தேடுதல்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

சுவாதி கிருஷ்


அள்ளிமுடித்த கூந்தலில்
அரை முழம் பூச்சூடி
அகல்விளக்கேற்றி
நாணத்தின் நிழலில்
நடந்த தமிழ் நங்கைகள்
இஇன்று வெறும்
காவியங்களில் வாழ்வதால் – நான்
நூலகங்களில் இன்று இல்லறம்
நடத்துகிறேன்

தமிழ் பேசும் உதடுகள்
தேடும் என்னை – சாயம் பூசிய
உதடுகள் பார்த்துச் சிர்க்கின்றன!

மாறிவரும் உலகத்தில்
பழைய பஞ்சாங்கமாய் நான்
அவர்கள் கண்களில்

கொலுசுகளை மறந்துவிட்ட உலகத்தில்
கண்ணகிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன் – நான்
தேய்பிறையில் முழு நிலவைக் காணத் துடிக்கிறேன்

swatikrish@rediffmail.com

Series Navigation

சுவாதி கிருஷ்

சுவாதி கிருஷ்