்கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில்தான் வசித்தார்கள். 13ஆவது ஆண்டின் இறுதியில், தாம் பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து, அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இந்தப் புலப் பெயர்வுக்கு, ‘ஹிஜ்ரா/ஹிஜ்ரத்’ என்பது அரபுப் பெயராகும். அந்த ஆண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை ‘ஹிஜ்ரீ’ எனும் பெயரால் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மதீனாவின் மக்களுக்கிடையே பன்னெடுங்காலம் நிலவி வந்த இனப்பகையை ஒழித்துக் கட்டி, மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதாலும் பல சீர்திருத்தங்களைச் செய்ததாலும் மதீனாவின் மக்கள் அண்ணல் நபியைத் தம் ஆட்சித் தலைவராக்கிக் கொண்டனர் [சுட்டி-11].
அண்ணல் நபியின் செல்வாக்குக் கூடிக் கொண்டே போவதையும் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் பரவியதைவிடப் பன்மடங்கு அவரது புலப் பெயர்வுக்குப் பின்னர் அதிவேகமாக தம் சொந்த மண்ணில், தங்களின் கண் முன்பே வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கண்ட குரைஷிகள், மதீனாவைச் சூறையாடுவதற்கும் மதீனாவின் ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த அண்ணலாரை ஒழித்துக் கட்டுவதற்கும் மக்காவிலிருந்து (ஏறத்தாழ 400கி.மீ) பயணித்து வந்து பலமுறை (முதல் பத்ரு ஹிஜ்ரீ2இல்; உஹது ஹிஜ்ரீ3இல்; இரண்டாவது பத்ரு ஹிஜ்ரீ4இல்; அகழி ஹிஜ்ரீ-5இல்) போர் புரிந்தனர்; அனைத்திலும் தோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்றனர்.
***
அகழிப் போருக்கு அடுத்த ஆண்டு ஹிஜ்ரீ 6இல் மக்காவிலுள்ள கஅபா எனும் இறைப் பேரில்லத்தில் உம்ரா எனும் புனித வணக்கம் புரிவதற்காக நபிகள் நாயகமும் அவர்களின் 1400 தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நேக்கிச் சென்றார்கள். மக்காவைப் புனிதப் பயணக்குழு சென்றடைவதற்கு ஏறத்தாழ 15 கி.மீ தொலைவு இருக்கும்போது மக்காவின் இணைவைப்பவர்கள், பயணக்குழுவை மக்காவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடுத்தனர். அந்த இடத்துக்குப் பெயர் ஹுதைபிய்யா.
தாங்கள் போர் செய்ய வரவில்லை என்றும் அக்கால அரபியர் அனைவருக்கும் பொதுவான ‘உம்ரா’ வணக்கம் புரிவதற்கே மக்காவுக்கு வருவதாக முஸ்லிம்கள் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதிரணியினர் செவி சாய்க்கவில்லை. முஸ்லிம்களும் முறுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மக்காவின் தலைவர்களுக்கிடையே முஸ்லிம்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது குறித்து இரு வேறு கருத்துகள் [சுட்டி-12] ஏற்பட்டன.
நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட மக்கத்துக் குறைஷிகள், அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ரு என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.
நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் உடன்படிக்கைக்கான கூறுகளை முடிவு செய்தனர். அவையாவன:
[1] முஸ்லிம்கள் இந்த ஆண்டு மக்காவுக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டில் முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித இடையூறும் இருக்காது.
[2] பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யக் கூடாது.
[3] யாரொருவர் முஹம்மதுடைய உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். போலவே, மக்காக் குறைஷிகளின் உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவினரில் ஒன்றுடன் சேர்ந்து கொள்ளும் எந்த ஒரு கிளையினரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராவார். அதற்குப்பின் அந்தக் கிளையினருக்கு எதிராக யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அஃது அவர் சார்ந்த முழுப்பிரிவின் மீதான அத்துமீறலாகக் கொள்ளப் படும்.
[4] மக்கத்துக் குறைஷி ஆண்களுள் யாராவது தன் பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.
மேற்காணும் உடன்படிக்கை [சுட்டி-13] முழுமை பெறுமுன்னர், மக்காவைச் சேர்ந்த, அண்மையில் இஸ்லாத்தைத் தழுவிய அபூஜந்தல் என்பார் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்ளப் புகலிடம் தேடி வந்தார். அவர், மக்கத்துக் குரைஷிகளின் பிரதிநியான சுஹைலின் மகனாவார். மக்காவைச் சேர்ந்த ஆண் தங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பி விடுவோம் என்ற பேச்சு வார்த்தை முடிந்து விட்டதால், அபூஜந்தலை அவரின் தந்தையிடமே ஒப்படைத்த நேமையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-14] முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
பிற்றை நாட்களில் அதேபோல், மக்கத்துக் குரைஷியரின் உடன்படிக்கைப் பிரிவான ஸகீப் இனத்தவருள் ஒருவரான அபூபஸீர் என்பார் புகலிடம் தேடி மதீனாவுக்கு வந்தபோது, அவரைத் திருப்பி அனுப்புமாறு கேட்டு வந்த மக்கத்தவர்களுடன் அவரை அனுப்பி வைத்த நேர்மையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-15].
***
பின்னர், தங்களுக்குப் பாதகம் விளைந்தபோது, ஹுதைபிய்யா உடன்படிக்கையின் நான்காவது கூறுதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தவர்கள் மக்கத்துக் குறைஷிகளாவர்.
உடன்படிக்கையின் மூன்றாவது கூறான, “ஒருபிரிவினருடன் சேர்ந்து கொள்ளும் எந்தக் கிளையினருக்கும் எதிராக மறுபிரிவினர் அத்து மீறக் கூடாது” என்பதை உடைத்தவர்களும் மக்கத்துக் குரைஷியரே.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர்வரை குஜாஆ, பனூபக்ரு ஆகிய இரு குலத்தவரும் பன்னெடுங் காலமாகப் பகைமை மாறாமல் தங்களுக்குள் அடிக்கடி சணடியிட்டுக் கொண்டிருந்தனர். உடன்படிக்கைக்குப் பின்னர், குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பனூபக்ரு குலத்தார் குரைஷிகள் பக்கம் சேர்ந்து கொண்டனர். இரு குலத்தவரிடையே சண்டைகள் தொடராமல் ஹுதைபிய்யா உடன்படிக்கைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தது.
ஹிஜ்ரீ 8, ஷஅபான் (எட்டாவது) மாதம் பனூபக்ரு குலத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆக் குலத்தவருள் சிலர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆவினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. பனூபக்ருக் கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதோடு, அவர்களோடு இணைந்து கொண்டு குரைஷிகளுள் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.
சண்டைசெய்து கொண்டே குஜாஆவினர் புனித (ஹரம்) எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பனூபக்ருக் கிளையினர், “நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!” என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் அதைச் செவிமடுக்காமல், மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். “பக்ரு இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?” என்றான். கொல்லப் பட்டவர்களைத் தவிர்த்து, எஞ்சிய குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ ஆகிய தங்களின் நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் புகுந்து கொண்டனர்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையை மக்கத்துக் குரைஷிகள் மீறி, தங்களைக் கொன்றொழிக்க வந்ததை, குஜாஆக் குலத்தைச் சேர்ந்த அம்ரு இபுனு ஸாலிம் மதீனாவுக்குச் சென்று நபியவர்களிடம் கவிதையாகப் பாடினார்:
இறைவா! நான் முஹம்மதிடம் எங்கள் உடன்படிக்கையையும்
அவர் தந்தையின் பழமையான உடன்படிக்கையையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்;
நாங்கள் பெற்றோர்கள்; பின்னரே முஸ்லிமானோம்.
பின்வாங்கவில்லை. முழுமையாக உதவுங்கள்!
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை;
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான உடன்படிக்கையை முறித்து விட்டனர்.
‘கதா’வில் எனக்குப் பதுங்குக் குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனைப் பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.
மக்கத்துக் குரைஷியரால் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கத்துக் குரைஷியருக்கு மூன்று கூறுகளைத் தேர்வுக்காக முன் வைத்தார்கள்:
1. வலியச் சென்று சண்டையைத் துவக்கிய பனூ பக்ரு குலத்தாரை உடன்படிக்கையிலிருந்து நீக்குவது
2. மக்கத்துக் குரைஷியரும் பனூ பக்ருவினரும் சேர்ந்து கொண்டு கொலை செய்த குஜாஆவினருக்காக நஷ்ட ஈடு வழங்குவது.
3. ஹுதைபிய்யா உடன்படிக்கையை முற்றாக முறித்துக் கொள்வது.
குரைஷியர் மூன்றாவதைத் தேர்ந்தனர் [சுட்டி-16].
அடுத்த மாதமே, அதாவது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் (9வது) மாதம் பத்தாம் நாளில் பத்தாயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து நபியவர்கள் புறப்பட்டு மக்காவை அடைந்தபோது நபியவர்கள் பிறந்த மண், தன்னை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தன்னை ஊரைவிட்டு விரட்டியடித்தவர்கள் அன்று வெருண்டோடி ஒளிந்து கொள்வதை நபியவர்கள் கண்டனர் [சுட்டி-17]. அதற்குப் பின்னரும் – மக்கா வெற்றி கொள்ளப் பட்டு, உடன்படிக்கை என்பது செல்லாமல்/இல்லாமல் ஆகிவிட்ட பிறகும் – அவ்வாறு நபியவர்கள் அறிவிக்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் வியப்பின் உச்ச கட்டமாகும்.
மக்கா வெற்றி கொள்ளப் பட்டபோது, “குரைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்று நபியவர்கள் கேட்க, ” நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களின் சிறந்த சகோதரரும் எங்களுள் சிறந்த சகோதரரின் மகனுமாவீர்கள்” என்று குரைஷியர் கூறினர். “இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு” என்று அறிவித்து, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை நிலைநிறுத்தினார் எம் தலைவர் [சுட்டி-18].
***
அரைகுறை-2இல் குறிப்பிடப் பட்டுள்ள கீழ்க்காணும் வசனங்கள் ஹிஜ்ரீ ஒன்பதாவது ஆண்டில் அருளப் பெற்றன.
அல்லாஹ்வும் அவனின் தூதரும் இணைவைப்பவர்கள்(உடன் செய்திருந்த உடன்படிக்கை)ஐ விட்டும் முற்றிலும் விலகி விட்டனர் என்பதை இந்த மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வும் அவனின் தூதரும் அறிவிக்கின்றனர். (இணைவைப்பாளர்களே!) நீங்கள் திருந்திக் கொள்வீர்களாயின் அஃது உங்களுக்குச் சிறப்பைத் தரும். மறுதலிப்பீர்களாயின், அறிந்து கொள்வீர்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது. (நபியே!) வலிமிகு வேதனையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இணைவைப்போருள் உடன்படிக்கைக்கு ஊறு செய்யாமலும் உங்களுக்கு எதிரானவர்களுக்கு உதவி செய்யாமலும் இருப்பவர்களுடன் அவ்வுடன்படிக்கையை அதன் காலக் கெடுவரை முழுமைப் படுத்துங்கள். அல்லாஹ், தன்னை அஞ்சி வாழ்வோரிடம் அன்பு செலுத்துகிறான் [அல் குர்ஆன் 009:003-004].
And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith. (But the treaties are) not dissolved with those Pagans with whom ye have entered into alliance and who have not subsequently failed you in aught, nor aided any one against you. So fulfil your engagements with them to the end of their term: for Allah loveth the righteous [சுட்டி-19].
மேற்காணும் முழுமையான இறைவசனத்தில் இருப்பது என்ன வகை தக்கியா புக்கியா என்று சொல்லத் தெரியாமல் கட்டுரையாளர் ஊமை வேஷம் போடுகிறார்.
– பிற அரைகுறைகள் முழுமையாக்கப் படும்வரை தொடரும், இன்ஷா அல்லாஹ்
ஃஃஃ
to. wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com
 
சுட்டிகள்:
சுட்டி – 09  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
சுட்டி – 10  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#59
சுட்டி – 11  http://en.wikipedia.org/wiki/Muhammad_as_a_diplomat#Reformation_of_Medina_.28622.E2.80.94.29
சுட்டி – 12 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#135
சுட்டி – 13 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#140
சுட்டி – 14 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#141
சுட்டி – 15 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#146
சுட்டி – 16 http://en.wikipedia.org/wiki/Treaty_of_Hudaybiyyah#Aftermath
சுட்டி – 17 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#70
சுட்டி – 18 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#73
சுட்டி – 19 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt#009.003

Series Navigation

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய்: இமி-3

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

வஹ்ஹாபி


சத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்)

இஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை – குறிப்பாக – தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, தனக்கு எதிரானவற்றை மறுப்பதற்கும் தன் கூற்று முற்றிலும் உண்மை என்று நிறுவுவதற்கும் சத்தியம் செய்வதற்கு அனுமதி உள்ளது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் மூன்றுவகை சத்தியமிடுதல்கள் வழக்கில் இருந்தன:

1. தாங்கள் வழிபடும் சிலைகளின் பெயரால் செய்யப் படும் தீர்க்கமான சத்தியம், [புகாரீ6650; சுட்டி-20].

2. தங்கள் மனைவியரைத் தள்ளி வைப்பதற்காக, “சத்தியமாக நான் உன்னுடன் உறவு கொள்ள மாட்டேன்” எனக் கூறும் வதைச் சத்தியம் [சுட்டி-21],

3. எவ்வித உள்நோக்கமும் தேவையும் இன்றி விளையாட்டாகக் கூறும் வெற்றுச் சத்தியம் [சுட்டி-22]. இதை “அல் யமீனுல் லக்வு (வீண் சத்தியம்)” என்று அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர், அரபு மக்களிடையே எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்ததை அவர்களது வரலாறு கூறுகிறது. “என் தந்தை மீதாணை!”, “உன் தந்தை மீதாணை!” எனக் கூறுவது அவர்களது இயல்பாக இருந்திருக்கிறது. இது, நமது நாட்டார் வழக்கான “ஒங்கொப்புராண (உன் அப்பன் மீதாணை)” என்பதை ஒத்ததாகும். “தன்னைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யார்/எதன் மீதும் ஆணையிடக் கூடாது” எனும் திருத்தம் [புகாரீ6108; சுட்டி-23] வரும் வரைக்கும் நபித் தோழர்கள் உட்பட அனைவரும் பழைய பழக்கத்திலேயே இருந்திருக்கின்றனர்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னரும், “இன்றிரா எனக்கு உணவு வேண்டாம்” எனக் குடும்பத் தலைவர் கூறுவதற்கு ஒரு சத்தியம்; பதிலுக்கு, “உன் தந்தை உண்ணாவிடில் நானும் உண்ண மாட்டேன்” எனக் கூறும் தாயின் சத்தியம்; “வீட்டுக்காரர் உண்ணாமல் நாங்கள் உண்ணப் போவதில்லை” என்பதாக விருந்தாளிகள் செய்யும் சத்தியம் போன்ற தேவையற்ற சத்தியங்கள் நபித்தோழர்களின் நாவினில் வெகு சரளமாக விளையாடும் சொற்களாக இருந்துள்ளன [புகாரீ6141; சுட்டி-24].

தன் மனைவி தன்னோடு இணங்கி இருப்பதையும் பிணங்கி இருப்பதையும் பிரித்து அறிந்து கொள்வதற்கு, சரளமாக அவர் இடும் சத்தியம் சார்ந்த சொற்கள் அடிப்படையாக இருந்ததை அண்ணலாரின் குடும்ப வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது [புகாரீ5228; சுட்டி-25].

மூன்றாவது அரைகுறையை இனங் கண்டு கொள்வதற்கு மேற்காணும் வரலாற்றுத் தகவல்கள் வாசகர்களுக்கு உதவக் கூடியவையாக அமையும்.

அரைகுறை-3 சுரா (2: 225) (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி, உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாக இருக்கின்றான்.

மேற்காணும் இறைவசத்தை எடுத்துப் போட்டு, அதற்குத் தொடர்பில்லாத “பிறமதத்தவரை ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் சத்தியம் செய்வார்கள்” என்பதாகத் திண்ணையில் புனித மோசடி [சுட்டி-02] செய்யப் பட்டது.

“நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, உங்கள் உள்ளங்கள் திட்டமிட்டு(ச் சத்தியங்கள் செய்து) பெற்றுக் கொள்பவற்றுக்காக உங்களை(க் குற்றம்) பிடிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகித்துக் கொள்பவன் [அல் குர்ஆன் 002:225]. Allah will not call you to account for thoughtlessness in your oaths, but for the intention in your hearts; and He is Oft-forgiving, Most Forbearing [சுட்டி-26].

“நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, நீங்கள் செய்யும் தீர்க்கமான சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களை(க் குற்றம்) பிடிப்பான் … [அல் குர்ஆன் 005:089] Allah will not call you to account for what is futile in your oaths, but He will call you to account for your deliberate oaths … [சுட்டி-27].

ஒருவரது கூற்றை “ஆம்” என்று ஏற்றுக் கொள்வதற்கும் வேறோரு கூற்றை “இல்லை” என்று மறுப்பதற்குங்கூட, “அல்லாஹ்வின் மீதாணை!” என்று சேர்த்துச் சொல்லுவது வழக்கமாக இருந்தது. “அவையெல்லாம் வெற்றுச் சத்தியங்கள்தாம்” என்று இறைவேதம் தெளிவு படுத்தியது [புகாரீ 4613; சுட்டி-28].

மேற்காணும் இறைவசனங்களில் தன் இனத்தவர் என்றோ பிற மதத்தவர் என்றோ குறிப்பேதுமில்லை என்பது இங்குக் கூடுதல் கவனத்திற்குரியது. புனித மோசடியில் குறிப்பிட்டுள்ளவாறே “யோசனையின்றி”ச் செய்யும் சத்தியங்களோடு பிற மதத்தவரை எப்படி ஏமாற்ற முடியும்? என்பது ‘யோசனை’க்குரியதாகும். இதில் தக்கியா எனும் பேசுபொருள் எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடிக்க வேண்டியது வாசகர்களின் பொறுப்பாகும்.

***

“பிற மதத்தவரை ஏமாற்றுவதற்காகப் பொய் சத்தியம் செய்து விட்டு, அதற்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்” எனும் மாயையை ஏற்படுத்துவதற்காகப் புனித மோசடி செய்யப் பட்ட இன்னொரு இறைவசனத்தையும் பார்க்கலாம்:

அரைகுறை-4 சுரா (66:02) – அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

மேற்காணும் 066ஆவது அத்தியாயத்தின் தொடக்க இறைவசனங்கள், அந்த வசனங்களை மக்களுக்கு எடுத்தோதும் பொறுப்பில் இருந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து அருளப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் மூவர் தொடர்புடைய நிகழ்வைக் குறித்தும் இறைவனால் ஆகுமாக்கப் பட்ட பானங்களின் ஒன்றான, “தேனை நான் இனி அருந்த மாட்டேன்” என்று சத்தியம் செய்ததற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனால் கண்டனம் செய்யப் பட்டதைக் குறித்தும் பேசும் வசனங்களை, பிற மதத்தவரோடு பொருத்தி புனித மோசடி செய்யப் பட்டது. அதைத் திண்ணையும் பெருமையோடு பதித்தது.

அந்த நிகழ்வைக் கூறும் முழுவசனங்கள்:

“நபியே!, அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை உம் (இரு) மனைவியரின் உளநிறைவுக்காக நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்கள்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரில்லா அன்புடையோன். உங்களுடைய சத்தியங்களை முறித்துக் கொள்வதற்கு உரிய பரிகாரத்தை அல்லாஹ் கடமையாக்கித் தந்திருக்கிறான். அவன்தான் உங்கள் அதிபதி. அவன் நன்கறிபவன்; ஞானம் மிக்கவன் [அல் குர் ஆன் 066:001-002] O Prophet! Why holdest thou to be forbidden that which Allah has made lawful to thee? Thou seekest to please thy consorts. But Allah is Oft-Forgiving, Most Merciful. Allah has already ordained for you, (O men), the dissolution of your oaths (in some cases): and Allah is your Protector, and He is Full of Knowledge and Wisdom. [சுட்டி-29].

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் சென்றால் அங்குத் தேன் அருந்துவதையும் அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (இதை விரும்பாமல் அவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் கூடிப்பேசினோம். (தேனருந்தி விட்டு) நபி (ஸல்) அவர்கள் நம்மிருவரில் யாரிடம் முதலில் வந்தாலும் அவர், “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே” என்று கேட்க வேண்டும் என முடிவு செய்துகொண்டோம்.

வழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேனருந்தி விட்டு, நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கேட்டோம். நபியவர்கள், “இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை); ஸைனபின் இல்லத்தில் தேனருந்தினேன். சத்தியம் செய்கிறேன்: (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்த மாட்டேன்” என்று கூறிவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!” என்றும் கேட்டுக் கொண்டார்கள். – அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) – புகாரீ 4912; [சுட்டி-30].

இதில் தக்கியா எங்கே? பிறமதத்தவர் எங்கே?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

– தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ

to.wahhabi@gmail.com

http://wahhabipage.blogspot.com

சுட்டிகள்:

20 – http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6650

21 – http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt#002.226

22 – http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4613

23 – http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6108

24 – http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6141

25 – http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=5228

26 – http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt#002.225

27 – http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/005.qmt#005.089

28 – http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4613

29 – http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/066.qmt#066.001

30 – http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4912

Series Navigation