நகரத்து மனிதாின் புலம்பல்

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue

வ.ந.கிாிதரன்


மரங்களிலிருந்து ‘காங்ாீட் ‘ மரங்களிற்கு…
குரங்கிலிருந்து மனிதனிற்கு…
ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு…
பாிணாம நிகழ்வு, வளர்ச்சி
என்கின்றது
முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின்
சுற்றம்.

இதற்கொரு விளக்கம் வேறு…

ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு
விருட்சங்களிற்கும் பொதுவான செயலென்று
கருத்தியல் வேறு.

உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை
உம்மைப்போல் விருட்சத்தோழரே!
உணவைப் படைப்பதில்லையே ?
உயிரையெமக்குத் தருவதில்லையே ?

தோழரே! நீரோ மேலும்
நிழலைத்தந்தீர்! உமது
காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!
இலையைத்தந்தீர்!
இறுதிலும்மையே தந்தீர்!

ஆனால்…….

விருட்சங்களிவை
தருவதென்ன ?

‘நன்றி மறத்தல் ‘ நம்மியல்பன்றோ ?
நன்றியை மறந்தோம்.

நண்பருமது தொண்டினையிகழ்ந்தோம்.

இதனால்
இன்றெமக்கு

இரவு வானத்துச் சுடரையும்

நிலவுப்பெண்ணின் எழிலையும்

பாடும் புள்ளையும்

இரசிக்கும்
உாிமை கூட
மறுதலிக்கப் பட்டு விட்டது.

உம்மையிழந்ததினால்
இந்த மண்ணும்
உலர்ந்து போனது.

‘எாியுண்ட தேச ‘மென்பதாக
இன்று
எமது கிரகமும்
‘எாியுண்ட கிரகம் ‘
என்பதாச்சு

Series Navigation