தொல்லை

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

பவளமணி பிரகாசம்


பாசத்தோட பாக்குறா,
நேசத்தோட நெருங்குறா,
ஆசையோட அலையறா,
அருகில் வர துடிக்கிறா,
பகலில் ஓடி ஒளியறா,
பக்கம் வர வெக்கமோ ?
இருட்டு வர காத்திருந்து
இஷ்டம் போல கடிக்கிறா-
எந்த எதிர்ப்பும் பலிக்கலையே,
கொசுத்தொல்லை தாங்கலையே!

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்