தெரிந்தவன்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

பொ கருணாகர மூர்த்தி


கைலைவாசனும் சிவகுமாரனும் பெர்லின் நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ள அந்தத் தொகுப்பு வீட்டுக்கு வந்து மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டது. நியோ நாஜிகள், றீபப்பிளிக்கானர்கள், மற்றும் இருட்டடி இளவல்களின் தொந்தரவுகள் குறைந்த அமைதியான ஒரு இடம்.

என்ன வேலைக்குப் போகிறதுக்குத்தான் தினமும் ஊ-பாண் (சுரங்க ரயில்) எடுக்க ஒரு கிலோ மீட்டர் நடக்கவேணும். திரும்ப ஒரு கிலோ மீட்டர் மொத்தம் இரண்டு கிலோமீட்டர் நடந்தேயாகவேணும். னாலும் பரவாயில்லை.

சிவகுமாரனின் டொக்டரும் சொல்லிப்போட்டார் தினமும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் என்றாலும் அவன் நடக்கவேணுமாம். அல்லாவிட்டால் இந்த இளந்தாரி வயதிலேயே தவில்கட்டிவிட்ட மாதிரி உப்பிக்கொண்டு நிற்கிற தொந்திக்கு வேறொரு வைத்தியமும் செய்யேலாதாம்.

அவர்களது அதே தொகுப்புக் கட்டிடத் தொடரில் பத்துவீடுகள் தள்ளி ஜெர்மன் நாஷனலிட்டிக்கு அப்பிளிக்கேஷன் கொடுத்துவிட்டுத் தேர்தலிலே வாக்களித்து ஜென்ம சாபல்யம் அடையும் கனவுகளோட இருக்கிற இரண்டு உறவுக்காரத் தமிழ்க்குடும்பங்கள் இருக்கினம் (சகலன்கள்). அவை ஊரிலேயே தாங்கள் யோசிக்காமல் சொம்பு எடுக்கத்தக்க இடங்களிலதானாம் பழகுவினம். வெளியாட்களோட புழங்கிறதி_ f8லையாம். வந்த புதிதில் ஊரில் வைகாசி னியில் எறிக்கிற மாதிரி வெய்யில் எறித்த ஒரு கோடைப்பகலில் Schultheis கொம்பனிக்காரன் விளம்பரத்துக்காக

பெரிய மரபீப்பா பூட்டின குதிரைவண்டியிலே பியரைக் கொண்டுவந்து திருவாளர் பொதுசனத்துக்கு இலவசமாக விநியோகித்தபோது அந்த கியூவில சிவகுமாரனோடு சேர்ந்து நின்ற அச்சகலன்களில் ஒருத்தர்தான் தம் கொள்கை விளக்கமளித்திருந்தார்.

‘னால் தம்பி நான் சொல்லிறன் என்று குறையாய் நினையாதையும்…. தெரிஞ்சவை செறிஞ்சவையெண்டு மாத்திரம் இந்த புளொக்கில வேறை யாரையும் எங்கட சனத்தைக் கொண்டு வந்து சேர்த்துப்போடாதையும்.”

“ ஏனுங்கோ…. ?”

“ மிச்சம் நல்ல Hausverwaltung (வீட்டுகளின்நிர்வாகம்). நம்ம சனம் வந்து கூடிச்செண்டால் எல்லாத்தையும் நாறடிச்சுப்போடும்.”

ஊ-பாணுக்குப்போகிற பிரதான வீதியிலேயிருந்து கிழக்கே நோக்கிப் பிரிகிற கிளை வீதியிலே பேதை, பெதும்பை, கன்னிப் பருவங்களில் ஒரே பெண்பிள்ளைகளாய் நிறைச்சு வைச்சிருக்கிற வேறும் இரண்டு குடும்பங்களைத் தவிர அந்தச் சுற்றுவட்டப்பிராந்தியத்திலே வேறுயாரும் தமிழ்ச் சனமிருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. ஜெர்மன்காரனே ‘ஒரு தமிழ்க்குடும்பமிருந்தால் போதும் அந்த ஏரியாபூரா கறிமசாலாவும் மிளகாய்த்தூளும் மணக்கும்” என்பான்.

எவனாவது ஒரு மந்திரிக்கு இருபத்தையாயிரத்தைத் தள்ளி கிளறிக்கல் சேர்விஸில கொழுவுப்பட்ட மாப்பிள்ளைகளே சீதனம் ஐந்து இலட்ஷம், இனாம் ஐந்து இலட்ஷமென்று டிமாண்ட் பண்ணின காலமெல்லாம் மலையேறி இப்போ முப்பத்தைஞ்சுக்கு மேலே இளந்தாரிகளே இல்லையில்லை முதிர்தாரிகளே போட்டி போட்டுக்கொண்டு இந்திரனுக்கு வந்த பெண்ணைச் சுந்தரன் தட்டிக்கொண்டு பறக்கிற இந்த யுகத்தில இ னி பெண்பிள்ளைகளை வைத்திருக்கிறவை யாரெண்டாலும் முன்வந்து பிரமச்சாரி இளந்தாரிகளோட பழகமாட்டினந்தானே ?

எப்பிடித்தானென்றாலும் காணக் கதைக்க நாட்டுநடப்புகளை அறிய அயலில ஒரு தமிழ்ச்சனமில்லாதது ஒரு பொச்சம் அடங்காத மாதிரித்தான் அவர்களுக்கு இருந்தது.

சிவகுமாரன் நிமிஷம்கூடத் தவறாது வேலைக்கு ஜராகிவிடும் ஒரு விசுவாசமான தொழிலாளி.

வேலைக்குரிய நேரத்திற்கு அரைமணித்தியாலம் என்றாலும் முன்னதாகப் போய் குந்திக்கொண்டு கோப்பி குடித்துக்கொண்டிருப்பான்.

ஒருநாள் மத்தியம் சாப்பாடெல்லாம் முடித்து பீடா போட்டுக்கொண்டு வழமைபோல் வேலைக்கு இறங்கிப்புறப்பட்டவன் வழியில் இன்னொரு ஈழமறவன் எதிரத்திசையிலிருந்து வந்து கொண்டிருப் பதைக் கண்டு சந்தோஷப்பட்டான். வண்டில் வளையக்கட்டைகள்போல் உள்வளைந்த கால்களோடு கைகளையும் பக்கவாட்டில் காகங்கலைப்பது போல வீசிக்கொண்டு ஒரு விசுக்கல் நடையுடன் வந்தவன் அண்மித்ததும் ‘உர் ‘ரென்_ c8ிருந்த அவன் கடுப்பான முகத்தைக்கண்டு ஒரு கணம் தயங்கினாலும் எதற்கும் தமிழனாய்ச்சே ஒரு அந்நியநாட்டில் இதுகூடச் செய்யக்கூடாதாவென்று சிவகுமாரன் ஒரு நீளமான சிரிப்பை அவனை நோக்கி உதிர்த்தான்.

மனிதன் ஒரு ஜடத்திற்குரிய எதிர்வினை-தெறிவினைகூடவின்றித் தொடர்ந்து -உர்- என்று முகத்தை வைத்துக்கொண்டு விலகிப்போனான்.

மறுநாளும் சிவகுமார் வேலைக்குப்போகும் அதேவேளை அவன் வந்தான்.

‘ நேற்றுத்தான் அவன் ஏதாவது யோசனையில் போய்க்கொண்டிருந்திருக்கலாம், சரியாக

என்னைக் கவனிக்காமல்கூட இருந்திருக்கலாம், இப்ப என்னதான் வரப்போகுதென்று முதல்நாள்போல இன்னொரு புன்னகையை எடுத்து அவன் மேல் வீசினான்.

மனுஷன் அவனைப்பார்த்து முழிசிக்கொண்டு போனான். அட அன்னியநாட்டில் அதுவும் இளைய தலைமுறையில் இப்படியொரு பிறப்பா ? பதிலுக்கு ஒரு சிறு தலையசைப்பு, குறைந்தது ஒரு மைக்கிரோ முகலோபனம் ஒரு முறுவல் இருக்கவேணுமே…. ஊஹூம்!

அடுத்த நாளும் அவன் வந்தான். ‘கேஸ் வலு வெக்கறை பிடிச்சதாயிருக்கவேணும்….அல்லது கொஞ்சம் மென்டலாய் இருக்கவேணும்…. சரி வருவதுவரட்டும். அன்றும் அவன் வலிந்து அவனுக்குப் புன்னகைத்தான். மூன்று தலையுள்ள ஒரு மனிதனைப்பார்க்க நேர்ந்தது மாதிரி விநோதமாய் அவனைப் பார்த்துக்கொண்டு போனான்.

சிவகுமாரனுக்கு ற்றவில்லை. வேலையால் திரும்பியதும் சாமம் என்றும் பாராது தூக்கத்திலிருந்த கைலைவாசனை எழுப்பி நடந்ததனைத்தையும் சொல்லிவிட்டு

‘சிலவேளை யாரும் பங்களாதேஷ்காரன், சூரினாம்காரனாக இருப்பானோ…. பாஷைதெரியாமல் என்னத்தைப்பேசுறதென்டு போயிருப்பானோ ?” என்ற தன் குறைந்த பட்ச சந்தேகத்தையும் கிளப்பினான்.

‘ சிநேகமான ஒரு புன்னகைக்கு எதுக்கு மேன் பாஷை ? ‘

‘ அது சரி எப்பிடியெப்பிடி ளின்ர சாயல்…. இன்னொருக்கா விபரமாய்ச் சொல்லு. ‘

‘ ஒரு நல்ல கறுவல் மேவிப்பின்னுக்கிழுத்த தலை, போர்த்தேங்காய் மாதிரி நீண்ட முகம், விசுக்கிகொண்டு ஒரு ராஜபார்ட் நடை. ‘

‘ டடடட விளங்கிப்போச்சு நீ சொல்ற சாமானாரெண்டு. ‘

“ காலைப்பகிடி பண்ணாத…. அது இளமையில சரியான போஷாக்குக் கிடையாததாலகூட வளைஞ்சிருக்கலாம். தெரிஞ்சால் ரெண்டுதான் கக்கன்.”

‘நானெங்க பகிடிபண்றன்…. ஒரு அடையாளத்திற்காகச் சொன்னனான்…. தெரியும் தெரியும் ள் வந்து ‘ x x x x x ‘ இயக்கத்துக்கு நிதிசேர்க்கிறவர். உங்க நாஷனாலிட்டி பார்ட்டியிட்டை ள் கல்லிலை நாருரிக்கத்திரியுது…. எரிச்சல்லை போயிருந்திருப்பான். நீயும்

போய் உன்னட்டை இளிக்கேல்லையெண்டு.”

“ அதுக்கு ஒரு மரியாதைக்காய் ஒருத்தன் சிரிச்சால் பதிலுக்குத் தலையைத்தன்னும் அசைத்துவிட்டுப்போகிற ஒரு குறைந்தபட்ச நாகரீகம் கூடத்தெரியாத காட்டுமிராண்டியாய் இருப்பானோ ஒருத்தன் உலகத்தில ?”

‘ அவையளின்ர கணிப்பில மற்றவர்களெல்லாம் எதிர்முகாமைச் சேர்ந்தவர்கள்.”

“ அதுக்காக….இப்பிடியொருத் ”

“ சாமத்தில மனிசனை எழுப்பிவைச்சு அரியவெண்டு வந்திருக்கிறாய் என்ன…. ஏதும் வார்த்துக்கொண்டு வந்திட்டியோ….மூடிக்கொண்டு பட்றா டேய்…. மனுஷன் வேளைக்கு எழும்பவேணும். ‘

நாலாம் நாளும் சரியாக இவன் வேலைக்கு போகிற நேரம் பார்த்து அவன் வருகிறான்.

சிவகுமாரனுக்கு இன்றைக்கு என்னதான் செய்கிறானென்று பார்க்கவேணும் போலிருந்தது.

எதிர்கொண்டு புன்னகைத்தான். கவனியாதவன்போல தரையைப் பார்த்துக்கொண்டு போனான்.

என்ன நேர்ந்தாலும் ஐந்தாம் நாளும் புன்னகைப்பதாகவே இருந்தான். மறுநாள் அப்பிரகிருதி

இவனைத் தூரத்தே கண்டதும் வெட்டிக்கொண்டு வீதியின் மறு பக்கத்துக்கு மாறின அழகைப் பார்த்திருக்கவேணுமே ?

அதற்குப் பின்னாலும் இரண்டு மூன்று வருஷங்கள் அவன்தான் அப்பிராந்தியத்தின் நிதிசேகரிப்பாளராக இருந்தான். விசா அலுவலகத்தில், சமூகஉதவிகள் அலுவலகத்திலென்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அவனை நேரெதிர்கொள்ள நேர்ந்தபோதெல்லாம் சிவகுமாரனும் தன் பழக்கதோஷத்தால் புன்னகைத்துத் தோல்வியேயடைந்திருக்கிறான்.

இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழிந்திருக்கும். நிதிசேகரிப்பாளன் அந்தப்பகுதிக்கு வருவது நின்றுபோயிருந்தது. விசாரித்ததில் அவன் மேற்படி இயக்கத்தின் தலைமை அலுவலகத்தால் வேறு பணிகளுக்காக அழைக்கப்பட்டு ஈழத்துக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். இந்திய அரசு இலங்கைத்தமிழர்களின் அரசியலபிலாஷைகளை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளிவிட்டு இலங்கை அரசுடன் பாதுகாப்பு எ_ fdற பெயரில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. பின் அதன் விளைவால் இடைக்கால அரசினை அமைப்பதற்காக தேர்தல் ஒன்றை நடத்திய போது அவன் பெயர் அவர்கள் கட்சியின் தேசியப் பட்டியலில் இருப்பதாகவும் அவன் மந்திரியாக வரலாமென்றுங் கூடப் பேசிக்கொண்டார்கள்.

பின் இடைக்கால அரசு என்ற ஒன்று அமைக்கப்பட்டபோது பரதேசங்களில் இடம்பெயர்ந்திருந்த தமிழர்கள் பலரும் செய்ததைப்போன்றே கோடைவிடுப்பில் ஒரு நாள் சிவகுமாரனும் ஊரைப்பார்த்துவிட்டு வரலாமென்று வலுடன் புறப்பட்டான்.

பின்னிலவுக்காலம். காட்டுப்பனி குளிராகவிருக்க வவுனியா நோக்கிய மெயில்வண்டி ‘சடசட ‘த்தபடி பக்கவாட்டில் பயணிகளை ட்டியாட்டி இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. கொழும்பிலிருந்து சிவகுமாரனை யாழ்ப்பாணம் அழைத்துப்போக வந்த உறவினன் மணிக்கூட்டைக் கவிழ்த்துப்பார்த்து

விட்டு கொட்டாவியுடன் ‘வவுனியா வருகுது” என்றான். சிவகுமாரன் வலுடன் எட்டி வெளியே பார்த்தான். காடுகள் முற்றாக வெட்டிச்சாய்க்கப்பட்டு நிலவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வெட்டையாயிருந்தது. ரயில் நிலையத்தை அண்மிக்க அண்மிக்க அந்த இடம் வவுனியாபோலவே இருக்கவில்லை. தூரத்தில் பரவலாக தென்பட்ட கொட்டில்களில் மினுக்மினுக்கென்று வெளிச்சங்கள் தெரிந்தன.

“ அவை என்ன வெளிச்சமென்று தெரியுதோ…. ? ” உறவினன் கேட்டான்.

“ இல்லை .”

“ எல்லா இடத்திலும் எங்கட அம்மானவைதான் சுற்றி இருக்கினம்…. புலிகள் ஊடுருவியிடலாமென்று பயம். ”

வவுனியாவில் ரயிலைவிட்டிறங்கியதும்; மிக்காரர்களின் முதலாவது செக்போஸ்ட் அவர்கள் இரண்டு சூட்கேஸ்ளையும் திறந்து கொட்டிக்கிளறிவிட்டு அள்ளிக் கொள்ளச் சொன்னார்கள். அதிலொருவன்

“ •போறின்ல இருந்து வாறபோல இருக்கு…. இரண்டு விஸ்க்கி பொட்டில் கொண்டாரப்படாதா ?” என்றான்.

“ கொண்டுவரப்படாதென்றார்களே. ”

“ கொண்டு வரலாம்…. கொண்டுபோகப்படாது. நித்திரை முழிச்சு வேலைசெஞ்சற எங்களுக்குத் தரோணும்….! ”

பெரிய நகைச்சுவையை உதிர்த்துவிட்டவன் போல அந்தப்படையினன் மஞ்சள் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

‘காஷ் எவ்வளவிருக்கு ?”

சிவகுமாரனும் அதைக்காதில் போட்டுக்கொள்ளாமல் மற்றப்பையன் உதவியுடன் சாமான்களை அள்ளி சூட்கேஸில் அடைந்து கொண்டிருந்தான்.

‘அதுக்கும் ஏதோ வில்லங்கந்தான் போலகிடக்கு ‘ மனதில் லேசான பயம் பரவ கொஞ்சம் உயர்தரத்திலான அதிகாரி ஒருவன்அவர்களைப் போகும்படி கைகாட்டினான்.

யிரத்தெட்டு சோதனைச்சாவடிகள். ஒவ்வொன்றிலும் மறைவிடத்திலுள்ள உரோமங்களை எத்தனையென்று எண்ணிக்கொள்ளவில்லையே தவிர மற்றதெல்லாவற்றையும் உன்னிப்பாக ராய்ந்தார்கள். சோதனைகள் எல்லாம் ஒருவாறு முடிந்து தாரெல்லாம் அள்ளுப்பட்டுக் குன்றும் குழியுமாயிருந்த வீதிகளில் ஒடித்து ஒடித்து ஓடிக்கொண்டிருந்த சிற்றுந்து குடல்வாய்க்குள் வரும்படியாகக் குலுக்கிக்கொண்டு போனது. அவனு_ ecகு நாமென்ன சொந்த நாட்டுக்குத்தான் வருகிறோமா இல்லை ஏதோ அன்னிய நாட்டுக்குள் பிரவேசிக்கிறாமோ என்றிருந்தது.

பத்து ண்டுகளில்தான் எவ்வளவு , மாற்றங்கள், அழிவுகள், சிதிலங்கள்!

ஊரில் யாருக்கும் இவனைத் தெரிந்திருக்கவில்லை. சிறுவர்களாக இருந்தவர்கள் பெரியவர்களாகியிருந்தார்கள். கண்ணில் தென்பட்ட சிறுவர்கள் அனைவரும் புதியவர்களாயிருந்தனர். பெரிவர்கள் பலரை இவனாகத் தெரிந்துகொண்டான். இவனுக்குத் தெரிந்த முதியவர்கள் எவரையும் காணவில்லை. விசாரித்ததில் பலரும் விடைபெற்றுக்கொண்டுவிட்டதாக அறிந்தான்.

இவ்வாழ்க்கைதான் எவ்வளவு குறுகியதாயிருக்கிறது. இதற்குள் மனிதன்தான் எத்தனை விஷயங்களுடன் மல்லுக்கட்டுகிறான். ணவம், திக்கமனோபாவம், அதிகாரம், இனவாதம், ஜாதியம், காட்டிக்கொடுப்புகள், காலுக்குள்மிதித்தல்கள், கழுத்தறுப்புக்கள்.

சிவகுமாரன் வந்தது அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே யினும் எங்கே இந்தியன் மியிடம் இசகுபிசகாக மாட்டிவிடுவானோ என்று பயந்துகொண்டிருந்தனர். இரவில் அங்கங்கே கேட்கும் வெடிச்சத்தங்களாலும் , நேரகாலமின்றி உறுமித்திரியும் கவசவாகனங்கள், டிறக்வண்டிகளின் இரைச்சலாலும் சிவகுமாரனும் மிரண்டான். பழக்கமில்லாத இவ்வதிர்வுகளால் தூக்கம் குழம்பி படுக்கையில் எழுந்_ beிருக்கும் போதெல்லாம் தாயாரும் எழுந்து தேனிர் போட்டுத்தருவாள். மறுபடி தூக்கம் பிடிக்க வெகுநேரமாகும்.

அருகிலுள்ள ‘காம்ப் ‘ களிலிருந்து பொழுது புலருமுன்னரே ‘தம்பி…. தம்பி” என்றுகொண்டு வளவுக்குள் இந்திய சமாதானப் படையினர் எந்தவேலியாலாவது புகுந்துவிடுவார்கள். முற்றத்தில் நிற்பார்கள், கோடிக்குள் என்னகிடக்கென்று ராய்வார்கள். கோழி, விறகு, என்று கையில் அகப்படும் எதையாவது சுருட்டிக்கொண்டு போவார்கள். மதியம் வந்தார்களாயின் பின் வளவில் முன்னர் டுமாடுகள் கட்டுவதற்

‘ccப்போட்ட தொழுவத்துள் வெய்யில் இளைப்பாறுவார்கள். பின் ஏதோ தங்கள் வீட்டுச்சொத்து மாதிரி யாரையும் கேளாமல் கொள்ளாமல் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளிப்பார்கள். குளித்தபின் கிணற்றடியிலுள்ள தென்னையில் ஏறி இளனீர், முட்டுக்காய், தேங்காயெல்லாம் பறித்துக்கொண்டு போவார்கள்.

‘ கிணத்திலே தண்ணியிருக்கு, வளவுக்குள்ள பனை, தென்னை, மா, பலா இருக்கு…. பிறகென்ன மசிருக்குத்தான் இவங்களுக்குத் தனிநாடு ? ‘ என்பார்களாம் கொச்சையான ங்கிலத்தில்.

“ இவர்கள் இப்படிப் பண்றது அராஜகம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளவேணும் என்றில்லை. விடுங்கோ நான் போய் மியிலை பெரியவனிட்டை இப்படியான அத்துமீறல்கள் இங்கே நடக்குதென்டு கொம்பிளையின் பண்ணிப்போட்டுவாறன்.”

“ வேண்டாம் ராசா நீ விளங்காமல் கதைக்கிறாய்…. அள்ளுண்டு போவாங்கள் வீட்டுக்க உள்ளடாத வரையிலும் என்ன அநியாயமென்டாலும் செய்திட்டுப்போகட்டும்…. அப்பிடியொரு முறைப்பாடு குடுத்திட்டம் என்று அறிஞ்சால்தான் அவங்களின்ர தொந்தரவு இன்னும் அதிகமாயிடும்.நீ ஜெர்மனி திரும்பிற வரைக்கும் யாரோடையும் எந்த வில்லங்கத்துக்கையும் போகாமலிருக்கிற வழியைப்பாரு மகன். blquote

என்றாலும் இந்த அராஜகத்தை அவனால் சகிக்கமுடியாமலிருந்தது. ஏற்கெனவே அடக்குமுறைக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறோமென்றால் சமாதானம் பண்ணவென்று வந்த இந்திய அரசின் ராணுவம் பண்ணும் அத்துமீறல்கள் சகிக்கமுடியாததாயிருந்தது. அவர்கள் எங்களைக் குறைந்த பட்ஷம் உணர்ச்சிகளும், சுரணையுமுள்ள மனிதர்களாகவாவது கருதுகிறார்களா ? இதை எண்ண எண்ண த்திரம் த்திரமாய் வந்தது

‘baிவகுமாரனுக்கு.

தாய் சொன்னதைக் கேட்பது மாதிரியிருந்த சிவகுமாரன் யாரும் அறியாமல் இங்கே இந்தியச்சிப்பாய்கள் செய்கிற அத்துமீறல்கள் எல்லாவற்றையும் தான்கண்டபடியே ங்கிலத்தில் எழுதி அவர்களது அச்சுவேலி முகாமின் முன்னே வைத்திருந்த – முறைப்பாடுகள், லோசனைகள் – பெட்டிக்குள் போட்டுவிட்டான்.

அன்றிலிருந்து அவர்கள் வளவுக்குள் படையினன் ஒருவன் கூடவராதது கண்டு ‘எனது முறைப்பாடு நல்லவேலை செய்யுது ‘ என்று உள்ளூர மகிழ்ந்துகொண்டிருந்தான். மூன்று நாட்கள் கழித்து வீட்டுவாசலில் ஒரு ராணுவ வண்டிவந்து நிற்க வளவுக்குள் திபுதிபுவென பூட்ஸ்கால்கள் ஓடிவரும் சப்தம்.

வந்தவர்கள் வீட்டுக்கதவைப் படபடவென அறைந்தார்கள். அவன் அப்பா அம்மா சகோதரிகள் அனைவருமே பயத்தில் உறைந்துபோயிருக்க சிவகுமாரன் வேறேதும் செய்யத்தோன்றாமல் கதவைத்திறந்தான்.

முதலில் நுழைந்த முரட்டுச்சிப்பாய் கேட்டான். ‘இங்கே சிவகுமாரன் என்கிறது யார் ?”

“ ஏன் நான்தான். ”

சொன்னவாய் மூடுப்படவில்லை. பளாரென்று அறை ஒன்று முதலில் கன்னத்தில் வீழ்ந்தது. அவன் தன்னைச் சுதாகரிப்பதற்குள் இரண்டாவது அறை மறுகன்னத்தில் விழுந்தது. சிவகுமாருக்கு சூரியனே கீழே இறங்கி வந்துவிட்டது போல் கண்களில் பிரகாசம் தெரிந்தது.

‘ உன்னை விசாரணைக்காக கைது செய்கிறோம்.”

உடுப்பைக்கூட மாற்றிக்கொள்ள அவகாசம் கொடாது அவன் சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்துப் போனார்கள்.

“ ஐயோ என்ரை பிள்ளை அப்பாவி…. இப்ப இரண்டு கிழமையாத்தான் ஜேமனியால வந்து நிக்குது…. ஐயோ இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா ? ” என்றுகொண்டு பின்னால் குளறிக்கொண்டு ஓடிய தாயை எட்டி உதைத்து நிலத்தில் வீழ்த்தினான் ஒரு சிப்பாய். எல்லாவற்றையும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த அப்பாவுக்கும் போகும்போது பிடரியில் அறைந்துவிட்டுப் போனான் இ

‘fdனொருவன்.

முகாமை அடைந்ததும் சிவகுமாரனை தரையில் வீசினார்கள்.

“ நீ புலிக்கு வேலைபாக்கிற உளவாளிதானே ? ”

“ இல்லை ஐயா…. நான் யாருக்கும் உளவாளியில்லை.”

“ இத்தனை நாளா எங்கடா இருந்தாய் ?”

“ நான் வெளிநாட்டில இருந்தேன். ”

“ எதுக்கடா போனே வெளிநாடு ? ”

“ இங்கை போர் தொடங்கிவிட்டதாலே மேலை படிக்கவோ பிழைக்கவோ இயலாமலிருந்துது…. அதுதான் ஜெர்மனிக்குப் போனனான். ”

“ ஜெர்மனியில புலிகளுக்குத்தான் வேலை செய்திருக்கிறாய் ? ”

“ இல்லை. ”

“ உண்மைசொல்லாட்டி வெளியேபோக முடியாது. இங்கேயே கொண்டு புதைச்சுப்போடுவன் …. உன்னைப்பற்றிய எல்லாத் தகவல்களும் எங்களிட்டை இருக்கு, ஏமாற்றிவிடலாமென்று மட்டும் எண்ணவேண்டாம். எந்த சிட்டியிலடா இருந்தாய் அங்கே ? ”

“ பெர்லினிலை ஐயா.”

“ அங்கே புலியளுக்காகப் பிரசாரம் பண்ணியிருக்கிறாய் , காசு சேர்த்திருக்கிறாயென்ன…. ?”

“ இல்லை ஐயா. ”

“ பொய்தானே முழுக்கச் சொல்லுறாய் பன்றிப்பயலே…. ”

பதில் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ஒருவன் அவன் மீது ஒருவாளி தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டினான்.

“ வந்தால் வந்தமாதிரிப் போயிருக்கவேண்டியதுதானே…. கொம்பிளெயினா கொடுக்கிறாய் கொம்பிளெயின் ராஸ்கல் ? ”

கேள்வி முடியமுன் ஒருத்தன் அவன் முகத்தைப்பொத்தி அறைந்தான். உதடுகள் கிழிந்து வாய் உப்புக்கரித்தது. கண்ணுக்கு முன்னே ஒரே வெண்முகில் முகில்கூட்டம் தெரியப் பத்தாயிரம் மீட்டர் உயரத்தில் பறப்பது போலிருந்தது. இருக்கிறேனா இல்லை விழுந்துகிடக்கிறேனா என்று நிதானிக்க முடியாமலிருக்கையில் பூட்ஸ்கால்களால் இருவர் மாறிமாறி மிதித்தனர்.

மயங்கிப்போய் எவ்வளவு நேரம் கிடந்தானோ தெரியாது. புகைமண்டிய அறைக்குள் கிடப் பதைப்போல் இருந்தது.

மெல்ல மெல்ல விழிப்பு வந்தபோது பஞ்சாபி, மராத்தி, இந்தி எல்லாப்பாஷைகளுமே காதில் சேர்ந்து விழ வேறேதோ உலகத்துள் புகுந்துவிட்ட மாதிரியிருந்தது அவனுக்கு. நெஞ்சுக்கூடு வெறுமையாகிவிட்டது போலிருந்தது.

‘தண்ணி தண்ணி” என்று அரற்றினான்.

தண்ணீர் யாரும் தரவேயில்லை. எழும்பியிருக்கப்பார்த்தான். இயலவில்லை. கைகளும் முழந்தாள்களும் பதறின. அப்படியே இறந்துவிட்டால் நல்லதுபோலிருந்தது. நோவும் மனமும் தவிர உடலை உணரமுடியவில்லை. மீண்டும் மயங்கிப்போனான்.

எத்தனை நேரம் கழிந்திருக்குமோ தெரியவில்லை. மீண்டும் பிரக்ஞை பகுதியாக வந்தபோது சேற்றுக்குள் கிடப்பதுபோலிருந்தது. உருண்டுருண்டாவது ஈரமில்லாத பகுதிக்குப்போக முயற்சித்தான். உடம்பு பூரா நொருங்கியிருப்பது போல் வலித்தது. பூட்ஸால் மிதித்த இடங்களும் நிலத்தில் தேய்த்த இடங்களும் எரிவாய் எரிந்தன. குறியும் விதைகளும் பென்டரில் பட்ட இடமெல்லாம் வலிதர இயலாமல் அப்

‘c0டியே முனகிக்கொண்டு படுத்திருந்தான்.

அடுத்த நாளாகியிருக்கவேணும், இரண்டு ஜவான்கன் அவனைக் கக்கத்தில் பிடித்து ஒரு முயல்குட்டியைப்போல அலக்காகத் தூக்கிக்கொண்டுபோய் ஒரு தலையாட்டிமுன்னே நிறுத்தினர்.

தலையாட்டிக்கு ஒரு சீமெந்துப்பையைத் தலையில் கொழுவிக் கழுத்தில் கட்டியிருந்தார்கள். கண்களுக்கான இடத்தில் மட்டும் துளைகள் இடப்படிருந்தன. தலையாட்டி கத்தரிவெருளி நடந்ததுபோல ஒரு Toyota Hiace Van இலிருந்து இறங்கிவந்தான். இறுக்கமான அவனது டிறவுசருள் ஒரு சோடி வளைவான கால்கள் புகுந்திருந்தன. அதே ராஜமுத்திரையுடனான நடை.

சிவகுமாரனுக்கு நொடியில் ளைப் புரிந்துகொண்டதும் தான் எப்படியும் பிழைப்பேன் என்று நம்பிக்கை வந்தது.

‘தேர்தலில் நிற்கப்போகிறானென்றார்களே. அட நாய்ப்பயலே…. இதுவா உனக்கு இங்கே

கிடைத்த இராஜபதவி ? ‘

‘ ஜெர்மனி – பெர்லினின் இருந்தவனாம். எங்கே நல்லாப்பாத்து சொல்லு. இவன் புலி சப்போட்டர்தானே ?”

தலையாட்டி சில விநாடிகள் அவனை உற்றுப்பார்த்தது.

‘எத்தனை தடவைகள் என்னைப்பார்த்து புன்னகைத்திருப்பாய்….எப்படித்தெரியாதென்று

சொல்வதாம் ? ‘

அதன் தலை நிதானமாக மேலும் கீழும் டியது.

இன்றுதான் சிவகுமாரனைப் பற்றிக்கேட்டாலும் அப்படியொரு பேர்வழியை தாம் ஒருபோதும் கைதே செய்யவில்லையென்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்ய அமைதி காத்த அத்தனை

படையினரும் தயார்!

—-…—-

1994.10.22-28 ஒக்டோபர். பாரீஸ் ஈழமுரசு

Series Navigation