நம்பமுடியாமல்…

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கஜன்


நேற்று ஆங்கிலத்தில் ‘இன்சயிட் மான் ‘ பார்த்தேன். டென்சில் வோசிங்டன் நடித்த படம். சென்ற வெள்ளி தான் வெளியானது. 25 மில்லியன்களுக்கு மேலாகவே முதல் வாரத்தில் உழைத்த ஹோலிவுட் படம். படம் தொடங்கும்போது என் காதுகளையே நம்ப முடியாமல் செய்த விடயம் என்னவென்றால், எழுத்துக்கட்டம் தொடங்கும் போது ஏ.ஆர் ரகுமான் தில்ஷே படத்தில் இசை அமைத்த பாடல், முழுதாக பின்னனியில் ஒலிக்கப்பட்டது தான். ஆரம்ப எழுத்துக்கட்டத்தில் இந்தப்பாடல் எங்கிருந்து பெறப்படது என்று சொல்லவில்லை. இறுதியில் சொல்லப்பட்டிருக்கலாம். முழுதாக இருந்து ஈற்று எழுத்துக்கட்டத்தைப் பார்க்கும் பொறுமை எத்தனை மனிதர்களுக்கு உண்டு ? பொதுவாகச் சொன்னால் திரையரங்கில் ஒருசிலரைத் தவிர எல்லோரும் எழுந்துவிட்டனர். இவ்விடயத்தில் கனேடியர்களும் தமிழ்ப்பட

ரசிகர்களைப் போலத்தான் போலும். மனையாள் துரிதப்படுத்த என்னாலும் இருந்து இறுதி எழுத்துக்கட்டத்தைப் பார்க்க முடியாது என்று திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டேன்.

இவ்வாறு ஹிந்திப்பாடலோ அல்லது வேறு மொழிப்பாடலோ குறிப்பிடத்தக்க ஹோலிவுட் படத்தில் இடம்பெறுகிறதா தெரியவில்லை. எதுவாயினும் (மணிரட்ணம் இயக்கிய படப்பாடல்) ரகுமான் இசையமைத்த ஹிந்திப்பாடல் மனத்தை நெகிழச் செய்தது.

வாழ்த்துகள் ரகுமான்.

அன்புடன்

கஜன்

29 மார்ச் 2006

avathanikajan@yahoo.ca

Series Navigation