This entry is in the series 20100718_Issue

ஷம்மி முத்துவேல்



கனவுகள் தொலைத்தே
கற்பனைகள் வாங்கினேன் …
உடல் தீண்டும் அரவம் ஒன்று
உயிர் வாங்கி போனது ……

ஞாபக விதை ஒன்று
உள் நோக்கி வளர்ந்து
கைகள் விரித்தப்படி
விழுதுகள் நீண்டது ……

தலை முதல் கால் வரை
கொழு சுற்றிய கொடியாய்
இறுக சுற்றி
தின்று துப்பியது
நஞ்சடைத்த வார்த்தைகள்

இருட்டு வானம்
கதைத்து செல்ல
விடியல் சூரியன்
விழித்து விழுங்கியது …

Series Navigation