தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

அறிவிப்பு


கதா காலம்

தேவகாந்தனின் ‘கதா காலம் ‘ மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளியீடு சித்திரை 17 ‘ஏப்ரல் 17 மாலை 5.30 மணிக்கு ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் கருத்தரங்க அறையில் நிகழவிருக்கிறது. வெளியீட்டுவிழா, விமர்சன அரங்கு என்ற இரு அமர்வுகளில் நிகழவிருக்கும் இவ்விழாவில் முக்கிய பிரமுகர்களும், சிறந்த இலக்கிய விமர்சகர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். விழா 5.30-8.30 என்ற நிறுதிட்டமான காலவெல்லை கொண்டது.

மஹாபாரதத்தின்; மறுவாசிப்பான இப்பிரதி பாரதம் சொல்லாதுவிட்டதும், உள்ளடக்கிச் சொல்லியதுமான சேதிகளை சூத மாகத புராதன கதைசொல்லிகளின் முறைமையிலும், சித்தர் குணங்களோடான நவீன கதைசொல்லிகளின் பாங்கிலும் தன் புனைவின் கூர்மையோடு வெளிப்பாடு செய்திருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வாகக் கருதப்படும் பாரதப் போரும் அதன் முன்னைய பின்னைய சம்பவங்களும் எவ்வளவுக்கு, எவ்வாறு நடந்தனவென்றும், மஹாபாரதம் என்ற பெயரில் பல பொய்யுரைகளேற்று வருவதன் முன் ‘ஜெயக் கதை ‘ என்ற பெயரில் சூத மாகத பாணர் குழுக்களின் கதாசாரமாகவிருந்த அந்நிகழ்வுகளின் உண்மைத் தன்மையைக் கண்டடையவும் பிரதி செய்;திருப்பது அசாத்திய முயற்சியாகும். மானுட, வரலாற்றியல் நோக்கில் ஆய்வும் புனைவுமாய் பிரதி அற்புத வாசிப்பைச் செய்திருக்கிறது.

2003 இல் வெளியான தேவகாந்தனின் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம் ‘ நாவலுக்குப் பின்னால் வெளியாகும் இக் ‘கதா காலம் ‘ நூலும் தீவிர வாசகர்களுக்கான கருத்துக்களையும் ஆகிருதியையும் கொண்டிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். பிரதித் தளத்தில் கனதியாய் இருப்பதின்மூலம் ‘கதா காலம் ‘ உங்கள் விமர்சனங்களைக் காத்துநிற்கிறது.

—-

Series Navigation